ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 5 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆடி அமாவசையை முன்னிட்டு இன்று முதல் வருகின்ற 13ஆம் தேதி வரை செல்லலாம் என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துக் காணப் படுகிறது. பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
நேற்று முதல் 13ஆம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமது அளித்துள்ளது. 11ஆம் தேதி ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.