10/07/2020 2:12 AM
29 C
Chennai

திரு நாமம் பாட… திருப்பாவை மாதம்!

சற்றுமுன்...

இந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை!

அரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

திருப்பதி தேவஸ்தானத்தில்… மற்றொரு கிறிஸ்துவ அதிகாரி மோசடி அம்பலம்: சட்டப்படி ஹிந்து; விசுவாசத்தால் கிறிஸ்தவர்!

விசாரணை முடிவடைந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களுடன்….

சாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை!

இந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.

பாலத்தில் இருந்து விழுந்த ஆவின் லாரி… ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்!

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,216 பேருக்கு தொற்று!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,765ஆக அதிகரித்துள்ளது.
andal rangamannar திரு நாமம் பாட... திருப்பாவை மாதம்!
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் ரங்கமன்னார் 

“த்யாயன் க்ருதே, யஜன் யஜ்ஞை: த்ரேதாயாம், த்வாபரே அர்ச்சயன், யதாப்நோதி, ததாப்நோதி கலௌ சங்கீர்த்ய கேசவம்” என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.

இதன் கருத்து க்ருத யுகத்தில் த்யானத்தினாலும் த்ரேதா யுகத்தில் யாக யஜ்ஞங்களாலும் த்வாபர யுகத்தில் பகவானுக்கு செய்யும் அர்ச்சனை யினாலும் எந்த பயனை ஒருவன் அடைகிறானோ அந்தப்பலனை கலியுகத்தில் பகவான் நாராயணனுடைய திருநாம சங்கீர்த்தனம் செய்வதாலேயே அடைந்து விடுகிறான் என்பது.

கலியுகம் மிகக்கொடியதாய் இருந்தாலும் இந்த சுலபமான வழி இதில் இருப்பதனால் மற்ற யுகங்களைக் காட்டிலும் இதுவே உயர்ந்தது என்று வைணவ ஆசார்யர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வளவு பெருமைகள் வாய்ந்த நாமசங்கீர்த்தனத்திற்கான மாதம் பிறந்து விட்டது. ஆம், அதுவே திருப்பாவை மாதம் என்கிற மார்கழி மாதம்.

வேதம் அனைத்துக்கும் வித்தான கோதை தமிழான திருப்பாவை முப்பது பாசுரங்களிலும் பகவானுடைய நாமசங்கீர்த்தனம் உள்ளது. “நாராயணன்”, “பாற்கடலுள் துயின்ற பரமன்”, “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று ஒவ்வொறு நாமமாய் பாடிக்கொண்டு இறுதியில் “வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனை” என்று முடிக்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.

இந்த மாதத்தில் திருப்பாவை பாசுரங்களைப் பாடுவது மிகச்சிறந்த பலன்களைத் தரும். அதிகாலையில் வீதிகளில் ஆண்கள் பெண்கள் முதியவர்கள் சிறுவர்கள் என்று எல்லோரும் திருப்பாவைப் பாசுரங்களை பஜனையாகப் பாடிக்கொண்டு வீதிவலம் வருவார்கள்.

திருக்கோயிலில்களிலும் மடங்களிலும் வீடுகளிலும் அதிகாலை திருப்பாவை பாடி மகிழ்வர். மேலும் பல இடங்களில் திருப்பாவை பாசுரங்களின் அர்த்தத்தை விளக்கும் சொற்பொழிவுகள் நடைபெறும்.

சில இடங்களில் சிறுவர்களுக்கு திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடந்து பரிசுகளும் வழங்கப்படும். ஆக, மார்கழி மாதத்தில் எங்கும் திருப்பாவை, எதிலும் திருப்பாவை என்றபடி இருக்கும். இந்த மார்கழி மாதத்தில் நாமும் திருப்பாவையாகிற நாமசங்கீர்த்தனத்தை செய்து இன்புறுவோம்!

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போயபிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும், செப்பு!

எழுத்து: எம்.வி. மதுசூதனன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad திரு நாமம் பாட... திருப்பாவை மாதம்!

பின் தொடர்க

17,866FansLike
78FollowersFollow
70FollowersFollow
904FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

சமையல் புதிது.. :

சினிமா...

பிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், Source: Vellithirai News

‘அழகு’ அப்சரா ராணியை கண்டுபிடித்து… ஒடிஸாவை மீண்டும் கண்டறிந்த கிளுகிளு இயக்குனர்!

அப்சராவின் புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பும் கிளுகிளுப்பும் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஆர்ஜி வர்மா.

பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை!

நடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார்

சிரஞ்சீவி சர்ஜா நாங்கள் சிரிக்கிறோம்: மேகனா ராஜ்!

குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சிரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...