- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி திருமலையில் இருந்து வந்த வஸ்திரங்கள் ..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி திருமலையில் இருந்து வந்த வஸ்திரங்கள் ..

#image_title

IMG 20230403 WA0102

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருப்பதி திருமலை வஸ்திரம் கொண்டுவரப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பங்குனி மாத திருக்கல்யாண திருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாண நாளை (5 தேதி) இரவு 8 மணிக்கு ஆடிப்பூர கொட்டகையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான பந்தலில் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு ஆண்டாளுக்கு திருமண சீராக ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்து பட்டு வஸ்திர மரியாதைகள் மேளதாளம் முழங்க ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டுவரப்பட்டது. இதனை கோவில் நிர்வாக குழு தலைவர் சுப்பா ரெட்டியின் மனைவி ஸ்வர்ணலதா ஆண்டாள் சந்நிதிக்கு கொண்டு வந்து ஒப்படைத்தார்.

ALSO READ:  அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலில் 19ம் நாள் திருவிழா!

கோயில் செயலாளர் எம்கே முத்துராஜா அதனைப் பெற்றுக் கொண்டார். அப்பொழுது கோயில் ஸ்தானிகம் ரங்கராஜன் என்ற ரமேஷ் வேதபிரான் சுதர்சன் மணியம் கோபி மற்றும் கோயில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் ஏராளமான பக்தர்கள் உடன் இருந்தனர்.

ஆண்டாள் திருமணத்தின் போது திருப்பதி திருமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட பட்டினை அணிந்துதான் திருக்கல்யாண வைபவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version