“நான் சொல்ற ரெண்டு குழந்தைகளுக்கு நீ குச்சி ஐஸ் வாங்கித் தர்றியா?” (ஏழைக் குழந்தை ஐஸ் சாப்பிட பெரியவாளின் நாடகம்)

“நான் சொல்ற ரெண்டு குழந்தைகளுக்கு நீ குச்சி ஐஸ்
வாங்கித் தர்றியா?”
 
(ஏழைக் குழந்தை குச்சி ஐஸ் சாப்பிட பெரியவாளின் நாடகம்)
18447114 1559899367388556 7694072310003761245 n 2 - Dhinasari Tamil
கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன்
தட்டச்சு வரகூரான் நாராயணன்
 
குழந்தைகள் என்றாலே மகா பெரியவாளுக்கு அத்தனை இஷ்டம். அவர்களைத் தன் அருகே காந்தம் போல் இழுத்து, அவர்களுடன் நகைச்சுவையாகப் பேசிக் கவர்ந்து விடுவார்.
 
அந்தத் தெய்வத்திடமும் குழந்தைகள் மயங்கிப் போய் விடும். குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கென்று மகா பெரியவாளிடம்
எப்போதும் கல்கண்டு ஸ்டாக் இருந்து கொண்டே இருக்கும்.
 
ஒரு முறை மகா பெரியவா காமாட்சி அம்மனைத் தரிசித்து விட்டு காஞ்சி ஸ்ரீமடத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீமடத்தின் வாசலில் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த சிறு குழந்தை (நாலைந்து வயது இருக்கலாம்)
ஒன்று குச்சி ஐஸைக் கையில் வைத்துக்கொண்டு
ரசித்து சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
 
ஸ்ரீமடத்தின் உள்ளே நுழையப் போன மகா பெரியவா,
வாசலில் நின்று கொண்டு இந்தக் குழந்தை குச்சி ஐஸ் சாப்பிடும் அழகைப் பார்த்து மேலும் நகராமல் அப்படியே நின்று விட் டார். ஆனால் குழந்தை வேறு எங்கோ பார்த்தபடி ஐஸை நக்கிக் கொண்டிருந்தது.
 
ஒரு சொடக்குப் போட்டுக் குழந்தையின் பார்வையைத் தன் பக்கம் திருப்பிய மகா பெரியவா, “என்ன,ஐஸ் சாப்பிடறியா” என்று மழலை பாஷையில் கேட்டார்.
 
“ஆமா….” என்று மழலையில் துடுக்கத்தனமாகப் பதில் சொன்ன குழந்தை, “இருங்கோ…ஒங்களுக்கும் ஒரு ஐஸ் வாங்கித் தரட்டா?” என்று ஆர்வ மிகுதியில் கேட்டு விட்டது.
 
மகா பெரியவாளின் கைங்கர்யத்தில் இருந்த சிப்பந்திகளும் மகானைத் தொடர்ந்து வந்த ஒரு சில பக்தர்களும் அந்தக் குழந்தையை அடக்கும் வகையில் ஏதோ சொல்ல வாய் திறக்க..
அவர்கள் அனைவரையும் கை தட்டி ‘ஸ்ஸ்ஸ்..’ என்று அடக்கி விட்டார் மகா பெரியவா.
 
தான் கேட்ட கேள்விக்கு மகா பெரியவா ஏன் இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறார் என்று யோசித்த குழந்தை, தான் குச்சி ஐஸ் வாங்கித் தந்தால் மகா பெரியவா சாப்பிடமாட்டார்
போலிருக்கிறது என்று தீர்மானித்து விட்டது. உடனே, மகா பெரியவா மேல் கோபம் கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டது. ஆனாலும் ஐஸை சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவில்லை.
 
இந்த ரசமான காட்சிகளை மகா பெரியவா உட்பட அங்கு கூடி இருந்த அன்பர்கள் பலரும் ரசிக்கத்தான் செய்தார்கள்.
 
