spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்இன்று ஆடிமாத பிறப்பு தட்சிணாயன புண்ணிய காலம் துவக்கம்..

இன்று ஆடிமாத பிறப்பு தட்சிணாயன புண்ணிய காலம் துவக்கம்..

- Advertisement -

இன்று ஆடி மாத பிறப்பு , தக்ஷிணாயன புண்ணிய கால பிறப்பு சூரியன் தனது பாதையை தென் புறத்தை நோக்கி செலுத்த ஆரம்பிக்கும் நாளாகும்.

வடக்கு கிழக்கு திசையில் இருந்து சூரியனின் தென் கிழக்குப்பயணத்தை, ‘தட்சிணாயன புண்ணிய காலம்’ என்று குறிப்பிடுவர்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சூரியன் தென் பகுதியுலும் வட பகுதிலும் வானில் காணப்படுவதே இந்த பக்க்ஷ மாறுதல் எனப்படுவது. இன்றையில் இருந்து ஆறுமாதங்கள் “பிதுர் பக்ஷம் ” என அழைக்கப்படுகிற புண்ணிய மாதங்கள்

இன்று சூரியன் தெற்கு பகுதியான “பிதுர் உலகின் ” பக்கமாக பிரயாணத்தை தொடங்குவதால்! தென் புலத்தான் என்று யமனுக்கு பெயர்! அந்த உலகை தனது கதிர்க்காளால் சகதியூட்ட போக்கிற சூரியனை இன்று வழிபாட்டு நமது உடல் செயல் மற்றும் சுகங்களை அளிக்கும் பித்துர்களை வணங்கி போற்றுவோம்!
இந்த ஆறுமாதங்களில் நிறைய இறை வழிப்பாட்டு உற்சவங்கள் நடைபெறும் ஒவ்வொரு மாதங்களிலும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு ! இந்த தக்ஷிணாயனதில் “சாதுர் மாச்யம் ” எனப்படும் நான்கு மாதங்களில் இந்த இறை வழிபாட்டு திருவிழாக்களும் நிர்ணயக்கப்பட்டு இருக்கின்றன .


இந்த நான்கு மாதங்களில் சன்யாசிகள் “சதுர்மாஸ்ய சங்கல்பம் ” எடுத்துகொண்டு இருப்பார்கள் , சன்யாசிகள் பிதுர் உலகில் , வாரிசு இல்லாத , மிருகங்கள் மற்றும் தாவர பல வித உயிர் இனங்களுக்காக .. இறைவனை வேண்டி தவம் இருக்கும் மாதங்கள் இவை .
நமது பிதுர்களையும் அவர்களுக்கு மேலான தெய்வங்களையும் வணங்கும் நான்கு மாதங்கள் ஆரம்பித்து விட்டன! ஆஷாட (ஆடி ) மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று தொடங்கி கார்த்திகை மாதம் வளர் பிறை ஏகாதசி அன்று முடியும் வரை இந்த அனைத்து திருவிழாக்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன ..

தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் மாதம் ஆடி…!

ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாக தமிழ் விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது.
ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.

தட்சிணாயன காலத்தில் பகலை விட இரவுப் பொழுது கொஞ்சம் அதிகமாக இருக்கும். குளிர்ச்சியான காலமாகவும் தட்சிணாயனம் கருதப்படுகிறது.

எனவே அதன் தொடக்க நாளான ஆடி மாதம் முதல் நாளன்று வீடுகளில் தேங்காய்ப்பால் செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்வது வழக்கம். ஆடி மாதம் முதல் நாளில் புதுமணத் தம்பதியரை மாமனார் இல்லத்துக்கு அழைத்து, அவர்களுக்கு வெள்ளிப் பாத்திரத்தில் தேங்காய்ப்பால் வழங்கும் வழக்கமும் உண்டு.பொதுவாக, காலைப் பொழுதை விட மாலைப் பொழுது விழாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அவ்வாறே, தேவர்களின் மாலைப் பொழுது தட்சிணாயன காலத்தில் வருவதால், பெரும்பாலான பண்டிகைகள் தட்சிணாயன காலத்தில் இருப்பதைக் காணலாம்.

ஆடி மாதத்திலே ஆடிப் பூரம், ஆடிப் பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், வரலட்சுமி விரதம் ஆகியவை எல்லாம் மிகவும் விசேஷமானவையாகும். குறிப்பாக அம்பிகை, மகாலட்சுமி,
ஆண்டாள் போன்ற பெண் தெய்வங்களுக்குரிய மாதமாக ஆடி மாதம் போற்றப்படுகிறது.அதைத் தொடர்ந்து ஆவணி மாதத்தில், விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி, ஐப்பசி மாதத்தில் தீபாவளி, கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபத் திருவிழா, கந்த சஷ்டி, மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என இப்படிப் பலப்பல முக்கியமான பண்டிகைகள் யாவும் தட்சிணாயனக் காலத்துக்குள் வருவதைக் காணலாம்.

வேதம் பயிலத் தொடங்குதலாகிய உபாகர்மாவும், காயத்ரி ஜபமும் தட்சிணாயன காலத்தில் ஆவணி அவிட்டத்தை ஒட்டி அனுஷ்டிக்கப்படுகின்றன.பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வதற்கு உகந்த காலமான மகாளய பட்சமும் தட்சிணாயன காலத்தில் புரட்டாசி மாதத்தில் வருவதைக் காண்கிறோம். புரட்டாசி சனிக்கிழமைகள் திருமலையப்பனுக்கு மிகவும் உகந்த நாட்களாக இருப்பதையும் காண்கிறோம்.

