Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் மஞ்சளால் தூணில் வரைந்த ஓவிய கணபதி! புடைத்தெழுந்த அதிசயம்!

மஞ்சளால் தூணில் வரைந்த ஓவிய கணபதி! புடைத்தெழுந்த அதிசயம்!

kambatha Ganapathi
kambatha Ganapathi

சிருங்கேரியில், ஸ்ரீசாரதாம்பாள் திருக்கோயில் அருகில் இருக்கும் கோயில்களுள் ஒன்று, ஸ்ரீமலஹானிகரேஸ்வரர் திருக்கோயில். இது நடந்து செல்லும் தூரத்திலேயே இருக்கிறது.

மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருக்கோயிலில் குடிகொண்டருளும் சிவபெருமானுக்கு, வருடத்தின் முக்கிய தினங்களில், ஸ்ரீ சிருங்கேரி ஸ்வாமிகள், தம் திருக்கரங்களாலேயே அபிஷேக ஆராதனைகள் செய்வார். இந்த ஆலயத்திலேயே ‘ஸ்தம்ப கணபதி’ சன்னதி அமைந்திருக்கிறது.

ஸ்ரீ தோரண கணபதி சன்னதியும், ஸ்ரீ ஸ்தம்ப கணபதி சன்னதியும் வேறு வேறானவை. ஸ்ரீ தோரண கணபதி, ஸ்ரீ சாரதாம்பிகை திருக்கோயிலில் குடி கொண்டுள்ளார். இவர் ஸ்தம்ப கணபதி. சிருங்கேரிக்குச் செல்பவர்கள் யாராயினும், ஸ்ரீ ஸ்தம்ப கணபதியை தரிசிக்காமல் செல்வதில்லை.

Sringeri

ஸ்ரீ ஸ்தம்ப கணபதியை தரிசிக்கவென்றே, இந்தத் திருக்கோயிலுக்கு வருபவர்கள் உண்டு.

இந்த கணபதி, இந்தத் திருக்கோயிலில் குடிகொண்ட விருத்தாந்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 24வது ஆசார்யராகிய ஸ்ரீஅபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள், இந்தத் திருக்கோயிலில் வழிபாடு செய்யும் போது, கணபதியின் திருவுருவம் இங்கு இல்லாததைக் கண்டு, திருக்கோயிலின் முன் புறத்தூண் ஒன்றில், மஞ்சளால் கணபதி திருவுருவத்தை வரைந்து வழிபட்டார்.

sthambhatha Ganapathi

ஆனைமுகன், ஆச்சார்யரின் வழிபாட்டினால் அகமகிழ்ந்து, அவர் வரைந்த வண்ணமே அங்கு குடிகொள்ளத் திருவுளம் கொண்டான். ஒவ்வொரு நாளும் அவர் வரைந்த அந்தத் திருவுருவம், தூணிலிருந்து புடைத்து எழும்பலாயிற்று.
ஸ்ரீ ஆச்சாரியரின் தபோபல மகிமை!!..

தூணின் மற்ற பகுதிகள் கெட்டியாகவே இருக்க, இந்த புடைப்புச் சிற்பம் மட்டும், தட்டினால், ஒலி எழுப்பலாயிற்று. அதாவது, சிற்பத்தின் உட்புறம், திடமாக இல்லாமல், வெளியாக இருந்தது.

இந்தத் தூணைச் சுற்றி, ஒரு சன்னதி எழுப்பப்பட்டது. ஸ்தம்ப கணபதிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறலாயின. ஸ்ரீசாரதா பீடத்தின் ஆச்சார்யர்கள் ஒவ்வொருவரும், இந்தத் திருக்கோயிலுக்கு வருகை தரும் சமயத்தில், ஸ்ரீஸ்தம்ப கணபதிக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.

கன்னடத்தில், ‘கம்பத கணபதி ‘ (கம்பம்= தூண்) என்றழைக்கப்படும் ‘ஸ்தம்ப கணபதி

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version