
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழித் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 15,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் அம்மாவாசை தினத்தில் நடைபெறும். இந்த ஆண்டு பூக்குழித் திருவிழா கடந்த 10.03.2023 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது ஒவ்வொரு நாளும் காலை மண்டபம் எழுந்தருளுதல், இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்றது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழாவான இன்று காலை பூ எடுப்பது, மற்றும் பூ வளர்த்தல் போன்ற நிகழ்வு நடந்தது,

பின்னர் பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து, காப்பு கட்டி ரதவீதி மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலின் முன்பாக உள்ள அக்னி குண்டத்தில் பூக்குழி இறங்கினார்கள். ஏராளமான பெண்கள் தங்கள் கைக்குழந்தையுடன் பூ இறங்கினார்கள் பதினைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள் .

பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர் , மோர் , பந்தல் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டது . விழாவிற்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.