இன்று சரஸ்வதி பூஜை -ஆயுத பூஜை செய்ய நல்ல நேரம்..

images 42 - Dhinasari Tamil

*இன்று அக் 4செவ்வாய்கிழமை சரஸ்வதி பூஜை ( ஆயுத பூஜை ) செய்ய நல்ல நேரம்*

காலை  – 8.00 Am to 9 Am
மதியம் – 4.50 Pm to 5.45 Pm
இரவு – 8.15 Pm to 9.15 Pm

இந்த நேரத்தில் லக்கணங்கள் சுபர் பார்வையுடன் சுபர் சேர்க்கையுடன் செல்கிறது.இது நன்மையைச் செய்யும் என ஜோதிட கணிப்பு கூறுகிறது.

ஆயுத பூஜை இன்று இந்த மந்திரத்தை துதிப்பதன் மூலம் தேவியின் முழுமையான அருளை உடனுக்குடன் பெற முடியும் எனவும் பெரியோர் வேத பண்டிதர்கள் கூறுகின்றனர்.

சக்தியின் வடிவாக இருக்கும் பெண்களை போற்றும் ஒரு சிறந்த விழாவாக நவராத்திரி விழா இருக்கின்றது. இந்த நவராத்திரியில் ஒன்பதாம் நாள் விழா கல்வியின் தெய்வமான சரஸ்வதி தேவிக்குரிய தினமாக உள்ளது.

பொதுவாக இந்த சரஸ்வதி பூஜை தினத்தில் குழந்தைகள் முதன்முதலில் கல்வி மற்றும் புதிய கலைகளைக் கற்கத்தொடங்குவதற்கு ஒரு சிறந்த நாளாக கருதப்படுகின்றது.

இத்தகைய சிறப்பான தினத்தில் நமக்கு ஏற்படுகின்ற சில கஷ்டங்களை தீர்க்க, சரஸ்வதி தேவி கூறிய இந்த மந்திரத்தை எவ்வாறு துதித்து, தேவியின் முழுமையான அருட்கடாட்சத்தை நாம் பெறலாம் என்பதை குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஆயுத பூஜை சரஸ்வதி மந்திரம்

ஓம் மஹாபாதக நாஷின்யை நமஹ

இந்த மந்திரத்தை முதன் முதலில் நவராத்திரி விழா காலத்தில் ஒன்பதாம் நாளாக வருகின்ற “ஆயுத பூஜை” தினமான இன்று துதிக்க துவங்குவது நல்லது.

இன்றைய தினம் காலை எழுந்து, குளித்து முடித்துவிட்டு உடல், மனம், ஆன்ம தூய்மையுடன், உங்கள் வீட்டு பூஜையறையில் சரஸ்வதி படத்திற்கு மல்லிகை பூ சாற்றி, காய்ச்சாத பசும்பால் மற்றும் வெல்லம் கலந்த பொறி நைவேத்தியம் வைத்து, தூப, தீபங்கள் ஏற்றி வைத்து கிழக்கு திசையை பார்த்தவாறு நின்று இந்த மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும்.

108 முதல் 1,008 எண்ணிக்கை வரை மந்திரத்தை உச்சாடனம் செய்தால் சிறந்த பலன் உண்டு. ஆயுத பூஜை அல்லது சரஸ்வதி பூஜை தினத்தன்று தொங்குகின்ற இந்த மந்திர உச்சாடனத்தை அதன் பிறகும் தினமும் 108 எண்ணிக்கையில் துதித்து வரலாம்.

திட சித்தத்துடன் சரஸ்வதி தேவிக்குரிய இந்த மந்திரத்தை துதிப்பவர்களுக்கு உடல், மனம், ஆன்ம ரீதியான பல தெய்வீக ரீதியான மாற்றங்கள் ஏற்படும்.

மந்திரம் உச்சாடனம் செய்கின்ற நபருக்கு வாக்கு சித்தி மிக விரைவில் ஏற்படும்.இந்த சரஸ்வதி தேவி மந்திரத்தை துதிப்பவர்கள் அந்த தேவியின் அன்பிற்கு பாத்திரமாகின்றனர். எனவே சரஸ்வதி மந்திர உச்சாடனம் செய்பவரை எதிர்த்து வாக்குவாதம் புரிபவர்கள் தோற்கும் நிலை உண்டாகும்.இவர்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேச தயங்குவார்கள்.வீண் வம்பு, வழக்குகள் எதுவும் இந்த சரஸ்வதி மந்திர உபாசகனுக்கு ஏற்படாது.எதையும் ஆர்வமுடன் கற்றுக் கொள்ளும் சுறுசுறுப்பு தன்மை உண்டாகும். தங்களுடைய எதிரிகளுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படக்கூடாது.

அதே நேரம் அவர்களின் எதிர்மறை செயல்கள் மட்டுமே வெற்றி பெறாமல் போக வேண்டும் என நினைக்கும் சாத்வீக குணம் கொண்ட நபர்கள் இந்த மந்திரத்தை தாராளமாக துதிக்கலாம்.படைக்கும் தொழிலின் தலைவரான பிரம்மதேவரின் பத்தினியான சரஸ்வதி தேவி பொதுவாக சாந்த குணம் கொண்ட ஒரு தெய்வமாகவே பக்தர்களால் கருதப்பட்டு வழிபடப்படுகிறாள். எனினும் தனது அன்பிற்குரிய பக்தர்களுக்கு தீங்கு செய்ய நினைக்கின்ற சக்திகளை அழித்தொழிக்காமல், அவற்றிற்கு நேர்மறை ஆற்றல் பெருக அருள் செய்யும் தன்மை கொண்ட தெய்வமாக சரஸ்வதிதேவி விளங்குகிறாள்.

சரஸ்வதி தேவியை அனுதினமும் துதிப்பவர்கள் அறிவுக்கூர்மை, சிந்தனைத்திறன், வாக்குவன்மை, திட சித்தம், கௌரவம், புகழ், மக்கள் செல்வாக்கு, அரசர்களும் தலைவணங்கும் ஆற்றல் போன்ற வரங்கள் கிடைக்கப் பெறுவார்கள் என்று ஆன்மீக பெரியோர் கூறுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

spot_imgspot_img

Follow Dhinasari on Social Media

19,077FansLike
380FollowersFollow
78FollowersFollow
0FollowersFollow
4,157FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-
Translate »
Exit mobile version