அம்பிகையின் மகிமை – 1
நமாமி யாமினீநாத லேகாலங்க்ருத குந்தலாம் |
பவானீம் பவஸந்தாப நிர்வாபண ஸுதாநதீம் ||
அம்பிகையைப் போற்றும்பொழுது அவளின் உருவத்தை எப்பேற்பட்டதாகக் கருத வேண்டும்? “அம்பிகையைப் பூஜித்து நாம் எவ்விதமான பலத்தைப் பெறலாம்” என்பது முன் சொல்லப்பட்ட ச்லோகத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அம்பிகைக்கு மாலை, வளையல் போன்ற பல அலங்காரங்கள் இருந்தாலும் ஒரு அலங்காரம் விசேஷமாக இருக்கிறது. அது எது என்ற கேள்விக்கு பதிலாக
“யாமினிநாத லேகாலங்க்ருத குந்தலாம்” என்று ச்லோகத்தில் உள்ளது.
“யாமினீநாத” என்றால் சந்திரன். ‘லேகா’ என்றால் கலை. ஆதலால் “யாமினீநாத லேகாலங்க்ருத குந்தலாம்” என்பதற்கு சந்திர கலையால் அழகுபடுத்தப்பட்ட முடியுள்ளவள் என்பது பொருள்.
இந்த ஆபரணத்தின் விசேஷம் என்ன? அம்பிகையின் முடியில் உள்ள சந்திரனின் கருத்து: சந்திரன் ஒளி வீசுகிறான். அவ்வகையிலேயே ஞானமும் ஒளி வீசுகிறது.
ஆதலால் அம்பிகை தலையில் சந்திரனை வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதற்கு அவள் ஞானத்துடன் இருக்கிறாள் என்பது கருத்து.
இப்படி உண்மையில் இருந்தாலும் சகுண உபாசனை (குணங்களுடன் இருக்கும் இறைவனை உபாசிப்பது) செய்யும்பொழுது அவளை தலையில் சந்திரனை வைத்திருக்கும் வகையில் சிந்திப்பது அவசியம்.
சந்திரனைத் தலையில் வைத்திருப்பதன் கருத்து, தலைசிறந்த ஞானத்துடன் இருப்பதாகும்.
தமிழில் மதி என்பது அறிவையும், சந்திரனையும் குறிக்கும் சொல் என்பது குறிப்பிடத்தக்கது.