8 கைகளில் 8 ஆயுதங்களுடன் எம்பெருமானை அட்டபுயக்கரத்தில் தரிசிக்கலாம்..

108 திவ்யதேசங்களில் எட்டுக் கைகளுடனும், அவற்றில் 8 ஆயுதங்களுடனுமான
திருக்கோலத்தில் எம்பெருமானை அட்டபுயக்கரம் என்ற தலத்தில் தரிசிக்கலாம்.

காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதியிலிருந்து
சுமார் 2 கி.மீ.  தூரத்தில் இந்த சன்னதி அமைந்துள்ளது. மூலவர்: ஆதிகேசவப் பெருமாள்/ கஜேந்திரவரதன். மேற்கு நோக்கி நின்ற
திருக்கோலம். தாயார்: அலர்மேல் மங்கை/ பத்மாஸனி தாயாராக அருள் பாலிக்கின்றனர்.

கஜேந்திர மோட்சம் இங்கே நடந்ததாக கூறுகின்றனர்.
திருமங்கையாழ்வாராலும், பேயாழ்வாராலும் பாடல் பெற்ற தலம். வைரமேகன் என்னும் தொண்டை நாட்டு மன்னன் தற்போதுள்ள வடிவமைப்பில் இக்கோவிலைக் கட்டினான் என்று அறிய முடிகிறது.
‘மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீண்முடி மாலை வயிரமேகன் தன்வலிதன் புகழ் சூழ்ந்த கச்சி அட்ட புயகரத்து ஆதி தன்னை’ என்ற திருமங்கையாழ்வாரின் பாடலாலும் இதை உணரலாம்.

IMG 20220618 WA0044 - Dhinasari Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Latest Posts

spot_imgspot_img

Follow Dhinasari on Social Media

19,100FansLike
380FollowersFollow
75FollowersFollow
0FollowersFollow
3,950FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-