― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்பெரிய திருவடியும், சிறிய திருவடியும் சரண் புகுந்த ஒரே திருவடி!

பெரிய திருவடியும், சிறிய திருவடியும் சரண் புகுந்த ஒரே திருவடி!

- Advertisement -

“நாரதா! இன்று உன்னிடம் ஒருவரும் சிக்கவில்லையா?” என்று கேட்டார் பிரம்மன்.சட்டென எழுந்து கொண்ட நாரதர், “சரி, நான் கிளம்புகிறேன் நாராயண..நாராயண என்றபடி சென்றார். அது துவாரகை.

கிருஷ்ணரின் அரண்மனைக்குள் நுழைய அங்கே கிருஷ்ணரும், கருடனும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்கள் கண்களில் படாமல் என்ன பேசுகிறார்கள் என கேட்டார். “கிருஷ்ணா….என்னை தாங்கள் மனதினுள் நினைக்கக் காரணம் யாதோ?” என்றார் கருடன்.

கிருஷ்ணனுக்கு எங்காவது அவசரமாகக் கிளம்ப வேண்டுமென்றால், தன்னை விட்டால் ஆளில்லை என்ற தலைக்கனமும் அப்போது கருடனுக்கு ஏற்பட்டது. அவரது கர்வம் புரிந்து போயிற்று கிருஷ்ணருக்கு…அவர் கருடனிடம், “உன்னால் ஒரு காரியம் ஆகவேண்டும்.செய்வாயா?”என்றார்.“

கிருஷ்ணா..என்ன இப்படிக் சொல்கிறீர்கள்? கட்டளை இடுங்கள்.செய்து முடிக்கிறேன்.இந்த கருடனால் செய்ய முடியாதது எதுவுமில்லை..என்னால் முடியாவிட்டால் வேறு யாரால் செய்ய முடியும்?” என்று மமதையுடன் சொன்னார்.

மனதிற்குள் சிரித்த கிருஷ்ணர், “கருடா…கொஞ்ச நாளாய் எனக்கு ஒருவரைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. அவரை இங்கு அழைத்து வருவாயா?”

இவ்வளவுதானா? யார் என சொல்லுங்கள்..அவர் எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் துக்கி வருகிறேன்.என்னால் முடியாதா என்ன?” என்று இறக்கைகளை விரித்துக் கொண்டு தயாரானார்.“உனக்கு அனுமனைத் தெரியுமல்லவா? அவரைக் காணத்தான் ஆசைப்படுகிறேன்.

இவ்வளவுதானா? ஒரு வானரத்தை அழைத்து வர இந்த கருடன் தேவையா என்ன?”“கருடா..அனுமனை அவ்வளவு எளிதாய் எடை போடாதே..அவர் மிகுந்த பலசாலி.. பராக்ரமசாலி..ஸ்ரீராம பக்தர்.

அவர் இப்போது கந்தமாதன மலையில் யோக நிலையில் உள்ளார். நீ சென்று அவரிடம் நான் அவரைக் காண விரும்புவதாகச் சொல். அவரும் சம்மதிப்பார். அனுமனை உன் முதுகில் சுமந்து இங்கு அழைத்து வா,” என்றார்.

ம்…போயும் போயும் ஒரு குரங்கை அழைத்து வர என்னை அனுப்புகிறாரே கிருஷ்ணர்’ என்று மனதில் நினைத்தபடி, ‘கண்ணனின் ஆணையாயிற்றே! மறுக்க முடியுமா?’என்று பறந்தார் கருடன்.

ஸ்ரீகிருஷ்ணருக்கும், கருடனுக்கும் இடையே நடந்த உரையாடலை ஒளிந்திருந்து கேட்ட நாரதர், ‘அப்பாடா.. கலகம் மூட்ட கிடைத்தது ஓர் விஷயம்’ என நினைத்து அடுத்த நொடி அனுமனின் முன் போய் நின்றார்.

