வரலட்சுமி நோன்பை முன்னிட்டு ஸ்ரீவிலி அருகே வத்திராயிருப்பில் கன்னிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி பெண்களால் திருவிழா கொண்டாடப்பட்டது.
இங்குள்ள பலகுடி கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி நோன்பு திருவிழா பெண்களால் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதில் கன்னிப் பெண்களுக்கும் குழந்தை பேரு இல்லாதவர்களுக்கும் வளைகாப்பு நடத்தி பூஜை செய்யப்படும். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருவிழா நேற்று கோயிலில் விமர்சையாக நடந்தது காலையில் அம்மனுக்கு 11 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது பின்னர் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு நவதானியங்கள் சாத்தப்பட்டு பூஜைகள் நடந்தது பூஜையில் குழந்தை இல்லாத பெண்கள் திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் அம்மன் முன்பாக அமர வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது பின்னர் அவர்கள் அனைவரும் கோயிலுக்கு முன்பாக அமர வைக்கப்பட்டு மூத்த பெண்களால் வளைகாப்பு நடத்தப்பட்டது. கடந்த வருடம் அம்மனுக்கு சாத்தப்பட்ட வளையல்கள் பெண்களுக்கு அனுபவிக்கப்பட்டது பின்னர் அம்மனுக்கு சாத்தப்பட்ட நவதானியங்கள் அவர்களுக்கு மருந்தாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மற்ற பெண்களுக்கும் திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் வளையல்கள் அன்னதானம் பிரசாதமாக வழங்கப்பட்டது கோயில் திருவிழா கமிட்டி பெண்கள் குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.