அண்ணனுக்கும் தம்பிக்கும் உகந்த நாள் இன்று சங்கடஹர சதுர்த்தி கிருத்திகை விரதம் இரண்டும் சேர்ந்து வந்துள்ளது.
அண்ணனுக்கும் தம்பிக்கும் உகந்த நாளான இன்று விரதம் மேற்கொள்வது விசேஷம்.தேய்பிறையில் வரும் சதுர்த்தி சங்கட சதுர்த்தி விரதம் மேற்கொள்வர்.
முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களை நினைவூட்டும் வகையில் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு உகந்த நாளாகக் கருதி விரதம் மேற்கொள்வர்.
சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், கணபதியை வழிபடுவோம்.
கவலைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் ஆனைமுகத்தான்.
குருவார சங்கடஹர சதுர்த்தி
மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி நாள் வரும். இது விநாயகர் வழிபாட்டுக்குரிய அற்புதமான நாள்.
மாதந்தோறும் வருகிற சிவராத்திரி, சிவ வழிபாட்டுக்கு உரியது என்பது போல், சஷ்டியானது முருக வழிபாட்டுக்கு உகந்தது என்று கொண்டாடுவது போல், ஏகாதசி நாளில் மகாவிஷ்ணுவை வழிபடுவது போல், சங்கட ஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவார்கள் பக்தர்கள்.இந்தநாளில், விநாயகர் அகவல் படித்தும் பூஜைகள் மேற்கொள்ளலாம்.
மாலையில், அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, ஆனைமுகனைத் தரிசிப்பது நன்மை பயக்கும். நலம் அனைத்தும் வழங்கும் என்கிறார்கள்.இன்று வியாழக்கிழமை. குரு வாரம். எனவே குருவார சங்கடஹர சதுர்த்தி என்பது ரொம்பவே விசேஷமாகும்.
இந்த நன்னாளில் விநாயகருக்கு கொழுக்கட்டையோ, சர்க்கரைப் பொங்கலோ நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ள்வது சிறப்பம்சமாகும்.காரியத்தில் இருந்த தடைகளையெல்லாம் தகர்ப்பார்; காரியம் அனைத்தையும் வெற்றியாக்கித் தருவார் விநாயகர்.
