
பக்கத்தில் உள்ள ப்ரயாகை
by Sri #APNSwami
????????????????????????????????????????????????
தைப் பொங்கல் திருநாளின் மறுதினம், கனு பார்வேட்டை எனும் உத்ஸவம் கோவில்களில் நடைபெறும். இதற்கு பரிவேட்டை, பார்வேட்டை என்று பல பெயர்களுண்டு. காஞ்சி வரதனும் செங்கல்பட்டிற்கு அருகேயுள்ள த்ரிவேணீ (பாலாறு, செய்யாறு, வேகவதீ) சங்கமமான பழைய சீவரம், திருமுக்கூடலுக்கு எழுந்தருளுகிறான். இந்த வைபவம் ப்ரஹ்மாண்ட புராணத்தில், விஷ்ணுசித்தர் எனும் மஹர்ஷிக்கும், மரீசி முனிவருக்கும் உரையாடலாக அமைந்துள்ளது.
சுதர்ஸந கிரி எனும் இந்த பத்ம மலையில் (பழைய சீவரம் மலையில்), க்ருஷ்ண சர்மா எனும் யோகி ஒருவர் தவம் செய்தார். ப்ரயாகை சென்று த்ரிவேணீ (கங்கா, யமுனா, ஸரஸ்வதீ) சங்கமத்தில் நீராட முடியாத அவருக்காக, இம்மூன்று நதிகளும் இங்கே ஒன்றாக ப்ரவகித்து சங்கமித்தன.
யஸ்மாத் வேங்கடநாயக: நரஹரி: லக்ஷ்ம்யா ஸமேதௌ ச தௌ
தத்தீரே உபய பார்ச்வதச்ச திவிஜை: தேவை: மஹீபாலகை: |
ஸர்வை: தேசிகவர்ய பூசுரவரை: ஸம்ஸேவிதௌ ஸர்வதா
ஸாந்நித்யம் ச கரிஷ்யத: கலியுகே தீரே த்ரிவேண்யா: சுபே ||
“பாலாறு, செய்யாறு, வேகவதீ நதிகளின் இந்த சங்கமம் கங்கை, யமுனை, ஸரஸ்வதீ சங்கமத்தை விட மேலானது. இதன் இருகரைகளிலும் ஸ்ரீநிவாஸன், ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மன் மற்றும் ஆசார்ய புருஷர்களும் வசிக்கின்றனர். இக்கலியுகத்தில், பக்கத்தில் உள்ள ப்ரயாகையாக இந்த சங்கம க்ஷேத்ரம் சிறந்து விளங்குகிறது“.
“இதில் நீராடி, மக்கள் அனைத்து செல்வங்களையும் அடைகின்றனர். மேலும், சூரியன் மகர ராசியை அடைந்தவுடன், ஹஸ்திகிரி நாதனாகிய வரதன், இங்கு எழுந்தருளி திருப்பார்வேட்டை மஹோத்ஸவம் கண்டருளப் போகிறான்“ என்றும் மரீசி உரைக்கிறார்.
யஸ்மாத் ஹஸ்திகிரீச்வரோபி மகரம் யாதேச பாநௌ கிரௌ
பத்மாக்யே மஹதிம் ச்ரியம் ச ஜகதாம் குர்வந் த்ரிவேண்யா: தடே |
ஆகேரோத்ஸவம் அத்புதம் த்ரிஜகதாம் ஆநந்ததம் ஸந்ததம்
பச்யத்பி: திவி தேவதை: விஜயதே பூபாலகை: பூசுரை: ||
இதே மாஹாத்ம்யத்தில், மேற்கொண்டு விஸ்தாரமாக, ஸ்ரீபாஷ்யகாரர், ஸ்வாமி தேசிகன் முதலானோரின் அவதாரம் குறித்த செய்திகளும் நிறைந்துள்ளன. நாமும் த்ரிவேணீ சங்கமத்தில் பார்வேட்டையில் வரதனை சேவித்து பாக்யம் பெறலாம்.
விஜய் தொலைக்காட்சியின் “தபோ வனம்” நிகழ்ச்சியிலும், சங்கரா தொலைக்காட்சி “நதி மூலம்” நிகழ்ச்சியிலும், பல ப்ரமாணங்களுடன் இச்சங்கமம் குறித்து விளக்கியுள்ளோம். தொடரும் மணற்கொள்ளைகளால் வறண்டு கிடக்கும் இந்நதிகள், இனியாவது வளம் பெறுமா? நம் மனம் மாறி, நாம் இதற்கு முயலுவோமா?
எதிர்பார்ப்புடன்
ஏ.பி.என்
Sri #APNSwami
இது போன்ற கட்டுரைகளைப் படிக்க… https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான் ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/ மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்…உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்…