மீண்டும் ஒரு சொடக்குப் போட்டுக் குழந்தையின் பார்வையைத் திருப்பி, “என்ன குழந்தே… கோபமாயிட்டே போலிருக்கு… நான் எனக்குதான் வேண்டாம்னுதான் சொன்னேன். சரி….நான் சொல்ற ரெண்டு குழந்தைகளுக்கு நீ குச்சி ஐஸ்
வாங்கித் தர்றியா?”என்று மிகவும் சாந்தமான குரலில் அந்தக் குழந்தையின் முகம் கோணாத வகையில் அமைதியாகக் கேட்டார் மகா பெரியவா.
 
இந்தக் குழந்தையின் பெற்றோர் அநேகமாக ,ஸ்ரீமடத்துக்குள் மகா பெரியவா தரிசனத்துக்காகக் காத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. குழந்தை ஐஸ் கேட்டதால், கையில் காசை கொடுத்து அனுப்பி விட்டார்கள். போலிருக்கிறது. தனக்கு ஐஸ்
வாங்கியது போகக்கையில் கொஞ்சம் காசும் மிச்சம் வைத்திருந்தது.
 
மகா பெரியவா கேட்டதும் அந்தப் பெண் குழந்தையின் முகத்தில் ஒரு சந்தோஷம். “சொல்லுங்கோ…நானே வாங்கித் தர்றேன்” என்றது.
 
உடனே ஸ்ரீமடத்தில் அப்போது பணியில் இருந்த மேலே சொன்னபணியாளரின் இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்து வரச்சொன்னார். ஒரு சிப்பந்தி ஓடிப் போய், ஸ்ரீமடத்தின் உள்ளிருந்துஅந்த இரு பெண் குழந்தைகளையும் சட்டென்று அழைத்து வந்தார்.
 
மகா ஸ்வாமிகள் அருகே அவர்கள் வந்தவுடன்,
“”தோ…இந்த ரெண்டு பேர்தான் நான் சொன்னவா. இவர்களுக்கும்குச்சி ஐஸ் வாங்கிக் கொடேன், சாப்பிடட்டும்” என்று சொல்ல…அந்தப் பணக்கார வீட்டுப் பெண் குழந்தை வாசலின் அருகே நின்று கொண்டிருந்த ஐஸ் வண்டிக்கு அருகே ஓடிச் சென்றுவாங்கிக்கொண்டு வந்து கொடுத்தது.
 
பணியாளரின் இரண்டு குழந்தைகளும் முகத்தில் மகிழ்ச்சி பொங்கஅந்தக் குச்சி ஐஸை வாங்கிச் சப்பி சாப்பிட ஆரம்பித்தன.
 
மகா பெரியவா முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம். பணக்கார வீட்டுக் குழந்தையும்,ஏழையின் இரண்டு குழந்தைகளும் ஒருசேர ஐஸ் சாப்பிடும் அழகை ஒரு சில நிமிடங்களுக்கு நின்று வேடிக்கைப் பார்த்தார் மகா பெரியவா.
 
“பாவம்…இந்த வேலைக்காரனோட குழந்தை எல்லாம் குச்சி ஐஸைப் பாத்திருக்குமா…இல்லே, இது போன்ற தின்பண்டங்களைத்தான் வாங்கிச் சாப்பிட்டிருக்குமா?” என்று ஸ்ரீமடத்தின் சிப்பந்திகளைப் பார்த்துச் சொல்லி விட்டு,
விடுவிடுவென ஸ்ரீமடத்தினுள் நுழைந்தார்.
 
‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ என்ற கோஷம் முழங்க பக்தர்கள் கூட்டம் அவரைப் பின் தொடர்ந்து உள்ளே சென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Latest Posts

spot_imgspot_img

Follow Dhinasari on Social Media

19,153FansLike
373FollowersFollow
64FollowersFollow
0FollowersFollow
2,525FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-