கேள்வி:- யோகாசனங்கள் செய்து கொண்டே வந்தால் எத்தனை நாட்களில் யோகி ஆகலாம்?
பதில்:- யோக வித்யை வேறு. யோகாசனங்கள் வேறு. யோகாசனங்கள் செய்வதால் மட்டும் யோகியாகிவிட இயலாது. முறை தவறாமல் யோகாசனம் செய்தால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். அவ்வளவே. ‘யோகஸ் சித்த வ்ருத்தி நிரோதஹ” எங்கிறார் பதஞ்சலி. சித்தத்தின் அலைச்சல்களை அடக்குவதன் மூலம் பரமாத்மாவோடு ஏற்படும் சம்யோகமே ‘யோகம்’ எனப்படுகிறது.
மன அடக்கத்தின் வழியாக தெய்வத்தோடு ஐக்கியமாவது இதன் முக்கிய உத்தேசம். அதற்கு அஷ்டாங்க யோகம் ஆதாரம். யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டு வித வழிமுறைகள் இதில் கூறப்பட்டுள்ளன. அவை உணவு, நடத்தை போன்றவற்றில் நியமத்துடன் புலனடக்கத்தோடு செய்ய வேண்டிய சாதனைகள்.
**
ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…
தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)