அனுமனிடம் கருடனைப் பற்றியும், கருடன் தங்களின் தந்தை வாயுவை விடவும் மின்னல், ஒலி இவற்றைக்காட்டிலும் வேகமானவன் என்றும், கிருஷ்ணருக்கு நெருக்கமானவன் என்றும் மமதை கொண்டுள்ளது பற்றியும் கூறி, கருடனுக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்று சொல்லி மறைந்தார்.

மலையில் கண்கள் மூடி யோக நிலையில் அமர்ந்திருந்தார் அனுமன். மனம் ராம்..ராம் என்றபடியே இருந்தது. எதிரில் போய் நின்ற கருடன் மெல்ல கனைத்தார்.கண்களைத் திறந்த அனுமன் எதிரில் கருடன் நிற்பது அவரை வரவேற்றார்.

“வாருங்கள்…தாங்கள் யார் எனத் தெரிந்து கொள்ளலாமா?” என வினவினார். “அட..இதென்ன இப்படிக் கேட்கிறீர்? நான் யாரென்று உமக்குத் தெரியாதா? என்னைத் தெரியாதவர் யார்? நான் திருமாலுக்கு மிகவும் நெருக்கமானவன். என் பெயர் கருடன்.

கண்ணன் தங்களை அழைத்து வரும்படி என்னைப் பணித்துள்ளார். உடனே கிளம்புங்கள்,” என்றார் கர்வத்துடன். “அடேய்..நீ யாராய் இருந்தால் எனக்குஎன்ன?என் ராமனைத் தவிர வேறு யாரையும் காண நான் வர முடியாது.”

என்ன..கண்ணனின் கட்டளையை அவமதிக்கிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார்,” என்றபடி அனுமன் மேல் பாய்ந்தார் கருடன். இருவருக்கும் கடும் யுத்தம் நடந்தது.

தோற்றுப் போனார் கருடன். முகம் தொங்கிப் போக கிருஷ்ணர் எதிரில் வந்து நின்றார் சிரித்தார் கண்ணன். “கருடா என்னாயிற்று? அனுமன் எங்கே?” என அப்பாவி போல் கேட்டார்.“பகவானே! அந்த வானரம் திமிர் பிடித்தது.

ராமனைத் தவிர வேறு யாரையும் பார்க்காதாம்.என்னை அடித்து உதைத்து அனுப்பி விட்டது. மிகவும் பலசாலியாக இருக்கிறது,” என்றார் கருடன். “ஓ அப்படியா..அனுமன் ராம பக்தரல்லவா? அப்படித்தான் இருப்பார்.

மீண்டும் நீ அனுமனிடம் சென்று, துவாரகைக்கு ஸ்ரீராமன் வந்துள்ளார் என்று கூறி அவரை இங்கு அழைத்து வா..,” என்றார். அரை மனதுடன் கிளம்பினார் கருடன். கட்டளையிடுவது கண்ணனாயிற்றே! மறுக்க முடியுமா?“துவாரகைக்கு ராமன் எழுந்தருளியிருக்கிறார். தங்களைக் காண வேண்டுமாம் வாருங்கள்,” என்றழைத்தார்

அனுமனை கருடன். “அப்படியா?தாய் சீதா தேவி வந்திருக்கிறாரா?” “இல்லை.. ஸ்ரீ ராமன் மட்டும்தான் வந்துள்ளார்” “அப்படியானால் நான் வரவில்லை. நான் ஸ்ரீ ராமனை சீதாராமனாகத்தான் காண விரும்புகிறேன். நீங்கள் போகலாம்,” என்றார் அனுமன்.

அனுமன் மீது கோபமாய் வந்தது கருடனுக்கு. வானரத்துக்கு எவ்வளவு திமிர் என்று நினைத்தபடி சென்று, கண்ணனிடம் அனுமனின் பதிலைத் தெரிவித்தார் கருடன்.

