தலை திவசம் செய்யும் முன் சுப காரியங்கள் செய்யலாமா?

மறைந்த முன்னோர்களுக்கு செய்யப்படுவது திவசம். இந்த திவசம், திதி இதைச் செய்வதால் புண்ணியம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறந்தவர்களுக்கு நாம் சிராத்தம் செய்கிறபோது,
அவர்கள் மூன்று உருவில் இருக்கிறார்கள். ஒன்று ஆதித்ய ரூபம், இரண்டாவது ருத்ர ரூபம், மூன்றாவது வஸு ரூபம். சிரத்தையோடு செய்யப்படுவதே சிராத்தம். இதைத்தான் திவசம், திதி என்றெல்லாம் சொல்கிறோம்.
இது ஒரு பண்டிகை அல்ல. இதை மிகவும் விமரிசையாகச் செய்யக் கூடாது. ஆனால் திவசம் செய்வது நம் கடமை என்றாகிறது. இப்போது கேள்வி. தலைதிவசம் கொடுப்பதற்கு முன் வீட்டில் சுபகாரியங்கள் செய்யலாமா என்பதுதான். இதில் செய்யலாம் என்கிறார்கள் ஒரு பிரிவினர், செய்யக் கூடாது என்கிறார்கள் மறுபிரிவினர். சரி… இதற்கெல்லாம் விடையளிக்கும் உதிதிரகாமிகம் என்ன சொல்கிறது?