ஸ்ரீ ஜகந்நாதர் : பாகனை மகிழ்விப்பதால் பக்தன் மகிழ்ச்சியடைகிறேன். பக்தனை மகிழ்விப்பதால் பகவானும் மகிழ்ச்சியடைகிறார். இருப்பினும், பகவானைப் புகழ்வதாலும் புகழ்ச்சியைக் கேட்பதாலும் பக்தர்களால் அடையப்படும் அந்தக் குறிப்பிட்ட பரவச நிலையானது பகவானாக இருக்கும் நிலையைக் காட்டிலும் உயர்ந்தது. எனவே, பல தருணங்களில் பகவான் தாமே தம்முடைய புகழ்ச்சியைக் கேட்க விரும்புகிறார். சாதாரண மனிதன் தற்புகழ்ச்சியைக் கேட்பதற்கும் பகவான் தமது புகழ்ச்சியைக் கேட்பதற்கும் இதுவே வேறுபாடு.
இவ்வாறு நிகழ்ந்ததே பகவான் ஸ்ரீ ஜகந்நாதரின் தோற்றம். சாஷாத் கிருஷ்ணராகிய ஜகந்நாதர் ஏன் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார் என்று பலரும் வினவுவது வழக்கம். ஆம், அன்னை ரோகிணி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிருந்தாவன லீலைகளை துவாரகையில் பசித்தவர்களுக்கு எடுத்துரைத்தபோது, அதை மறைந்து நின்று கேட்டார் கிருஷ்ணர். தமது லீலைகைத் தாமே கேட்டதால் எழுந்த அதிபரவச நிலையானது அவரது உடலில் தெய்வீக விகார நிலையை ஏற்படுத்தியது. கண்கள் பெரிதாயின. கைகளும் கால்களும் ஆமையைப் போன்று உள்ளே சென்றன. அந்த தெய்வீகப் பரவசத்தின் தோற்றமே பகவான் ஸ்ரீ ஜகந்நாதர்.
இந்தப் பரவசத் தோற்றத்தை அனைவரும் கண்டு இன்புற்று பயனடையவே பகவான் ஸ்ரீ ஜகந்நாதர் தமது சகோதர சகோதரியுடன் பூரி ஸ்ரீ ஜகந்நாதராய் ரத யாத்திரை வருவது வழக்கம்.
– ஸ்ரீ கிரிதாரி தாஸ், பகவத் தரிசனம்