கேள்விக்கு என்ன பதில்

பூமியில் வாழும் விலங்குகளில் மனித விலங்கு மட்டும் உயர்ந்தது. அறிவியல் ரீதியாக, மனிதனும் பாலூட்டி வகையை சேர்ந்த ஒரு விலங்குதான், என்ன… இந்த மனித விலங்குக்கு என சில சிறப்புகள் இருக்கிறது. சிந்திக்க தெரியும், பகுத்தரிய தெரியும். ஒரு வாழ்வியல் முறையை கட்டமைத்து வாழத் தெரியும். விலங்குகளுக்கு அப்படியில்லை. அதற்கு எதிர்கால சிந்தனை இல்லை, கடந்த கால தேவையில்லை, நிகழ்காலம் மட்டும்தான் அதன் வாழ்க்கை. மனிதனுக்கு அப்படியில்லை. முக்காலமும் முக்கியம்.