

ஸ்ரீவில்லிபுத்தூரில் முப்பதும் தப்பாமே திருப்பாவை முற்றோருதல் மாநாடு இன்று விமரிசையாக நடைபெற்றது.விழாவில் ஜீயர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பாவை முற்றெருதல் விழா நடைபெற்றது.ஸ்ரீ ஆண்டாளுக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சியில் 3000 திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூரில் மாநில பெண்ணாக தோன்றிய ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் செல்வம் கொடுக்கும் ஸ்ரீ மகாலட்சுமியின் அம்சமாகும். மானிடப் பெண்ணாகப் பிறந்து பூமாலை சூட்டி பின் பாமாலை பாடி ஸ்ரீரங்கநாதரை அடைய இவர் தேர்ந்தெடுத்த மாதம் மார்கழி மாதம் ஆகும். இந்த மார்கழியில் மாதத்தில் தான் பாவை நோன்பு நோற்று திருப்பாவை பாடி ஸ்ரீ அரங்கநாத பெருமானை அடைந்தார்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதம் முப்பதும் தப்பாமே எனும் தலைப்பில் திருப்பாவை முற்றோருதல் மாநாடு நடைபெற்றது. இதில் 3000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு ஸ்ரீ ஆண்டாளுக்கு சீர்வரிசை அளித்தனர்.

ஆண்டாள் சன்னதி முன்பு உள்ள திரு ஆடிப்பூர கொட்டகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மடத்தின் 24 ஆவது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோபராமானுஜர் ஜீயர், ஆழ்வார்திருநகரி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ எம்பெருமானார் ரெங்க ராமானுஜ ஜீயர், வீரவநல்லூர் குலசேகர ராமானுஜர் மடம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராம பிரம்மேய ராமானுஜ ஜீயர் ஆகியோர் கலந்துகொண்டு மங்களாசாசனம் பாடி திருப்பாவை முற்றோருதல் நகர்வலம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து 80க்கும் மேற்பட்ட பஜனை மடங்களைச் சார்ந்த 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தாயார் ஸ்ரீ ஆண்டாளுக்கு தட்டுகளில் சீர்வரிசைகளை கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.
