
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. இதில் நெல்லை குமரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்
திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பிராயர் கோயில் பங்குனி உற்சவத்தில் இன்று திருத்தேரோட்டத்தை யொட்டி காலை
வெள்ளி தோளுக்கினியானில் தாயார்களுடன் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பக்தர்கள் திருத்தேர் வடம் பிடிக்க, ஸ்ரீ அழகிய நம்பிராயர் திருத்தேரில் ரத வீதிகளில் உலா வந்து அருள் பாலித்தார்.

திருவோணம் நாளான நாளை தீர்த்தவாரி நடைபெறுகிறது.. அடுத்து சித்திரையில் 10 நாட்கள் வசந்த உற்சவம்,, ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேகம், ஆடியில் திருவாடிப்பூரம், ஆவணியில் பவித்ர உற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசியில் ஊஞ்சல் உற்சவம், கார்த்திகையில் கைசிக ஏகாதசி, மார்கழி மாதம் திரு அத்யயன உற்சவம், தை மாதம் தெப்ப உற்சவம் ஆகியவை முக்கிய திருவிழாக்கள் இக் கோயிலில் நடைபெறும்.