― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்திருவாதிரை ஸ்பெஷல்: நடராஜர் பத்து!

திருவாதிரை ஸ்பெஷல்: நடராஜர் பத்து!

- Advertisement -
uthirakosamangai maragatha nataraja7

நடராஜப்பத்து !

மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீமறைநான்கின் அடிமுடியும்நீமதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீமண்டலமிரண்டேழும்நீ,பெண்ணும்நீ ஆணும்நீ, பல்லுயிர்க்குயிரும்நீ,பிறவும்நீ ஒருவநீயே,பேதாதிபேதம்நீ பாதாதிகேசம்நீபெற்றதாய் தந்தைநீயே,பொன்னும் நீ பொருளும்நீ யிருளும்நீஒளியும்நீ போதிக்கவந்தகுருநீ,புகழொணாக் கிரகங்க ளொன்பதும்நீயிந்தபுவனங்கள் பெற்றவனும்நீஎண்ணரிய சீவகோடிகளீன்ற வப்பனே என்குரைகளார்க் குரைப்பேன்,ஈசனே சிவகாமி நேசனே, யெனையீன்றதில்லைவாழ் நடராசனே. 1

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கைசிவகாமியாட,மாலாட நூலாட மறையாட திறையாடமறைதந்த பிரம்மனாட,கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,குஞ்சர முகத்தனாட,குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாடகுழந்தை முருகேசனாட,ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டுமுனியட்ட பாலகருமாட,நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட,வினையோட உனைப்பாட யெனைநாடியிதுவேளைவிருதோடு ஆடிவருவாய்ஈசனே சிவகாமி நேசனே, யெனையீன்றதில்லைவாழ் நடராசனே. 2

கடலென்ற புவிமீதில் அலையென்றவுருகொண்டு கனவென்ற வாழ்வைநம்பிக்,காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலேகட்டுண்டு நித்த நித்தம்,உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடிஓயாமலிரவு பகலும்,உண்டுண் டுறங்குவதைக் கண்டதேயல்லாதுஒருபயனடைந்திலேனைத்,தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்தாபரம் பின்னலிட்டுத்,தாயென்று சேயென்று நீயென்று நானென்றுதமியேனை யிவ்வண்ணமாய்இடையென்று கடைநின்று ஏனென்று கேளாதிருப்பதுன் னழகாகுமோ,ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்றதில்லைவாழ் நடராசனே. 3

பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணந்தம்பனம் வசியமல்ல,பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேசமதுவல்ல சாலமல்ல,அம்பு குண்டுகள் விலக மொழியுமந்திரமல்லஆகாய குளிகையல்ல,அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல,அரியமோ கனமுமல்ல,கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிசி,கொங்கணர் புலிப்பாணியும்,கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாங்கூறிடும் வைத்தியமுமல்ல,என்மனதுன் னடிவிட்டு நீங்காது நிலைநிற்கஏதுளது புகலவருவாய்ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்றதில்லைவாழ் நடராசனே. 4

நொந்துவந்தேனென்று ஆயிரஞ் சொல்லியும்செவியென்ன மந்தமுண்டோ ,நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ ,சந்தமுந் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்தளராத நெஞ்சமுண்டோ ,தந்திமுகனறு முகன் இருபிள்ளை யில்லையோ
தந்தைநீ மலடுதானோ,விந்தையும் சாலமும் உன்னிடமிருக்குதேவினையொன்று மறிகிலேனே,வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதேவேடிக்கையிது வல்லவோ,இந்தவுல கீரேழு மேனளித்தாய் சொல்லும்இனியுன்னை விடுவதில்லை,ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்றதில்லைவாழ் நடராசனே. 5

வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்வாஞ்சை யில்லாத போதிலும்,வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்வஞ்சமே செய்த போதிலும்,மொழியெகனை மொகனையில் லாமலேபாடினும் மூர்க்கனே முகடாகினும்,மோசமே செய்யினும் தேசமேகவரினும்முழுகாமியே யாகினும்,பழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோபார்த்தவர்கள் சொல்லார்களோ,பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீபாலனைக் காக்கொணாதோ,எழில்பெரிய அண்டங்க ளடுக்கா யமைத்தநீயென்குறைகள் தீர்த்தல் பெரிதோ,ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்றதில்லைவாழ் நடராசனே. 6

