கரூரில் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியின் 347 வது ஆண்டு ஆராதனை மஹோத்ஸவ விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கரூர் பெருமாள் கோயில் தெருவில் ஜகத்குரு ஸ்ரீமத் மத்வாசார்ய ஸ்வாமி மூல மஹாஸம்ஸ்தான நன்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தில், ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியின் 347 வது ஆண்டு ஆராதனை மஹோத்ஸவ விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நிர்மால்யம், கனகாபிஷேகம், பஞ்சமர்த அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளாமனோர் கலந்து கொண்டு, ஆராதனை மஹோற்சவத்தில் பங்கேற்று ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் அனுக்ரஹத்திற்கு பாத்திரர்களானார்கள்.
இதற்கான முழு ஏற்பாடுகளை நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமி மடம், கரூர் சிறப்பாக செய்திருந்தனர்.