ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் பெளர்ணமி திதியை குரு பூர்ணிமா என கொண்டாடப்படுகின்றனர். ஆடி கர்கடகம் மாதம் பிறக்க சில நாட்களே உள்ளதால் அதன்படி இன்று 2022, ஜூலை 13ம் தேதி குரு பூர்ணிமா கொண்டாடப்படுவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
குரு என்பவர், நமது அறியாமையை நீக்கி, ஞானத்தையும் அறிவையும் பெற வழி செய்பவர். இந்நாளில் குருவை வணங்கி வாழ்த்துகின்றனர். அப்பேற்பட்ட குருவை வணங்கும் விதமாக குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. குருவுக்கெல்லாம் குருவாக இருக்கும் வியாசர், தட்சிணா மூர்த்தி, முருகப் பெருமான் என குருக்களை வழிபடுவது வழக்கமாக நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் 2022 ம் ஆண்டு குரு பூர்ணிமாவில் 4 மிகவும் மங்களகரமான ராஜயோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்கள் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். அதிகப் பணமும், வேலையில் முன்னேற்றமும் அடைவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதேபோல் பூர்ணிமா 2022 அன்று செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் சுப ஸ்தானத்தில் உள்ளன. மேலும் இன்றைய தினம் புதன், சூரியன், சுக்கிரன் ஆகிய மூன்றும் ஒரே ராசியில் அமர்கின்றன. புதன், சூரியன், சுக்கிரன் ஒரே ராசியில் இருந்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போவது நிச்சயம். எனவே அந்த மூன்று ராசிக்காரர்கள் ரிஷபம் சிம்மம் கன்னி என ஜோதிட ரீதியாக கணிக்கப்பட்டுள்ளது.
ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு குரு பூர்ணிமா யோகம் மிகவும் சாதகமாக அமையும். பணம் சம்பாதிப்பார்கள். திடீரென்று எங்கிருந்தோ நிறைய பணம் கிடைக்கும். நீண்ட நாளாக கைக்கு வராத பணம், எதிர்பாராத வகையில் வந்து சேரும். வியாபாரிகளுக்கும் லாபம் கிடைக்கும். பேச்சு சாதுர்யத்தினால் பல காரியங்களை சாதிப்பீர்கள். அந்தஸ்தையும் கௌரவத்தையும் தரும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கும் குரு பூர்ணிமா மிகவும் நன்மை தரும். பண விஷயத்தில் அதிக லாபம் அடைவார்கள். எங்கிருந்தோ பணம் கிடைப்பதைத் தவிர, வருமானத்திற்கு நிரந்தர உயர்வு இருக்கும். சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். வணிகர்கள் பெரிய அளவில் ஆர்டர்களைப் பெறலாம். வேலையில் வெற்றி பெறுவீர்கள்.
கன்னி: 2022-ம் ஆண்டு குரு பூர்ணிமாவில் உருவாகும் ராஜயோகம் கன்னி ராசியினருக்கு வரப்பிரசாதமாக அமையும். அவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவையும் நடக்கலாம். வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். ஒரு புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் வெற்றி கிடைக்கும். அது உங்கள் வியாபார வெற்றிக்கு மிகவும் நன்மை பயக்கும். என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.