
ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாணம் இன்று இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் இன்று காலை ஆண்டாள் ரங்கமன்னார் செப்பு தேரில் பவனி வர செப்புத்தேரோட்டம் கோலாகலமாக ரதவீதிகளில் தேர் பவனி வந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பங்குனி மாத திருக்கல்யாண திருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாண விழ் இன்று (5 தேதி) இரவு 8 மணிக்கு ஆடிப்பூர கொட்டகையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான பந்தலில் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு ஆண்டாளுக்கு திருமண சீராக ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்து பட்டு வஸ்திர மரியாதைகள் மேளதாளம் முழங்க ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டுவரப்பட்டது. இதனை கோவில் நிர்வாக குழு தலைவர் சுப்பா ரெட்டியின் மனைவி ஸ்வர்ணலதா ஆண்டாள் சந்நிதிக்கு கொண்டு வந்து ஒப்படைத்தார்.
ஆண்டாள் திருமணத்தின் போது திருப்பதி திருமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட பட்டினை அணிந்துதான் திருக்கல்யாண வைபவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாணம் இன்று இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் இன்று காலை ஆண்டாள் ரங்கமன்னார் செப்பு தேரில் பவனி வர செப்புத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.ரதவீதிகளில் தேர் பவனி வந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
