- Advertisement -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் ஒரு வில்,ஒரு சொல்,ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர்

ஒரு வில்,ஒரு சொல்,ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர்

#image_title

இன்று ஸ்ரீராம

IMG 1680148862758
IMG 1680148944055
நவமி மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்துவது வேதங்கள். அதன்படி வாழ்வது சாத்தியம் அல்ல என்று மக்கள் நினைத்த தருணத்தில் மக்களுள் ஒருவராக இருந்து வேதங்களின் சாரத்தை, தினசரி வாழ்க்கையில் வாழ்ந்து, உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம்.

ஒரு வில்,ஒரு சொல்,ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர் பங்குனி மாதம் புனர் பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதி யில் தான் ராம அவதாரம் நிகழ்ந்தது. ராமர் அவதரித்த நாள் ராம நவமியாக கொண்டாடுகிறோம்.

தர்மம் அழிந்து, அதர்மம் தலை எடுக்கும் போதெல்லாம் மண்ணுலகையும் மக்களையும் காக்க மகாவிஷ்ணு அவதாரங்கள் எடுத்தார் என்கின்றன புராணங்கள்.

இதில் ஏழாவதாக அவதரித்த ராம அவதாரம் மனித அவதாரமாக இருந்ததால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ஹ, வாமன, மற்றும் பரசுராம அவதாரம் முதல் ஆறு அவதாரங்கள்.

இந்த ராமாவதாரத்தில் மனிதர்கள் படும் அனைத்து இன்னல்களையும் இறைவனும் அனுபவித்து அதன் மூலம் மக்களுக்கு பாடம் புகட்டியிருக்கிறார்.

ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாக உதித்த ராமன், சீதையை மணந்து ஏகபத்தினி விரதனாக இருந்தார் தந்தை செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றினார். அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்து மக்களை காத்தார். இவரது சிறப்புகளை விளக்கும் ராமாயணம் நமது இதிகாசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இதில் ராமாவதாரத்தைப் பற்றியும், அவர் செய்த சாதனைகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது..

ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், 14 ஆண்டுகள் கானக வாழ்க்கை மேற்கொண்டிருந்த போது தாகத்திற்கு நீர் மோரும் பானகமும் பருகினார் என்பதை நினை வுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராம பிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக் தர்களுக்கு வழங்கப்படுகிறது. வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேகவிழா சிறப்பாக நடைபெறும்.

ராம நாமமானது அஷ்டாட்சரமான ‘ஓம் நமோ நாராயணாய’ என்பதில் உள்ள ‘ரா’ என்ற எழுத்தையும், பஞ்சாட்சரமான ‘நமச்சிவாய’ என்ற எழுத்தில் ‘ம’ என்ற எழுத்தையும் சேர்த்து ‘ராம’ என்றானது.

சாஸ்திரம் படித்திருக்காவிட்டாலும் வேதங்கள் தெரியாமல் போனாலும், மந்திர உபதேசங்கள் அறிந்திருக்காவிட்டாலும் , ‘ராம’ நாமத்தை பாராயணம் செய்தாலே அவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும், சௌகரியங்களும் அடைந்து சந்தோஷமா கவும், நிம்மதியாகவும் வாழ்ந்திடுவார் என்பது உண்மை. அந்த ராம நாமம் நமக்கு சுபிட்சம் தரும் என்பது வேதவாக்கு.

” இராமனை நினைவு கொள்வாய் மனமே-அந்த
கோசலை மகனை துதி செய்வாய் தினமே!
சித்திரை நவமியில் புனர்பூசத்தில் பிறந்து
இத்தரை மாந்தர் வாழ்வில் உய்யவே அவதரித்த அந்த……”

இவ்வளவு எளிமையான இனிமையான இலகு வான ராமமந்திரம் வாழ்வைக் கடைத்தேற்ற இருக்கையில் நாம் அதை அனுசரித்து கடைப் பிடித்து வாழ்வில் வெற்றியடைவோமாக.

ஸ்ரீ ராம நாமத்தின் மகிமை பற்றி கூற வேண்டும் என்றால் பல ஆயிரம் கதைகள் கூறலாம்.

ஒரு ஊரிலே ஒரு வயதான ஏழை பிரம்மச் சாரி இருந்தான், அவனுக்கு கண்கள் குருடு ஆனால் ராமபக்தன். அவனுடைய பக்தியினை கண்டு இரங்கி ராமபிரான் காட்சியளித்தான். ‘ஒரே கேள்வியைக் கேட்டு வரம் பெற்றுக் கொள். கண்டிப்பாக மறு கேள்வி கேட்கக் கூடாது என்றான். ’ராமபிரான். கிழவனும் சரியென்று ஒப்புக்கொண்டு ஒரே ஒரு வரம் கேட்டார்.

‘ஏழு அடுக்கு மாளிகையில் தங்க கரண்டியால் என் பேரன் பாலை குடிப்பதை என் கண்களால் பார்க்க வேண்டும்.’ என்று ஒரே ஒரு வரம் கேட்டார். வரம் கொடுத்து ராமபிரான் சென்று விட்டான்.

வீடு இல்லாதவனுக்கு வந்து விட்டது பெரி ய மாளிகை. பேரன் பிறக்க வேண்டுமா னால், கல்யாணம் முடிக்க வேண்டும் அல்லவா? கிழவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? வர பலத்தால் இளமையும் வந்துவிட்டது. பால் குடிக்கும் கரண்டியே தங்கமா னால் எவ்வளவு செல்வம் வரவேண்டும்? அவ்வளவு செல்வமும் வந்துவிட்டது. பேரனைப் பார்ப்பதற்குக் கண்கள் வேண்டுமல்லாவா?கண்களும் வந்து விட்டன.

கிழவன் ராம நாம ஜெபத்தின் மகிமையால் தெளிவான ஒரே கேள்வி கேட்டதின் பயனால், மாளிகை, இளமை, செல்வம், கண்கள், இல்லற வாழ்வு இத்தனையும் பெற்றான். பக்தி நெறியிலீடுபட்டால் தெளிவான கேள்விகள் உதயமாகி, அறிவு தெளிவடையும்.

பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணை யானது ராம நாமம். ஸ்ரீராம நவமி அன்று ராம நாமம் சொல்வதும், ராம நாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவான் நாமம் இதயத் தைத் தூய்மைப்படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக் கிறது. ஞானத்தைத் தூண்டுகிறது. அறியாமை, காமம், தீய இயல்பு களைச் சுட்டுப் பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராம லோ உச்சரித்தாலே பகவான் அருள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது

ராம நாமத்தை சொல்லி கொண்டாடி தசரத மைந்தனின் அருள் பெறலாம்

” ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே”

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

two × five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version