― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்கேரள மாநிலம் அச்சன்கோவிலில் தர்மசாஸ்தாவுக்கு வரும் ஜன27 இல் புஷ்பாஞ்சலி..

கேரள மாநிலம் அச்சன்கோவிலில் தர்மசாஸ்தாவுக்கு வரும் ஜன27 இல் புஷ்பாஞ்சலி..

- Advertisement -

ராஜபாளையம் ஸ்ரீ பூரண புஷ்கல சமேத தர்மசாஸ்தா ஐயப்பன் பக்தர்கள் மன்றம் சார்பில் கேரள மாநிலம் அச்சன்கோவிலில்
இந்த ஆண்டும் வரும் ஜன27வெள்ளிக்கிழமை புஷ்பாஞ்சலி அன்னதானம் நடைபெற உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டையில் இருந்து 25கி.மீ தொலைவில் அடர்ந்த மலையில் வனப்பகுதியில்  பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில்களில் ஒன்றான அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில் உள்ளது.

இந்த கோவில் பரசுராமரின் கைகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தை மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று பிரதிஷ்டை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. எனவே தை மாதத்தில் ரேவதி நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் புஷ்பாஞ்சலி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும்  அச்சன்கோவிலில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி தை ரேவதி நாளில் புஷ்பாஞ்சலி வழிபாடு அதி விமர்சையாக நடைபெற உள்ளது.

ராஜபாளையம் ஸ்ரீ பூரண புஷ்கல சமேத தர்மசாஸ்தா ஐயப்பன் பக்தர்கள் மன்றம் சார்பில் இந்த ஆண்டும் அதி விமர்சையாக அச்சன்கோயில்  தர்ம சாஸ்தாவுக்கு புஷ்பாஞ்சலி அன்னதானம் வெடி வழிபாடு உட்பட முக்கிய விழாக்கள் நடத்தப்படுகிறது அதிகாலை ஐந்து மணிக்கு அபிஷேகம் மதியம் 11:30 மணிக்கு அன்னதானம் இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி இரவு 8 மணிக்கு வான வேடிக்கை ராஜபாளையம் ஸ்ரீபூர்ண புஷ்கல சமேத ஸ்ரீ தர்மசாஸ்தா அச்சன்கோவில் ஐயப்பன் பக்தர்கள் மன்றம் சார்பில் ராஜபாளையம் சக்தி பட்டாசு கடை உரிமையாளர் நாகராஜன் மற்றும் விழா கமிட்டியினர் முன்னிலையில் நடத்தப்படுகிறது.

மேலும் அன்று அச்சன்கோவிலில் பகல் 11 மணிக்கு சபரிமலை தந்திரி கண்டரரு மோகனரரு தலைமையில் கலச பூஜையும் களப பூஜையும் நடத்தி ஐயப்பனுக்கு கலசாபாபிஷேகம் களபாபிஷேகம் வேத பாராயண முறைப்படி விமர்சையாக நடைபெறும். மாலை 4 மணிக்கு நெற்றி பட்டம் கட்டிய யானை மீது ஐயப்பன் விக்ரகம் ஏற்றி கோவில் பிரகாரம் சுற்றிவர ஷீவேலி வழிபாடும் மாலை ஆறு முப்பதுக்கு கோவில் முழுவதும் தீபங்கள் ஏற்றி மகாதீப ஆராதனை வழிபாடும் நடைபெறுகிறது .

அச்சன் கோவில் ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி அன்று இரண்டு டன்னுக்கும்   மேல் வண்ணமயமான மனக்கும் பூக்களால் புஷ்பாஞ்சலி நடத்துவது சிறப்பாகும். இந்த புஷ்பாஞ்சலியில் ராஜபாளையம் தென்காசி கோயம்புத்தூர் மதுரை கொல்லம் திருவனந்தபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப பக்தர்கள் பூக்களை கொண்டு வந்து அச்சன் கோவில் தர்மசாஸ்தாவுக்கு புஷ்பாஞ்சலி அபிஷேகம் செய்வது தனிச்சிறப்பாகும்.

அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஆலயத்தில் மூலஸ்தானத்தில் உள்ள தர்மசாஸ்தாவின் சிலை மிகப்பழமை வாய்ந்தது. இங்கே அய்யப்பன் வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சி அளிக்கிறார். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை எனும் இரு தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐய்யப்பனை கல்யாண சாஸ்தா என்று அழைக்கின்றனர். இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சபரிமலை போன்ற அடர்ந்த காட்டுக்குள் தன் தேவியரான பூரணை, புஷ்கலை உடன் வீற்றிருந்து அருளும் இடம்தான் அச்சன்கோவில்.
அச்சன் கோவிலில் தனது தேவியருடன் வீற்றிருக்கும் ஐயப்பன் சங்கரன் கோவில் சங்கர நாராயணரைப் பார்த்த வண்ணம் உள்ளார். சபரிமலையில் பால்ய பருவத்தில் காட்சி தரும் ஐயப்பன், குளத்துப்புழாவில் குழந்தை பருவத்திலும், ஆரியங்காவில் இளைமைப் பருவத்திலும், அச்சன்கோவிலில் முதிர்ச்சிப் பருவத்திலும் காட்சி தருகிறார்.

