More

    இந்த செய்தியை / கட்டுரையை ஆங்கிலத்தில் அல்லது மற்ற இந்திய மொழிகளில் படிக்க…

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிப் 3-ல் தை தேர் உற்சவம்..

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரசித்திபெற்ற‌ திருவிழாவில் ஒன்றான தை தேரோட்டம்பூபதி திருநாள் நாளை (26-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.பிப்ரவரி 3-ம் தேதி தைத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரசித்திபெற்ற திருவிழாவான வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழாவைப் போல், பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தை தேரோட்டம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

    தை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் திருத்தேரோட்டம் நடைபெறும் வகையில், பூபதி திருநாள் 1413-ம் ஆண்டு விஜயநகர அரசரான வீரபூபதி உடையாரால் தொடங்கப்பட்டது. நடப்பாண்டு பூபதி திருநாள் நாளை (26-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிப்ரவரி 6-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. 29-ம் தேதி கருட சேவை நடைபெறுகிறது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். பிப்ரவரி 2-ம் தேதி இரவு குதிரை வாகனம், 3-ம் தேதி தைத்தேர் உற்சவம், 4-ம் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 5-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளுவது சிறப்பாகும்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    2 × 2 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,632FollowersFollow
    17,300SubscribersSubscribe
    -Advertisement-
    Exit mobile version