தேவர்களின் இரவுப் பொழுதான தட்சிணாயனத்தின் கடைசி மாதமான மார்கழி தேவர்களின் பகலுக்கு முந்தைய காலமான பிரம்ம முகூர்த்த காலம் (பின்மாலைப் பொழுது) ஆகும். பிரம்ம முகூர்த்தம் இறைவழிபாட்டுக்கு உகந்த காலமாக இருப்பதால், மார்கழி மாதம் முழுக்க முழுக்க இறைவழிபாட்டுக்கு என்றே
அர்ப்பணிக்கப்படுகிறது.

உத்தராயண, தட்சிணாயன காலங்களுக்கு அதிபதிகளான தேவர்கள் உண்டு. அந்த தேவர்களுக்கென்று தனி உலகங்களும் இருப்பதாகச் சாத்திரங்கள் சொல்கின்றன. பகவத் கீதை எட்டாம் அத்தியாயம் இருபத்து நான்காவது ஸ்லோகத்தில்,

“அக்னிர்ஜ்யோதிர: அஹச்சுக்ல:
ஷண்மாஸா உத்தராயணம்
தத்ர ப்ரயாதா கச்சந்தி
ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜனா:”
என்று கண்ணன் குறிப்பிடுகிறான்.

ஒளியின் லோகம், பகல் தேவதையின் லோகம், வளர்பிறை தேவதையின் லோகம்,
உத்தராயண தேவதையின் லோகம் ஆகியவற்றைக் கடந்து செல்லும்
பிரம்ம ஞானிகள் பரப்பிரம்மத்தை அடைகிறார்கள்.
அவர்கள் மீண்டும் வந்து பூமியில்
பிறப்பதில்லை. அடுத்து இருபத்தைந்தாம் ஸ்லோகத்தில்,
“தூமோ ராத்ரி: ததா க்ருஷ்ண:

ஷண்மாஸா தக்ஷிணாயனம்
தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதி:
யோகீ ப்ராப்ய நிவர்ததே”
என்கிறான் கண்ணன். அதாவது,
புண்ணியம் செய்த நல்லோர்கள்

புகையின் லோகம், இரவு தேவதையின் லோகம், தேய்பிறை தேவதையின் லோகம், தட்சிணாயன தேவதையின் லோகம் ஆகியவற்றைக் கடந்து சென்று சந்திர சம்பந்தமான ஒளியை அடைந்து, மீண்டும் பூமியில் வந்து பிறக்கிறார்கள்.இப்படி மீட்சியில்லா வைகுண்டத்தை அடைபவர் உத்தராயண தேவதையின் உலகம் வாயிலாகவும், புண்ணியம் செய்து நல்லுலகம் சென்று மீள்பவர்கள் தட்சிணாயன தேவதையின் உலகம் வாயிலாகவும் பயணிப்பதை இந்த கீதை ஸ்லோகங்கள் மூலம் அறிய முடிகிறது.

சில வைணவத் திருத்தலங்களில் பெருமாளின் கருவறைக்கு உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரு வாசல்கள் இருப்பது வழக்கம். உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும் தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் திறந்திருக்கும்.அதில் மிகவும் பிரசித்தமான உத்தராயண தட்சிணாயன வாசல்களைக் கொண்ட திருத்தலம் திருக்குடந்தை என்னும் கும்பகோணம். கும்பகோணத்துக்கு ‘பாஸ்கர க்ஷேத்திரம்’ (சூரியன் வழிபடும் க்ஷேத்திரம்) என்று பெயர். குடந்தையில் கோவில் கொண்டுள்ள சார்ங்கபாணிப் பெருமாளையும் சக்கரபாணிப் பெருமாளையும் சூரியன் தினந்தோறும் வழிபடுகிறார்.

அவர் வந்து வழிபாடு செய்து விட்டுச் செல்வதற்கு ஏதுவாக, உத்தராயண காலத்தில் சார்ங்கபாணி, சக்கரபாணி சுவாமி திருக்கோவில்களில் கருவறைகளின் உத்தராயண வாசல் திறந்திருக்கும். சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கும் அக்காலத்தில் வடக்கு வாசலான உத்தராயண வாசல் வழியே வந்து வழிபாடு நடத்தி விட்டுச் செல்வார்.அவ்வாறே தட்சிணாயன காலத்தில் தெற்கு நோக்கிப் பயணிக்கும் சூரியன், தெற்கு வாசலான தட்சிணாயன வாசல் வழியே வந்து வழிபாடு நடத்தி விட்டுச் செல்வார்.

இன்றும் இந்த இரண்டு திருக்கோவில்களிலும் உத்தராயண புண்ணிய காலம் தொடங்கும் நாளில் உத்தராயண வாசல் திறக்கும் நிகழ்வும், தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும் நாளில் தட்சிணாயன வாசல் திறக்கும் நிகழ்வும் வெகு விமரிசையாக நடப்பதைக் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,173FansLike
387FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,898FollowersFollow
17,300SubscribersSubscribe