
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்
உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அதி காலை4.30மணி முதல் இரவு 8.30 மணி வரை வழக்கம்போல் உள்ள அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்ப டுகிறது.
அதன் பிறகு மகா சிவராத்திரி விழாவை யொட்டி நள்ளிரவு 12 மணிக்கு பகவதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு முதல் கால பூஜை நடக்கிறது.
பின்னர் 12.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் அதிகாலை 1 மணிக்கு 3-ம் கால பூஜையும் 1.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடக்கிறது. ஒவ்வொரு கால பூஜையின் போதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு பூஜையும், சிறப்பு வழிபாடுகளும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.
மீண்டும் மறுநாள் அதிகாலை 4.30 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் உள்ள பூஜைகள் நடக்கிறது. மகா சிவராத்திரியை யொட்டி ஒவ்வொரு கால பூஜையிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.