“பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்.”

“பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்.”
 
‘ஒற்றுமையும் அன்பும்’
 
( கல்கியில் வந்த அருள் வாக்கு)
 
இப்போது ஊருக்கு ஊர், பேட்டைக்குப் பேட்டை பஜனை கோஷ்டி இருக்கிறது. இந்த கோஷ்டிக்காரர்களே வார வழிபாட்டையும் மற்ற பரோபகார காரியங்களையும் எடுத்து நடத்த வேண்டும். ச்ரத்தையாக உழைக்க கூடியவர்கள், பண விஷயத்தில் நாணயமாக இருக்கக் கூடியவர்கள், ‘இவர்கள் சுத்தமானவர்கள்’ என்று ஸமூஹத்துக்கு நம் பகமாக இருக்கிறவர்கள் ஒரு பத்து பேர் அங்கங்கே சேர்ந்துவிட்டால் போதும். ஊர் உலகத்தில் ஒரு குறைவில்லாமல் பொதுநலக் காரியங்கள் ஜாம்ஜாம் என்று நடந்துவிடும்.
 
பணியில் சேர்கிறவர்கள், பணியால் பயனடைகிறவர்கள் (Benefi-ciaries) இரண்டிலும் ‘ஜாதி’ என்ற அம்சமே இருக்கக் கூடாது. பணக்காரன் ஏழை, படித்தவன்-படிக்காதவன் எல்லோரும் ஒன்றுசேர்ந்து செய்கிற முறையில் இது ஒன்றிலாவது நேராகவோ, மறைமுகவோ ‘கம்யூனல் ரெப்ர ஸென்டேஷன்’ (ஜாதிவாரிப் பிரதிநிதித்வம்) இல்லாமல் காரியம் நடக்க வேண்டும்.
 
ஜாதிகளையெல்லாம் ஒன்றாக்க வேண்டும் என்று ஆரம்பித்தால்தான் சண்டை ஜாஸ்தியாகிறது! ஆரியன்-திராவிடன் பேதமில்லை என்று சொல்லி ஸௌஜன்யத்தை உண்டாக்க வேண்டும் என்று நல்லெண்ணத்தோடு ஆரம்பித்தால் கூட, உடனே இதற்கு ஹிஸ்டாரிகலாக (சரித்திரபூர்வமாக), எத்னாலாஜிகலாக (இன-இயல்-ரீதியில்) ஆக்ஷேபணைகள் வந்து ஒரே வாதச் சண்டையாகிறது!
 
ஆனதால் வர்தத்தால் ஒற்றுமையை ஸ்தாபிக்க யத்தனம் செய்யமால், ஒற்றுமைக்காகப் பாடுபடுகிறோம் என்றுகூட இல்லாமல், இப்படிப் பல பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்
-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...