அச்சன்கோவிலின் அரசனாக ஐயப்பன் தனித் தோரணையுடன் மிடுக்காக அமர்ந்துள்ளார். வலது கரம் அருகில் கூர்மையான வாள் ஒன்றும் உள்ளது. ஐயப்பனின் இருபுறமும் அவரது தேவியர் பூரணையும், புஷ்கலையும் அமர்ந்திருக்க, ஐயப்பனின் இந்த அழகு வர்ணிப்புக்குள் அடங்காதது. ஹரியும் அழகு, ஹரனும் அழகு, இரு அழகுக்கும் பிறந்த அரிகரசுதனும் அழகனாக இருப்பதில் எந்த ஐயப்பாடும் இருக்க முடியாதுதான்.

ஒருமுறை அச்சன்கோவில் அழகனை காண்பதற்காக தள்ளாத வயதுடைய பக்தர் ஒருவர் தனித்து வந்து கொண்டிருந்தார். அடர்ந்த காடு, நேரமோ இரவாகி விட்டது. வழியும் சரியாக தெரியவில்லை. மனதில் அச்சம் புகுந்தது. அச்சன்கோவில் அரசனுக்கு, அந்த வயதானவரின் அச்சம் புலப்பட்டு விட்டது. இதற்கிடையே அந்த வயதானவரும் ஐயப்பனை நினைத்து பயத்தைப் போக்க வேண்டிக் கொண்டார்.

அசரீரி ஒலித்தது. ‘அன்பர்களே! அந்த வாளை எனது கருவறையில் வைத்து பூஜை செய்யுங்கள். என்றும் உங்களுக்கு அரணாக இருந்து காப்பேன்’ என்றது. அதன்படி அந்த வாள் மூலவர் சன்னிதியில் வைக்கப்பட்டது. தற்போது அச்சன் கோவில் அழகனின் திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ள புனலூர் கருவூலத்தில் அந்த வாள் வைக்கப்பட்டுள்ளது.

கொடி மரத்தை வணங்கி படியேறி மூலவர் ஐயப்பனை தரிசித்து விட்டு விநாயகர், சுப்பிரமணியர், நாகங்கள், மாம்பழத்தறா பகவதி அம்மன் சன்னிதிகளுக்கும் சென்று வணங்க வேண்டும். பின்னர் கருப்பன் என்னும் கருப்ப சுவாமியையும் தவறாமல் வழிபட வேண்டும். ‘கருப்பந்துள்ளல்’ என்னும் விழா இங்கு பிரபலம். ஏவல், பில்லி, சூனியம் மற்றும் மாந்திரீகம் போன்றவற்றாலோ, தீராத கொடு நோயாலோ அவதிப்படுபவர்கள், இந்த விழாவில் பங்கேற்றால் அனைத்து துயரங்களும் நீங்கப்பெறுவார்கள். இந்த விழாவின் போது பலரும் கருப்ப சுவாமி போல் வேடம்அணிந்து கலந்து கொள்கிறார்கள்.
இத்தலத்தில் உள்ள அம்மன் சன்னிதியில் வளையல் மற்றும் பட்டுத் துணிகளுடன் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம். மேலும் அச்சன் கோவில் ஐயப்பனை வழிபட்டால் நம்மையும் அரசனைப் போல வாழவைப்பான்.

அச்சன்கோவில் ஐயப்பன், பரசுராமரால் நிர்மாணிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இத்தல ஐயப்பனை ‘கல்யாண சாஸ்தா’ என்றும் அழைக்கிறார்கள். இவரை வழிபட்டால் திருமணத் தடைகள் அகலும். இல்லறம் நல்லறமாகும். சந்ததிகளும், சவுபாக்கியங்களும் என சகலமும் நம்மை வந்தடையும். இது விஷம் தீண்டாப்பதி என்ற சிறப்பு கொண்டது. பாம்பு கடிபட்டு வருபவர்களுக்கு, எந்த நடு இரவானாலும், கோவில் நடை திறந்து சந்தனமும், தீர்த்தமும் வழங்கும் வழக்கம் இந்த ஆலயத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,173FansLike
387FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,898FollowersFollow
17,300SubscribersSubscribe
Exit mobile version