“என்னை ஈசுவரனா நினைச்சுண்டு சொல்றா, சொல்லட்டுமே!”
(சொந்தக் குடும்பப் பிரச்சனை சொல்கிறர்களைப்பற்றி மெய் சிலிர்க்கும் பல அனுபவங்கள் இக்கட்டுரையில்)
சொன்னவர்-ஆர் ராமமூர்த்தி சாஸ்திரிகள்

தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
பிரும்மஸ்ரீ ஆர். ராமமூர்த்தி சாஸ்திரிகள் மகாதானபுரம் பாடசாலையில் அத்யயனம் செய்தவர். மந்தமான புத்தி, அத்துடன் திக்குவாய்! பேசும்போதுதான் திக்கும்.மந்திரம் சொல்லும் போது எவ்விதத் தடங்கலும் இருக்காது. பிழைப்புக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே? வைதீகம்பண்ணி பிழைக்க முடியாது.இவரை யாரும் கூப்பிட்டு ஆதரிக்க மாட்டார்கள்.
இருபத்தி நான்கு வயதானபோது 1957-ல் ஸ்ரீமடத்தில் சேர்ந்து விட்டார். தந்தை,’இவன் ஒண்ணுக்கும் பிரயோஜனமில்லே,புத்தி மந்தம் ,மடத்திலே ஏதாவது கைங்கர்யம் பண்ணிண்டிருக்கட்டும்’ என்று, மகா சுவாமிகளிடம் விக்ஞாபித்துக் கொண்டார்,தகப்பனார்.
:வஸ்திரம் தோய்த்து உலர்த்து’ மூகபஞ்சசதி படி” என்று மகாஸ்வாமிகள் உத்திரவிட்டார்.
ஸ்ரீ சாஸ்திரிகளுடைய கைங்கர்யம் இன்றும் தொடர்கிறது. மகாப் பெரியவாளைப் பற்றிச் சொல்லும்போதே, முகம் மலர்ந்து போகிறது.
“ரொம்ப ஆனந்தமான காலம்!…ரொம்ப பாக்யம்! அவர் சொன்னபடி, அப்பப்போ, மூக பஞ்சசதீ படிப்பேன். திக்குவாய் போன இடம் தெரியல்லே! அவா அனுக்ரஹம்.
ஒரு நாளைக்கு ஐந்தாறு தடவை குளிப்பார்.(பெரியவா) அப்போவெல்லாம், நாங்க காகிதத்தைத் தொட்டால் கூட விழுப்பு! காகிதத்தைத் தொட்டுட்டா, நாங்க ஸ்நானம் பண்ணணும்!.
தரிசனம் பண்ண வரவாளெல்லாம், சொந்தக் குடும்பப் பிரச்சனைகளையெல்லாம் சொல்லுவா-
“மாடு கன்னு போடணும்.
பிள்ளை ஊர் சுத்திண்டு இருக்கான், திருந்தி வரணும்.
குத்தகை கொடுக்க மாட்டேங்கிறான்’
இப்படியெல்லாம் அவா சொல்றதை, மகாப் பெரியவா பொறுமையா கேட்டிண்டிருப்பா.
“என்னை ஈசுவரனா நினைச்சுண்டு சொல்றா, சொல்லட்டுமே!” என்றார்.
சில சந்தர்ப்பங்களிலே, தரிசனார்த்திகள் நிறையப் பேர் வந்துட்டா, பூஜைக்கு நேரமாயிடும். ‘பூஜைக்கு நாழியாகிறதே’ என்றால், “ஆகட்டும், இவ்வளவு பேரும் எங்கிருந்தோ வந்திருக்கா. அவாளுக்குத் திருப்தி ஏற்பட வேண்டாமா?” என்பார்.
1980லேர்ந்து எனக்கு வயிற்றுவலி. “இப்படியே ஓட்டு”ன்னார் மகா பெரியவா. 89லே, வயிற்று வலி தாங்க முடியல்லே. டாக்டர் பார்த்துட்டு, ஆபரேஷன் பண்ணிக்கோ-ன்னார். பெரியாவாகிட்ட சொன்னேன். “ஆபரேஷன் பண்ணிக்க வேண்டாம்-னுட்டார்.
‘பெரியவா உச்சிஷ்டத்தைச் சாப்பிடு’;ன்னு ஒரு சிஷ்யர் சொன்னார்.
அதன்படி, ஒரு நாள் பெரியவா பிக்ஷை ஆனதும் அவா சாப்பிட்ட இலையிலே மிச்சமிருந்ததை எடுத்துச் சாப்பிட்டேன்.அதைப் பார்த்துட்டு பெரியவா சிரிச்சா!… அப்புறம் வலியே இல்லே!……
தரிசனத்துக்கு வருபவர்களில் யாராவது, ‘தொண்டை,மூக்கு,காது,கண்-இப்படி,ஏதாவது ஆபரேஷன் பண்ணிக்கணும்.நல்லபடியா நடக்கணும்னு பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்’னு கேட்டால். “ஆபரேஷன் வேண்டாம்”னு பெரியவா சொல்லுவா. நோய் தானே சரியாய் போயிடும்! இப்படி ஏராளமான பேர்களுக்கு அனுக்ரஹம் பண்ணியிருக்கா.
என் வீட்டுப் பெண்-பிள்ளைகளுக்குக் கல்யாணம் செய்து வைத்ததே பெரியவா தான்.என்ன செலவாச்சுன்னு இன்றுவரை எனக்குத் தெரியாது .கன்னிகா தானமா ஏற்பாடு பண்ணினார். கோத்ரம் மட்டும் கேட்பார். நக்ஷத்திரம் கூடக் கேட்கிறதில்லே. ஜாதகமே இருக்காது!
பெரியவா வாக்கே, அருள் வாக்கு.
“உன் பொண்ணைக் கொடு; புள்ளையைக் கொடு”ன்னு சொல்றது மட்டுமில்லே, கல்யாணத் தேதியைக் கூடக் கொடுத்துடவா. ஸ்மார்த்தா-வடமா-பிரஹசரணம் இதுகளிலே என்ன பிரிவுன்னு கேட்டுப்பா.
ரொம்ப ஆனந்தமான காலம்