29 C
Chennai
வியாழக்கிழமை, நவம்பர் 26, 2020

பஞ்சாங்கம் நவ.26 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - நவ.26ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~11 (26.11.2020)வியாழ கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம் ~ சுக்ல...
More

  எந்த ஹீரோவும் வேணாம்!.. முருகதாஸ் நிலைமை இப்படி ஆகிப்போச்சே!…

  மாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து யாரை...

  விஷாலுக்கு வில்லனான ஆர்யா – புதிய பட அப்டேட்

  தமிழ் சினிமாவில் நடிகர்களாக உள்ள விஷாலும், ஆர்யாவும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இருவரும் இணைந்து பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்திலும் நடித்திருந்தனர்.இந்நிலையில், எனிமி எனும் ஒரு புதிய படத்தில் அவர்கள் மீண்டும்...

  நிவர் புயல்… சென்னை புறநகரில் 20 பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!

  இந்த மாவட்டங்களில் மணிக்கு 65 கி.மீ., முதல் 70 கி.மீ., வரையிலும், ஒரு சில நேரங்களில் 75 கி.மீ., வரையிலும் காற்று வீசக் கூடும்.

  பிரசாந்த் படம் போனா என்ன? – சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா

  மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரித்திவிராஜ். தமிழில் மொழி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். இவர் இயக்குனர் அவதாரம் எடுத்த திரைப்படம் ‘லூசிபர்’. இப்படம் அரசியல் மற்றும் ஆக்‌ஷன் கலந்த கதையாகும்,...

  எந்த ஹீரோவும் வேணாம்!.. முருகதாஸ் நிலைமை இப்படி ஆகிப்போச்சே!…

  மாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து யாரை...

  விஷாலுக்கு வில்லனான ஆர்யா – புதிய பட அப்டேட்

  தமிழ் சினிமாவில் நடிகர்களாக உள்ள விஷாலும், ஆர்யாவும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இருவரும் இணைந்து பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்திலும் நடித்திருந்தனர்.இந்நிலையில், எனிமி எனும் ஒரு புதிய படத்தில் அவர்கள் மீண்டும்...

  பிரசாந்த் படம் போனா என்ன? – சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா

  மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரித்திவிராஜ். தமிழில் மொழி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். இவர் இயக்குனர் அவதாரம் எடுத்த திரைப்படம் ‘லூசிபர்’. இப்படம் அரசியல் மற்றும் ஆக்‌ஷன் கலந்த கதையாகும்,...

  ஆஸ்காருக்கு போகும் ‘ஜல்லிக்கட்டு’ – இந்திய மொழி படங்களில் தேர்வு

  கடந்த சில வருடங்களாகவே மலையாளத்தில் சிறப்பான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கும் புதிய இயக்குனர்கள் அதிகரித்துள்ளனர். அந்த வரிசையில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு.மனிதனுக்குள் இருக்கும் ஆதி மனிதனின் குணத்தை இப்படம்...

  வைணவ ஆலயங்களில் தல விருட்சம் உண்டா?

  அடுத்த ஆண்டு நாம் அத்திகிரியின் அத்தி வரதரை சேவிக்க இயலும்.கோழிகுத்தியின் நெடிதுயர்ந்த அர்ச்சைத் திருமேனியும் அத்தியால் அமைந்ததே. வேதக் கிரியைகளிலும் அத்திக்கு இடமுண்டு.

  puri jagannath
  தல விருட்சம் குறித்து எழுதியதில் விண்ணகரங்களில் தல விருட்சங்கள் இல்லையென்பதை ஒருசில அன்பர்கள் குறையாக உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது; அதில் குறையேதுமில்லை.
  வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இயல்புதான். சிவாலயம்போல்  விண்ணகரங்களில் கர்ப்பூர ஹாரதியைக் கண்ணில் ஒற்றிக்கொள்ள முடியாது; நவக்ரஹ சந்நிதி விண்ணகரங்களில் இருக்காது, கூடலழகர் ஆலயம் விதிவிலக்கு; பல விண்ணகரங்களில் அர்த மண்டபத்தினுள் நின்றுகொண்டு கருவறை மூலவரை அருகில் சேவிக்கலாம்; சிவாலயங்களில் அது இயலாது. ஒற்றுமைகளும் உள்ளன. நவராத்ரி ஆராதனைகள் அம்பிகைக்கும் உண்டு; விண்ணகரத்தில் தாயாருக்கும் உண்டு. பஞ்சபர்வம் எனும் உலா சிவாலயங்களில் இல்லை. மூலவர் சிவலிங்கம் சுயம்பு மூர்த்தமாக மண்ணால் அமைந்திருக்கலாம்; மாலவனின் மூர்த்தம் மரத்தாலும் அமைவதுண்டு.

