பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் வந்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கும்ப மேளா நடைபெறும் இடத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு பணியில் இருந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு பாத பூஜை செய்தார்.
கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜில் கங்கையில் புனித நீராடி நெற்றியில் திருநீறு சந்தனம் துலங்க, பாரம்பரிய ஹிந்து மத நெறிப்படி, கங்கைக்கு ஹாரத்தி காட்டி, வழிபட்டார் பிரதமர் மோடி.
இதுவரை எந்தப் பிரதமரும் செய்யத் துணிந்திராத, செய்திராத ஹிந்து மத அடையாளங்களுடன், நெற்றி நிறைய விபூதியும், காவி உடையும் தரித்து கங்கைக்கு ஆரத்தி செய்து மகிழ்ந்தார் பிரதமர் மோடி.
மேலும், துப்புரவுப் பணியாளர்க்கு பாத பூஜை செய்தும் வித்தியாசமான பிரதமர் தாம் என்பதை நிரூபித்தார்.
முன்னதாக, கும்பமேளா நடைபெறும் கங்கையில் புனித நீராடினார் பிரதமர் மோடி. அப்போது, 130 கோடி இந்தியர்களின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்வதாகவும், அனைவரும்ம் சகல நலன்களும் பெற்று வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும் குறிப்பிட்டார் பிரதமர் மோடி.
Had the good fortune of taking a holy dip at the #Kumbh. Prayed for the well being of 130 Crore Indians. pic.twitter.com/jTI2QbmWxb
— Narendra Modi (@narendramodi) February 24, 2019
தொடர்ந்து ஸ்வச் கும்ப், ஸ்வச் ஆபார் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சரும் கங்கை நதி தூய்மைப் பணியில் தன்னை முழுதும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளவருமான உமாபாரதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Addressing the ‘Swachh Kumbh, Swachh Aabhaar’ programme in Prayagraj. https://t.co/1YKbkyiET2
— Narendra Modi (@narendramodi) February 24, 2019