கேள்வி:- துருவனுக்கு நாரதர் வாசுதேவ மந்திரத்தை உபதேசம் செய்தார் என்று பாகவதத்தில் உள்ளது. வாசுதேவன் பிறக்கும் முன்பே அல்லவா துருவ சரித்திரம் நடந்தது? வசுதேவனின் புதல்வனான வாசுதேவனின் (கிருஷ்ணன்) நாமம் எப்போதோ நடந்த துருவனின் கதையில் வருவதாகக் கூறுவது சரியா?
பதில்:- ‘வாசுதேவ’ என்றால் ‘வஸத் தீவ்யதே இதி வாசுதேவ:’ – அதாவது ‘சகல ஜீவராசிகளிலும் இருந்து பிரகாசிப்பவன்’ என்று பொருள். விஸ்வம் முழுவதும் வியாபித்துள்ள சைதன்யமே வாசுதேவன். இது விஷ்ணுவுக்குண்டான குண விசேஷப் பொருள். இது மகா மந்திரங்களுள் ஒரு நாமம். இந்த விஷ்ணு மந்திரத்தையே துருவனுக்கு நாரதர் உபதேசம் செய்தார்.
விஷ்ணு எடுத்த கிருஷ்ணாவதாரத்தில் தனக்கு முன்பே இருந்த தன் நாமங்கள் அனைத்துக்கும் வேறு பொருளைக் காட்டி அருளியபடி அவதரித்தார். அதாவது அவரோடு கூட அவருடைய திவ்ய நாமங்களும் அவதரித்தன.
விஷ்ணு, வசுதேவருக்குப் புதல்வனாகப் பிறந்ததால் கிருஷ்ணனுடைய வாசுதேவன் என்ற பெயரோடு கூடிய அவாதார லீலை வெளிப்படுகிறது. அதே நேரடத்தில் விஷ்ணுவுக்குண்டான அர்த்ததையும் நினைவுபடுத்துகிறது.
ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…
தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)