  தல விருட்சம் விண்ணகரங்களில் இல்லை; ஆனால் மாலவனையும் மரத்தையும் வேறுபடுத்த இடமில்லை.

  கீதையில் உயர்ந்த பல விபூதிகளைக் கூறிவரும் கண்ணபிரான் மரங்களையும் தம் விபூதிகளாக மதித்துத் தம்மை அவற்றுள் அரச மரமாகக் கூறிக்கொள்கிறார் – அஶ்வத்த₂: ஸர்வ வ்ருʼக்ஷாணாம்…..

  மாலவனின் ஆயிரம் நாமங்களுள் அவனுக்குப் பரத்வம் கூறும் நாமங்கள், ஆற்றலை வெளிப்படுத்தும் நாமங்கள், அழகைப் புகழும் நாமங்கள் பலவற்றின் நடுவில் அவனை மரங்களாகவும் சில நாமங்கள் விவரித்துள்ளன-
  நயக்ரோத:, உதும்பர:, அச்வத்த: இவை மூன்றும் மரத்தின் பெயர்கள்-

  ॐ न्यग्रोधाय नम: । [ஆல்]
  ॐ उदुम्बराय नमः। [அத்தி]
  ॐ अश्वत्थाय नमः। [அரசு]

  ஆல், அத்தி, அரசு மூன்றும் வைஷ்ணவ அம்சம் பொருந்தியன. ப்ரயாகையின் விஷ்ணு ஸாந்நித்யம் பெற்ற வட வ்ருக்ஷம் பித்ருக்களுக்கு நிழலளிக்கிறது – அக்ஷயவட சாயாயாம்….

  அத்தி மரத்தால் அச்சுதனுக்குத் திருமேனி அமையலாம் என ஆகமங்கள் கூறும். காஞ்சிப் பேரருளாளரின் பழைய அர்ச்சை அத்திமரத்தால் அமைந்திருந்தது; இன்று புஷ்கரிணிக்குள் உள்ளது. அடுத்த ஆண்டு நாம் அத்திகிரியின் அத்தி வரதரை சேவிக்க இயலும்.கோழிகுத்தியின் நெடிதுயர்ந்த அர்ச்சைத் திருமேனியும் அத்தியால் அமைந்ததே. வேதக் கிரியைகளிலும் அத்திக்கு இடமுண்டு.

  திருக்கோவலூர் ஆயனார் தாருவால் ஆன பேரம் என அன்பர் திரு Jagan Nathதெரிவிக்கிறார். ஸாலக்ராம மூர்த்தியான கண்ணபிரானும் இங்குள்ளார்.

  ஸ்ரீ ஜகந்நாத புரியின் மூலவர் தாருமயமானவர். ’…..யத் தாரு ப்லவதே ஸிந்தோ: பாரே அபூருஷம்’ [ரிக் வேதம்], வேதம் உருவ வழிபாட்டைச் சொல்லவில்லை என்பர் ஆராய்ச்சியாளர்; நம்பித்தானே ஆக வேண்டும். ‘ஜகந்நாத தாரோ ஹரே..’எனப் பாடுவர். ‘ஏ மரமே’ என நம்மை விளித்தால் நாம் கோபித்துக் கொள்ளுவோம். [தமிழகத்தின் ஜகந்நாத புரி ‘திருமழிசை’. அர்த ஜகந்நாதம் என்பர்]

  நெல்லி மரமும் நாராயண ஸாந்நித்யம் பெற்றதே-
  கரு நெல்லி மேனியரி மருகோனே
  கன வள்ளியார் கணவ முருகேசா
  திருவல்லிதாயம் அதில் உறைவோனே!
  என அருணகிரிநாதர் பாடுவார்.

  ஆமலகீ ஏகாதசி நோன்புகளுள் முக்கியம். ஸ்ரீ ப்ருந்தாவந த்வாதசியன்று நெல்லிக்கும், துழாய்க்கும் விவாஹம் நடத்தி வழிபடுவர், நெல்லி நாராயண வடிவம் என்பதால். தமால வ்ருக்ஷத்தைக் கண்ணன் திருமேனிக்கு உவமை கூறுகிறது பக்தி இலக்கியம் – தமால ஶ்யாமல ஆக்ருதயே நம:

  கண்ணன் வளர்ந்தருளியதே யமுனா தீரமான மதுவனப் பகுதியில்தான் – ’கற்றினம் மேய்த்தான், காடுவாழ் சாதியானான், பற்றி உரலிடை ஆப்புண்டு அழுதான்’ என்றன்றோ சிசுபாலன் அவனைப் பலவாறாக ஏசியது.

