கேள்வியும் பதிலும்: ஏசு பிரஜாபதியா?
தெலுங்கில்: ப்ரஹ்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்
கேள்வி:
சமீபத்தில் கிறிஸ்தவர்கள் தம் மதம் சுதேசி மதமே என்று கூறிக் கொண்டு துண்டு காகிதங்கள் அச்சடித்து வினியோகம் செய்தார்கள். அவற்றில் அவர்களின் ஏசுவே பிரஜாபதி என்றும், தன்னைத்தானே தியாகம் செய்து கொண்ட மக்கள் தலைவனைப்பற்றி வேதத்தில் வர்ணித்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளர்கள். உண்மையா?
இது ஒரு தீய எண்ணத்தோடு கூடிய துஷ்டத் தனமான வியூகமே! வேத வாக்கின் மேல் நம்பிக்கை உள்ள இந்தியர்களையும் தேச பக்தி உள்ளவர்களையும் மதம் மாற்றுவதற்குச் செய்து வரும் கற்பனைகளில் இதுவும் ஒன்று. நம் நாட்டு மக்கள் இப்படிச் சொன்னால் ஆர்வம் காட்டுவார்கள் என்று ஆசை.
இவர்களுக்கு சமீப காலமாக குரங்கு கையில் தேங்காய் கிடைத்தாற்போல மொழிபெயர்ப்பு செய்த வேத புத்தகங்கள் சில கிடைத்துள்ளன. அவற்றை அங்கங்கே படித்து, தலையோ வாலோ இன்றி பைத்தியக்காரத்தனமாக புரிந்து கொண்டுள்ளார்கள். தன்னைத்தானே தியாகம் செய்து கொண்ட சிபி சக்ரவர்த்தி, ரந்தீ தேவன், ததீசி மகரிஷி போன்ற எத்தனையோ தியாக சீலிகளைப் பற்றி நம் வைதீக இலக்கியம் கூறுகிறது. அவர்கள் அனைவரும் பிரஜாபதிகளா?
தம் மதம் பாரதீய மதமே என்று நம்ப வைப்பதற்கு பாரதீய நூல்களில் உள்ள வாக்கியங்களோடு பாரதீய நடை உடை பாவனைகளோடு புதிய ‘இந்தியன் பைபிளை’க் கூட தயாரித்துள்ளார்கள். ஆனால் இதனை இந்தியாவுக்காக மட்டுமே தயாரித்து வைத்துள்ளார்கள். அவர்களுடையது வைதீக மதமே என்றும் அவர்களின் மத மூல நூல்கள் பாரத தேசத்துடையனவே என்றும் உலகளாவிய விதமாக அவர்களின் போப்பண்டவரை பிரகடனம் செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடி போட்டு நம்மை வஞ்சிப்பது எதற்காக? அவர்களுடையது கூட வைதீக மதமே என்றால் மத மாற்றம் செய்வது எதற்காக? அவர்களே வைதீக மதமான ஹிந்து மதத்திற்கு மாறி விடலாமே! பெயர் வழி முறைகள் மத பழக்க வழக்கங்கள் மாற்றங்கள் எல்லாம் எதற்கு? மேல் நாட்டிலிருந்து வரும் பணத்திற்காக இந்த ஆட்டம் ஆடுவானேன்? மேல் நாட்டில் பிறந்து வளர்ந்த மதத்தை எங்கோ ஒரு வேத வாக்கியத்தோடு முடிச்சு போடும் முயற்சி எதற்காக? அதி புத்திசாலித்தனத்தோடு முயற்சித்தால் நாத்திக மத வாக்கியங்கள் வேதத்தில்கூட கிடைக்கும். அதற்காக வைதீக மதத்தை நாத்திக மதம் என்று கூறி பாவத்தை மூட்டை கட்டிக் கொள்லலாமா?
கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் தீவிர மத மாற்றத்தின் பரிணாமங்கள் இவை. கிறித்தவர்களாக மாறியவர்களின் பட்டியலை அதிகமாக்கிக் கொண்டு வருகிறார்கள். வேத மதமே அவர்களுடையது என்றால் பாப்டிசம் எதற்காக? எப்படியும் நாம் அனைவரும் பிறப்பிலேயே வேத மதமான இந்து மதத்தவர்களே அல்லவா?
நம் தெய்வங்களோடு கூட அவர்களின் தூதரின் படம் கூட சேர்த்து வைத்து நாம் மதம் மாறாமலே அவர்களை கௌரவித்தால் ஒப்புக் கொள்வார்களா? அவர்களுக்குத் தேவையானது மத மாற்றமே. நேற்று வரை ஹிந்து மதத்தை பலப் பல கெட்ட வார்த்தைகளால் நிந்தித்து விட்டு தற்போது உங்களில் ஒருவனே நான் என்று வஞ்சனை செய்வது வெட்கங்கெட்டதனம்.
நானும் உங்களை சேர்ந்தவனே என்று வீட்டில் புகுந்து கொள்ளையடிக்கும் திருட்டு வழிமுறை இது. இவற்றை புத்திசாலித்தனமாக திருப்பி அடிக்க வேண்டும். நமக்கு பிற மதங்களில் மேல் கௌரவம் இருக்கிறது. ஆனால் அதனை கௌரவிப்பதற்கு நம் மதத்தை விட்டுவிடவும் தேவையில்லை. நம் மதத்தோடு கலக்கவும் தேவையில்லை!