ஓ.. அப்படியா சொன்னார் அனுமன். சரி… சீதாதேவியும் வந்திருப்பதாகச் சொல்..புறப்படு,” என்றார். மிகக் கோபமாக வந்தது கருடனுக்கு. நான் யார்? ஸ்ரீமன் நாராயணின் வாகனம். எப்பேர்ப்பட்டவன்?. நான் போய் ஒரு குரங்கை எத்தனை முறை அழைப்பது?” என்று கோபம் முட்டியது. வேறு வழியின்றி மீண்டும் சென்று அனுமனை அழைக்க, பரவசமானார்

அனுமன். “ஆஹா..ஆஹா..என் தாய் சீதையைக் காணப்போகிறேன்..என் சீதாராமனைக் காணப்போகிறேன்,” என்று கைகூப்பி வணங்கி, ‘ராமா… ராமா… சீதா ராமா’ என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். “ம்..என் முதுகில் ஏறி அமருங்கள்…” என்ற கருடனிடம், வேண்டாம்…. நானே வருகிறேன்..,”என்றார் அனுமன்.. “ஹே…நீங்களாய் வருவதா? நீங்கள் அங்கு என்றைக்கு வந்து சேர்வது?நான் வாயுவைவிட வேகமாகப் பறக்கக் கூடியவன்.

என்னைக்காட்டிலும் வேகமாகப் பறக்கக் கூடியவர் ஈரேழு உலகிலும் இல்லை. பேசாமல் என் மீது ஏறிக்கொள்ளுங்கள்,” என்றார் கருடன் கர்வத்தோடு. மறுத்து விட்டார் அனுமன். “சரி…எப்படியோ வந்து சேருங்கள்,” என்று அலட்சியமாய் கண்ணன் இருக்குமிடம் வந்து சேர்ந்தார் கருடன்.கிருஷ்ண பிரபோ..பலமுறை எடுத்துச் சொல்லியும் என் மீது அமர்ந்து வர மறுத்துவிட்டார் அனுமன்.

அவர் தனியாகத்தான் வருவாராம். எப்போது இங்கு வருவாரோ? எத்தனைக் காலம் ஆகுமோ?” என்றார் கருடன் அனுமனின் வேகம் பற்றி தெரியாமல்…!கடகடவவென சிரித்தார் கிருஷ்ணர். அவரைப் புரியாமல் பார்த்தார் கருடன்.“கருடா..அனுமன் இங்கு வந்து ராமனையும் சீதாதேவியையும் தரிசித்துவிட்டு மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் கந்தமாதன மலைக்குத் திரும்பிச் சென்று வெகு நேரமாயிற்று..

நீதான் மிகக் காலதாமதமாய் வந்திருக்கிறாய்,” என்றார்.“என்ன என்ன..அனுமன் வந்து சென்று விட்டாரா..? ஆஹா..இது எப்படி சாத்தியமாயிற்று? என்னைவிட அதி வேகத்துடன் பறக்கக் கூடியவரும் உண்டா என்ன உலகில்? அப்படியிருக்க அனுமனால் எப்படி முடிந்தது?”“கருடா..

நீ அனுமனைக் குறைவாய் மதிப்பிடாதே. நீ வாயுவை விட வேகமாகப் பறக்கலாம். ஆனால் அவர் வாயுவுக்கே புத்திரர். அதனால் உன்னைக் காட்டிலும் வேகமாய் செல்லக்கூடியவரும் உலகில் உண்டு என்பதை உனக்கு உணர்த்தவே இந்த நாடகத்தை நடத்தினேன்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. இனி கர்வம் நீங்கி வாழ்வாயாக..அனுமனை ஏளனமாய்ப் பேசாமல் அவரோடு நட்பு கொள்,” என அறிவுரை கூறினார் கிருஷ்ணர். கர்வம் நீங்கிய கருடன், கிருஷ்ணனை வணங்கினார்.“

கண்ணா ஒரு சந்தேகம்…”“கேள் கருடா..”“ஸ்ரீ ராமனும் சீதாதேவியும் வந்தார்களா? அவர்களைக் காணும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லையே? சிரித்தார் கிருஷ்ணன்.

கருடா..ஸ்ரீராமனாய் நானும், சீதாதேவியாய் சத்யபாமாவும் மாறி அனுமனுக்குக் காட்சி அளித்தோம். உனக்கும் தக்க சமயத்தில் அந்த பாக்கியம் கிட்டும்,” என ஆசிர்வதித்தார் கிருஷ்ணர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version