ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரசித்திபெற்ற திருவிழாவில் ஒன்றான தை தேரோட்டம்பூபதி திருநாள் நாளை (26-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.பிப்ரவரி 3-ம் தேதி தைத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரசித்திபெற்ற திருவிழாவான வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழாவைப் போல், பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தை தேரோட்டம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
தை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் திருத்தேரோட்டம் நடைபெறும் வகையில், பூபதி திருநாள் 1413-ம் ஆண்டு விஜயநகர அரசரான வீரபூபதி உடையாரால் தொடங்கப்பட்டது. நடப்பாண்டு பூபதி திருநாள் நாளை (26-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிப்ரவரி 6-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. 29-ம் தேதி கருட சேவை நடைபெறுகிறது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். பிப்ரவரி 2-ம் தேதி இரவு குதிரை வாகனம், 3-ம் தேதி தைத்தேர் உற்சவம், 4-ம் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 5-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளுவது சிறப்பாகும்.
