108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோயிலில் நாளை விழாக்கோலம்.நாளை தை அமாவாசை அன்று காலை 8 மணிக்கு எண்ணெய்க் காப்பு, மாலை 6 மணிக்கு பத்ர தீபம், சுவாமி புறப்பாடு, நள்ளிரவு கருட சேவை நடைபெறும்.
நாங்குநேரி வானமாமலை மடத்தின் பீடாதிபதியாக 1984 முதல் 1994-ம் ஆண்டு வரை 29-வது பட்டத்தை அலங்கரித்தவர் ஸ்ரீபட்டர்பிரான் ஜீயர் சுவாமி. வானமாமலைப் பெருமாள் கோயில் ராஜகோபுரத்தை பல ஆண்டுகளுக்குப் பின் சீரமைத்து, சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்) நடத்தியவர். அதுபோல் தெப்பக்குளத்தை சீரமைத்து, பெரியகுளத்தில் இருந்து தெப்பத்துக்கு தண்ணீர் வரும் வழிவகைகள் உருவாக்கி, 2 நாட்கள் தெப்பத்திருவிழாவுக்கு ஏற்பாடுகளை சுவாமி மேற்கொண்டார். நடப்பாண்டு நாளை தை அமாவாசை அன்று காலை 8 மணிக்கு எண்ணெய்க் காப்பு, மாலை 6 மணிக்கு பத்ர தீபம், சுவாமி புறப்பாடு, நள்ளிரவு கருட சேவை, மறுநாள் வரும் 22-ம் தேதி இரவு 7 மணிக்கு பெருமாள், தாயார் தெப்ப உற்சவமும், 23-ம் தேதி இரவு 7 மணிக்கு ஆசார்யர் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. மடத்தில் தற்போது எழுந்தருளி இருக்கும் 31-வது பட்டம் ஸ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமி நியமனப்படி ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.