கருட புராணத்தின் படி ஒருவர் பொய் கூறுவதை இந்த அறிகுறிகள வைச்சு ஈஸியா கண்டுபுடிச்சிரலாம்…!

கருட புராணத்தின் படி ஒருவர் பொய் கூறுவதை இந்த அறிகுறிகள வைச்சு ஈஸியா கண்டுபுடிச்சிரலாம்...!

 

மாறிவிட்ட இந்த உலகில் பொய்க்கென ஒரு தனிமதிப்பு உருவாகிவிட்டது. நமக்கு வேண்டிய காரியங்களை சாதித்து கொள்ள பொய் கூறினால்தான் முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது இல்லை உருவாக்கப்பட்டுவிட்டது என்றே கூறலாம். உண்மைக்கென இருக்கும் மரியாதை குறைந்து கொண்டே வருகிறது.

நம்மை சுற்றியிருப்பவர்களில் யார் பொய் கூறுகிறார்கள், யார் உண்மையை கூறுகிறார்கள் என்பதை கண்டறிவது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் அதனை எப்படி எளிதில் கண்டறிவது என்பது பற்றி கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவில் பொய் பேசுவதை கண்டறிய கருட புராணம் வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

கருட புராணத்தின் படி ஒருவர் பொய் கூறுவதை இந்த அறிகுறிகள வைச்சு ஈஸியா கண்டுபுடிச்சிரலாம்…! கருடருக்கும், விஷ்ணுவுக்குமான உரையாடல்
கருட புராணம் என்பது விஷ்ணுவுக்கும், கருடருக்கும் நடந்த உரையாடலை பற்றி கூறுவதாகும். கருடர் என்பது ஒருவகை பறவையாகும். இது விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியாகும். இது இந்து மதத்தின் குறிப்பிட்ட கோட்பாடுகளை பற்றி கூறுகிறது. இதில் மரணம், மறுபிறப்பு, மரண சடங்குகள் போன்றவற்றை பற்றி விரிவாக கூறுகிறது.

இந்து மதத்தின் 18 மஹாபுராணங்களில்இதுவும் ஒன்றாகும். விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் இது வைணவ இலக்கியத்தின் கீழ் வருகிறது. இது முழுக்க முழுக்க விஷ்ணுவை பற்றிய புராணமாகும்.

பொய் கலை

பொய் கூறுவது என்பது ஒரு கலையாகும். நன்றாக பொய் சில தெரிந்தவர்கள் எப்பொழுதும் அவர்கள் உருவாக்கிய கட்டுக்கதைகளிடம் இருந்து விலகி இருக்கத்தான் முயலுவார்கள். பொய் கூறுபவர்கள் அனைத்தையும் கச்சிதமாக செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் கண்டறிவது எப்படி? அவர்கள் மனதில் என்ன இருக்கிறது? அவர்கள் எதை மறைக்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது.

பொய் கூறுபவர்களின் உடல் மொழி

மக்கள் அரிதாகவே மற்றவர்கள் பொய் கூறுவதை கண்டுபிடிக்கிறார்கள். கருட புராணம் பொய் கூறுவது யார், உண்மை சொல்பவர்கள் யார் என்பதை கண்டறியும் ரகசியத்தை கொண்டுள்ளது. அவர்கள் பொய் கூறுவதை அவர்களின் உடல் மொழியே காட்டிக்கொடுத்துவிடும்.

உயரம் மற்றும் உடலமைப்பு

முக்கியமான விஷயத்தை பற்றி பேசும்போது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களின் உடல்மொழியை கவனித்தால் அவர்கள் மனதில் என்ன ஓடுகிறது என்பதை கண்டறிந்து விடலாம்.

ஒருவேளை அவர்கள் அசௌகரியமாக உணர்ந்தாலோ அல்லது உங்களிடம் பொய் கூறினாலோ அவர்களின் தோள்பட்டை கீழ்நோக்கி இருக்கும்.

எந்த தலைப்பாக இருந்தாலும் அவர்கள் பொய் கூறினால் அது அவர்கள் உடலியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

உடலின் சைகைகள்

சிலருக்கு மற்றவர்களிடம் பேசும் போது ஒரு கை அல்லது இரண்டு கையையும் தூக்கி பேசும் பழக்கம் இருக்கும்.

இது அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக இருக்கும். சிலர் அவர்களின் கால்களின் நிலையை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

இது கட்டளையிடும் தோரணையின் அடையாளமாகும். ஒருவர் பொய் கூறினாலோ அல்லது விவாதம் பிடிக்காவிட்டாலோ அவர்கள் தொடர்ந்து தங்களின் சைகைகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

பொய் கூறுபவர்கள் எப்பொழுதும் அவசரமாக நடந்து கொள்வார்கள்.

தேவையற்ற பதட்டம்

ஒருவர் பொய் கூறுவது உங்களுக்கு தெரிந்தால் அவர்களின் உடல் இயக்கங்களை நன்கு கவனித்து பாருங்கள். அவை தொடர்ந்து பதட்டத்தில் இயங்கி கொண்டே இருக்கும்.

ஒருவர் மிகவும் சாதாரணமாக இருந்தாலோ அல்லது அமைதியற்றவர்களாக இருந்தாலோ அவர்கள் உங்களிடம் எதையோ மறைக்கிறார்கள் அல்லது பொய் கூறுகிறார்கள் என்று அர்த்தம்.

கண் அசைவுகள்

அவர்கள் உங்களிடம் பேசும் விதத்தை கவனியுங்கள், அவர்கள் உங்களின் கண்களை பார்த்து பேசாமலோ அல்லது கண்களை மூடிக்கொண்டே இருந்தாலோ அவர்கள் உங்களிடம் உண்மையை மறைக்கிறார்கள் அல்லது நீங்கள் பேசுவதில் உங்களுக்கு விருப்பமில்லை என்று அர்த்தம். இதற்கு அர்த்தம்.

அவர்கள் உங்களிடம் இருந்து கேட்க விரும்புகிறார்களே தவிர எதையும் பதிவு செய்துகொள்ள விரும்பவில்லை என்று அர்த்தம்.

சோர்வு

நீங்கள் ஒருவரிடம் பேசும்போது அவர்கள் சோர்வாக காட்சியளித்தால் அவர்கள் நிச்சயம் உங்களின் பேச்சில் ஆர்வம் காட்டவில்லை என்று அர்த்தம். ஒருவேளை அவர்கள் ஆர்வமாக இருப்பது போல நடித்தாலும் அது பொய்யானதுதான்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...