கேள்வி:- சுப்ரமணிய சுவாமியை சர்ப்ப ரூபத்தில் வழிபடுவது எதனால்?
பதில்:- சுப்பிரமணியன் சிவ சக்திகளின் ஏக சொரூபமான குண்டலினீ சக்தி வடிவானவன். பிராண சக்தியின் சொரூபமான குண்டலினீ ஆறு சக்கரங்களில் சஞ்சரித்தபடி சர்ப்பம் போல் ஒளி வீசுவதால் ஆறு முகம் கொண்ட சுப்பிரமணியனாக பாம்பு வடிவில் வழிபடுகிறோம். சுப்பிரமணியன் சர்ப்ப ரூபத்தில் தவம் செய்தாரென்று சில புராணங்கள் தெரிவிக்கின்றன.
வம்ச விருத்திக்கு காரணமான சுப்பிரமணியன் சகல தேவ கணங்களுக்கும் அதிபதி. தெய்வீக சர்ப்பங்கள் இவரைத் தம் நாயகனாக ஏற்று வணங்குகின்றன. சுப்ரமணிய சுவாமியை வழிபடுவதால் சர்ப்ப தோஷங்கள், கிரக தோஷங்கள் நீங்குகின்றன.
ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…
தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.