வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் மாசி மக தேரோட்டம் இன்று பக்தி பரவசத்த்துடன் நடைபெற்றது .
நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, இன்று தொடங்கிய தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுக்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.
இந்த ஆண்டு மாசிமகப் பெருவிழா பிப்.16 தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேரில் ஸ்ரீ ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜசுவாமி எழுந்தருளினார்.
பாரம்பரிய முறைப்படி தப்பு, தாரை, கொம்பு முழங்க நாகஸ்வர இசையுடன், கீழ வீதியில் அமைந்துள்ள தேர் முட்டி பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தி பரவத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.