அன்னை தந்தைக ளென்னை யீன்றதற்கழுவனோ அறிவிலாத தற்கழுவனோ,அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோஆசை மூன்றுக் கழுவனோ,முன்பிறப் பென்னவினை செய்த னென்றழுவனோஎன்மூட வறிவுக் கழுவனோ,முன்னிலென் வினைவந்து மூளுமென்றழுவனோமுத்திவரு மென்றுணர்வனோ,தன்னைநொந் தழுவனோ உன்னை நொந்தழுவனோ தவமென்ன வென்றழுவனோ,தையலர்க் கழுவனோ மெய்வளர்க் கழுவனோதரித்திர திசைக்கழுவனோ,இன்னமென்னப் பிறவி வருமோ வென்றழுவனோ யெல்லாமுரைக்க வருவாய்,ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்றதில்லைவாழ் நடராசனே. 7

காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோகன்னியர்கள் பழிகொண்டனோ,கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ,தாயாருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ,தந்தபொரு ளிலையென்றனோ,தானென்று கெர்வித்துக் கொலைகளவுசெய்தனோ தவசிகளை யேசினனோ,வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ,வானவரைப் பழித்திட்டனோ,வடவுபோலப் பிறரைச் சேர்க்கா தடித்தனோவந்தபின் என் செய்தனோ,ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோஎல்லாம் பொறுத்தருளுவாய்,ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்றதில்லைவாழ் நடராசனே. 8

தாயா ரிருந்தென்ன தந்தையு மிருந்தென்னதன்பிறவியுறவு கோடி,தனமலை குவித்தென்ன, கனபெய, ரெடுத்தென்ன, தாரணியையாண்டு மென்ன,சேயர்களிருந் தென்ன குருவா யிருந்தென்னசீடர்களிருந்து மென்ன,சித்துபல கற்றென்ன, நித்தமும் விரதங்கள்செய்தென்ன நதிகளெல்லாம்,ஓயாது மூழ்கினும் என்னபலன் எமனோலைஒன்றைக் கண்டு தடுக்க,உதவுமோ இதுவெலாம் சந்தையுற வென்றுதான் உன்னிருபாதம் பிடித்தேன்,யார்மீது வுன்மன மிருந்தாலு முன்கடைக்,கண்பார்வை யதுபோதுமே,ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்றதில்லைவாழ் நடராசனே. 9

இன்னமுஞ் சொல்லவோ உன்மனங்கல்லோஇரும்போ பெரும்பாறையோ,இருசெவியு மந்தமோ கேளாது அந்தமோஇதுவுனக் கழகுதானோ,என்னென்ன மோகமோ இதுவென்ன கோபமோஇதுவேவுன் செய்கைதானோ,இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோஆனாலும் நான் விடுவனோ,உன்னைவிட் டெங்கு சென்றாலும் விழலாவனோநான் உனையடுத்துங் கெடுவனோ,ஓகோவிதுன் குற்றமென் குற்ற மொன்றுமிலையுற்றுப்பார் பெற்றவையா,என்குற்ற மாயினும் உன்குற்ற மாயினும்இனியருளளிக்க வருவாய்,ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்றதில்லைவாழ் நடராசனே. 10

சனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய் குருசந்திரன் சூரியனிவரை,சற்றெனக் குள்ளாக்கி ராசிபனி ரெண்டையும்சமமாய் நிறுத்தியுடனே,பனியொத்த நட்சத்திரங்க ளிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால்,பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும்வெட்டிப்பலரையும் அதட்டியென்முன்,கனிபோலவே பேசிக் கெடுநினைவு நினைக்கின்றகசடர்களையுங் கசக்கிகர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்குத்தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கிஇனியவள மருவுசிறு மணவை முனுசாமி யெனையாள்வதினி யுன்கடன்காண்ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்றதில்லைவாழ் நடராசனே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version