October 13, 2024, 11:13 PM
28.8 C
Chennai

மகிமைகள் பல நிறைந்த ஐப்பசி சுக்கிர வார சங்கடஹர சதுர்த்தி..

கணபதியின் 32 முக்கிய வடிவங்களில் சங்கடஹர கணபதியும் ஒருவர் ஆவார். இவர் சங்கடங்களை நீக்குவதால், சங்கடஹர கணபதி என்றழைக்கப்படுகிறார். எளிமையின் வடிவமான விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து காலையும், மாலையும் பூஜிக்க நன்மைகள் யாவும் சேரும் என்பது ஐதீகம்.

என்ன தான் வீட்டில் விதவிதமாக பிள்ளையார் சிலைகள் இருந்தாலும், சங்கடஹர சதுர்த்தி அன்று மஞ்சள் பிள்ளையாரை உருவாக்கி வழிபட்டு, மறுநாள் நீர்நிலைகளில் கரைத்து வந்தால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. அதன்படி நாளை (நவம்பர் 11) ஐப்பசி மாத சுக்கிர வார சங்கடஹர சதுர்த்தி வருகிறது. அன்று என்ன செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

சுக்கிர வார சங்கடஹர சதுர்த்தி :

விநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிக சிறந்ததும், பழமையானதும் சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகும். ‘சங்கஷ்டம்” என்றால் கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களை நீக்க சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.


சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். விநாயகரை போலவே விரதங்களில் முதன்மையானதும், எளிமையானதும் சதுர்த்தி விரதம் தான். சதுர்த்தி அன்று காலையில் குளித்துவிட்டு, வீட்டிற்கு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று, விநாயகரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து அர்ச்சனை செய்து விநாயகரை வணங்க வேண்டும்.பின் வெள்ளெருக்கன் பூவை மாலையாக கோர்க்க வேண்டும். அம்மாலையில் உள்ள பூக்கள் 1008 அல்லது 21 என்ற எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும். அவ்வாறு கோர்க்கப்பட்ட மாலையை விநாயகருக்கு அணிவித்து அவரை வணங்க வேண்டும்.

ALSO READ:  சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (43): அஜகர வ்ருத்தி ந்யாய:

மேலும் அன்று விநாயகருக்கு நெய்வேத்தியமாக மோதகத்தை படைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பண கஷ்டம், மன கஷ்டம் நீங்கும் மற்றும் கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் என அனைத்தும் நீங்கி செல்வ வளம் நிச்சயம் பெருகும்.கோயிலுக்கு செல்ல இயலாத நிலையில் வீட்டிலேயே மோதகம், பால், தேன், கொய்யா, வாழை, நாவல், கொழுக்கட்டை மற்றும் சுண்டல் போன்றவற்றை விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடலாம்.

மேலும், சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நினைத்த காரியம் கைகூடும். வீண் பழி அகலும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். தீவினை அகலும். மனச்சுமை நீங்கும் என கணபதி புராணம் கூறுகிறது.

author avatar
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரவெடி தடையை நீக்க சட்டப்படி நடவடிக்கை: எல்.முருகன் உறுதி!

தீபாவளி சீசன் நேரம் இது உங்களை பார்த்து வாழ்த்துவிட்டு,பிரதமரின் பல திட்டங்களை தங்களிடத்தில் சொல்ல வந்தேன். தங்களை சந்தித்தது மகிழ்ச்சி