திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் அருகே உள்ள நவநீத கிருஷ்ணபுரத்தில் பெரிய அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அதனை முன்னிட்டு காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யாத்ராதானம் , கடம் புறப்பாடும், கோயில் கோபுரத்திற்கு கும்பாபிஷேகம். தீபாராதனை நடைபெற்றது. பின்னர் முப்புடாதிஅம்மன், மாரியம்மன், சிவனனைந்த பெருமாள் , ராமர், சுடலை, பைரவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது பொதுமக்களுக்கு விழா கமிட்டி சார்பில் அன்னதானம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.விழா ஏற்படுகளை திருப்பணிக்குழு தலைரும் ஸ்ரீ முப்புடாதி அம்மன் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான இராஜசேகரன்,மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பொதுமக்கள் செய்திருந்தனர்