  ராமாயணத்தின் பெரும்பான்மை நிகழ்ச்சிகள் வனத்தில்தான்; ஸ்வாமி நிகமாந்த மஹாதேசிகனின் திரு உள்ளத்தை அணிமணிகளணிந்த நாகரிகமான ஸாகேத ராமனைக் காட்டிலும் வனத்தில் ‘தண்டகா தபோவந ஜங்கம பாரிஜாத’மாகத் திரிந்த தவசியான- சீர ஜடாதரனான இராமபிரானே மிகவும் கவர்கிறார்போல. பாரளந்த பரமன் பக்தர்களுக்குப் பாரிஜாதத்தரு.

  வைணவத்தின் உயிர்நாடியான திருவஷ்டாக்ஷரம் தோன்றியதே பதரீவனத்தில்தான்; பதரீவனம் – இலந்தைக் காடு.

  பதரி, புரி போன்ற விஷ்ணு ஸ்தலங்களை சைவ புராணமான ஸ்கந்த புராணமும் போற்றுகிறது; ஸ்காந்தத்தின் ஏழு காண்டங்களுள் ஒன்று ‘வைஷ்ணவ காண்டம்’.

  ‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்பது தண்டமிழ் இலக்கியம்; நைமிசாரண்யம் நாரண வடிவம் என்பது புராணம். பதினெண் புராணங்கள் மாமுனிவர்களுக்குச் சொல்லப்பட்டது நைமிச வனத்தில்தான்.

  சம்பகாரண்யம் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் உறையும் தலம் – இன்றைய ராஜமன்னார்குடி.

  Latest Posts

  புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் போலீஸ் நிலையத்தில் மீட்பு குழுக்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்து எஸ்பி ஆய்வு செய்தார்புதுக்கோட்டை அருகே அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் உள்ள புயல் மீட்பு குழுவினரை புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி...

  புதுக்கோட்டை அருகே கட்டுமாவடியில் கண்காணிப்பு அலுவலர் புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்தார்.

  புதுக்கோட்டை அருகே கட்டுமாவடியில் கண்காணிப்பு அலுவலர் புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்தார்.புதுக்கோட்டை அருகே கட்டுமாவடியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷம்பு கல்லோலிகர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் விசாரித்து செய்துள்ள பணிகள்...

  புதுக்கோட்டை அருகே கோட்டைப்பட்டிணத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார்

  புதுக்கோட்டை அருகே கோட்டைப்பட்டிணத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு செய்தார்தமிழகத்தில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியான கோட்டைப்பட்டிணம் கடற்கரை பகுதியில் புதுக்கோட்டை...

  பஞ்சாங்கம் நவ.26 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்!

  இன்றைய பஞ்சாங்கம் - நவ.26ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~11 (26.11.2020)வியாழ கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம் ~ சுக்ல...
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  Follow Dhinasari on Social Media

  18,038FansLike
  78FollowersFollow
  72FollowersFollow
  967FollowersFollow
  17,300SubscribersSubscribe

  நிவர் புயல்… சென்னை புறநகரில் 20 பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!

  இந்த மாவட்டங்களில் மணிக்கு 65 கி.மீ., முதல் 70 கி.மீ., வரையிலும், ஒரு சில நேரங்களில் 75 கி.மீ., வரையிலும் காற்று வீசக் கூடும்.

  நவ.25: தமிழகத்தில் 1,534 பேருக்கு கொரோனா; 16 பேர் உயிரிழப்பு!

  தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...

  ‘அதுவரைக்கும் இந்தாளு உங்க கட்சியில் இருப்பானானு பாருய்யா’ என்று கமெண்ட் போட்டவரால் பரபரப்பு!

  அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி நின்றால் அவரை எதிர்த்து பாஜக., நேரடியாக போட்டியிடும் என்று அண்ணாமலை

  பிரமனை இரும்பு அறையில் அடைத்த- இரும்பறை- ஓதிமலையாண்டவர்!

  கோவையிலிருந்து சுமார் 50.1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவையிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் இரும்பறை உள்ளது.

  சுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்!

  கடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக

  சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு!

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,

  தேகம் வீழினும் தேசப் பற்றை விடாத குரு தேக் பகதூர் நினைவுநாள்!

  தேக் பகதூர் (தேக் பஹாதுர்) என்றால் வாள் மாவீரன் என்று பொருள். சீக்கிய ஐந்தாவது குருவான குரு ஹர்கோவிந்தின்

  ‘தேசிய’ கண்ணோட்டத்தின் அவசியம்!

  பன்முகத் தன்மையையும் வாசகர் மனதில் நேர்மறை தன்மையையும் விதைப்பதற்கு தேசிய எண்ணம் கொண்ட

  பெண்களுக்கு உயர்வு எங்கே? திமுக Vs பாஜக..!

  திமுக., காட்டும் அவமரியாதையையும் பாஜக., கொடுத்துள்ள இடத்தையும் குறிப்பிட்டு, பெண்களுக்கு மதிப்பளிக்கும் கட்சி எது
  Translate »