Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் இந்த இரண்டையும் அடிப்படையாக கொண்டவனே இந்தியன்: ஆச்சார்யாள் அருளுரை!

இந்த இரண்டையும் அடிப்படையாக கொண்டவனே இந்தியன்: ஆச்சார்யாள் அருளுரை!

நமது ஸித்தாந்தத்தில் உள்ள அடிப்படைத் தத்துவங்கள் இரண்டு. அவை, “ஈச்வரன், தர்மம்” என்பவை. இந்த இரண்டையும் நமது ஸித்தாந்தத்திற்கு அடிப்படைகளாய் வைத்துக்கொள்ளவிடில் இந்தியர்கள் என்று கூறிக்கொள்வதற்கே நமக்கு அருகதையில்லை. ஈச்வரந்தான் உலகை இயக்குபவன் என்பது நம் சாஸ்திரங்களின் முடிவு.

சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளவை உலக நடவடிக்கையைப் பொருத்தே இருக்கின்றனவே ஒழிய அவை அதற்கு எதிர்மாறானவை அல்ல என்று நாம் பார்க்கலாம்.

எந்த ஒரு ஸ்தாபனத்தையும் ஏற்படுத்துவதற்கு அதனை ஏற்படுத்துபவர் என்று ஒருவர் வேண்டும். அது நன்றாக இயங்குவதற்குச் சில நியமங்கள் இருக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, அதைப் பார்த்துக் கொள்வதற்கு ஓர் ஆள் வேண்டும். அப்போதுதான் அந்த ஸ்தாபனம் நன்கு இயங்கும். இவ்வுதாரணத்தை நாம் உலகத்தின் விஷயத்திலும் எடுத்துக்கொள்ளலாம்.

உலகைப் படைத்து மற்றும் வேண்டிய சமயங்களில் அதை காக்க ஒருவன் இருக்க வேண்டும். இத்தகைய ஒருவர் இருந்தால்தான் உலகம் சரியாக இயங்கும்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version