
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி கோயிலில் குலசேகர ஆழ்வாரின் திரு அவதார தினமான நாளை காலை 7.30 மணிக்குமகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி வீற்றிருப்பது போல், திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, மன்னார்கோவில், விஜயநாராயணம் ஆகிய இடங்களிலும் ராஜகோபால சுவாமி அருள்பாலிக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி கோயிலில் இன்னொரு சிறப்பு, குலசேகர ஆழ்வார் பரமபதித்த இடம் இது என்பதே. கேரளத்தில் திருவஞ்சிக்களம் என்ற இடத்தில் அவதரித்து, நாட்டின் மன்னனாகத் திகழ்ந்து, பின்னர் ஆழ்வாராகி, கடைசியில் குலசேகர ஆழ்வார் வந்து சேர்ந்த இடம் மன்னார்கோவில்.
இங்கு குலசேகர ஆழ்வாரின் திருவரசு கொடிமரத்துடன் கூடியதாக அமைந்துள்ளது. குலசேகர ஆழ்வாரின் திரு அவதார தினமான நாளை காலை 7.30 மணிக்கு மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.