Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் விநாயகர் சதுர்த்தி: வழிபட உகந்த மலரும், உகந்த திதியும்..!

விநாயகர் சதுர்த்தி: வழிபட உகந்த மலரும், உகந்த திதியும்..!

chekatti vinayakar
chekatti vinayakar

மகா கணபதிக்கு உகந்த மலர்கள்.

ஆனை முருகனுக்கு அறுகைப் போலவே பிடித்தமானவை என்று. இருபத்தோரு மலர்களைச் சொல்கிறது கணபதி பூஜா மந்திரம்.

அந்தப் பூக்கள்: புன்னை, மந்தாரை, மகிழம்பூ. பாதிரி, தும்பை, ஊமத்தை, சம்பங்கி, மாம்பூ. தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு. செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், அரளி, குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம்பூ. கண்டங்கத்தரிப்பூ ஆகியவை.

அருணாச்சலேஸ்வரர் அருள்பாலிக்கும் திருவண்ணாமலையை வலம் வரும் வழியில், ஓர் அதிசய விநாயகர் காணப் படுகிறார். ‘தலையைத் திருக தனம் கொடுக்கும் விநாயகர்’ என்பது இவரது திருப்பெயர். இந்த விநாயகரின் தலையை தனியாக எடுக்கலாம். விநாயகரின் தலையை தனியாக எடுத்தால் உள்ளே கையளவு சுரங்கம் உண்டு. அந்தச் சுரங்கத்தில் காசுகளைப் போட்டு மீண்டும் எடுத்துக்கொண்டால் செல்வம் சேரும் என்ற ஐதிகம் நிலவுவதாகச் சொல்கின்றனர்.

என்ன திதிக்கு எந்த கணபதி?

குறிப்பிட்ட திதி வரும் தினங்களில் கணபதியைக் குறிப்பிட்ட வடிவில் வழி படுவது கூடுதல் பலன் தரும் என்பது. புராணங்கள் கூறும் ஐதிகம். அவை:

அமாவாசை திருத கணபதி

பிரதமை பால கணபதி

த்விதியை தருண கணபதி

திருதியை பக்தி கணபதி

சதுர்த்தி வீர கணபதி

பஞ்சமி சக்தி கணபதி

சஷ்டி த்விஜ கணபதி

சப்தமி சித்தி கணபதி

அஷ்டமி உச்சிஷ்டகணபதி

நவமி விக்கினகணபதி

தசமி ஷிப்ர கணபதி

ஏகாதசி ஹேரம்பகணபதி

த்வாதசி லக்ஷ்மி கணபதி

த்ரையோதசி மகா கணபதி

சதுர்த்தசி விஜய கணபதி

பௌர்ணமி திருத்யகணபதி

சீர்காழியில் இருந்து திருநாங்கூர் செல்லும் பாதையில் உள்ள திருமணிக் கூடம் என்னும் வைணவப் பதியில் உள்ள இம்மூர்த்தி, சுயம்பு வடிவாய்த் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். இந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்யப் பெறும் நீர், கீழே வழிந்தோடாமல் சிலையின் உள்ளே சென்று விடுவதாகக் கூறப்படுகிறது.

திருச்சி மணச்சநல்லூரிலிருந்து பத்து கி.மீ. தொலைவிலிருக்கும் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத் தலத்தில் உள்ள எமன் கோயிலின் நுழைவாசலுக்கு முன், விநாயகர் தெற்குதிசை நோக்கி நின்ற நிலையிலிருக்கிறார்.

இவர், இடது காலை ஊன்றி வலது காலைத்தூக்கி உதைக்கும் நிலையில் உள்ளார். அதாவது தெற்கு திசையில் உள்ள எமன் இங்கு வந்தால் எதிர்ப்புத் தெரிவிக்க, உதைக்கும் தோற்றமாம்.

ராமபிரான் தலைமையில் 4000 முனிவர்கள் அசுவமேதயாகம் இயற்றிய போது விநாயகரை வழிபட மறந்தமையால் இடையூறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் விநாயகரை வழிபட, யாகம் நிறைவுபெற்றது. யாகத்தில் விநாயகர் தாமும் ஒருவராக கலந்து கொண்டமையால் 4001 விநாயகர்’ எனப் பெற்றார்.

ஆனைமுகனுக்கு சுடச்சுட அப்பம்’

கேரளாவில் கொட்டாரக் கரைசிவன் கோயிலுக்கு சற்று தொலைவில் மணிகண்டேஸ்வரம் கோவில் உள்ளது. இக்கோயிலில் ‘உன்னியப்பம்’ எனும் பிரசாதம் விநாயகர் முன்னிலையிலேயே தயாரிக்கப்பட்டு உடனுக்குடன் சுடச்சுட அவருக்கு நைவேத்தியம் செய்யப் படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version