04/07/2020 4:35 AM
29 C
Chennai

ருஷி வாக்கியம் (67) – கர்ம சித்தாந்தத்தில் பிராரப்தம் என்றால் என்ன?.

Must Read

பஞ்சாங்கம் ஜூலை 04- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-04 *பஞ்சாங்கம் ~ஆனி ~20(04.07.2020) *சனிக்கிழமைவருடம்~...

ஸ்ரீரங்கம் கோவிலில்… பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் ஜூலை (3-7-2020)

விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக மீண்டும் ராஜேந்திர பாலாஜி!

விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் - அதிமுக அறிவிப்பு!

godmayknow ருஷி வாக்கியம் (67) – கர்ம சித்தாந்தத்தில் பிராரப்தம் என்றால் என்ன?.

“சர்வாணி கர்மாணி புராக்ருதானி சுபாசுபான்ய ஆத்மனோ யந்தி ஜந்தோ: !”

இது மகாபாரதத்தில் வியாச மகரிஷி கூறும் வாக்கியம். “நாம் செய்த முற்பிறவி வினைகளான புண்ணியம் பாவம் இவற்றையே சுகம் துக்கம் என்ற வடிவில் அனுபவித்து வருகிறோம்”.

இது இந்துக்களின் கலாச்சாரத்தில் உள்ள இன்றியமையாத வாக்கியம். இதனை கர்ம சித்தாந்தம் என்கிறோம்.

ஆனால் கர்ம சித்தாந்தம் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் சிலர் இது வீணான கொள்கை என்று கூறுவதுண்டு. ஆனால் இந்த பிரபஞ்சத்தில் ‘தி மோஸ்ட் சைன்டிஃபிக் தியரி’ என்று ஏதாவது இருக்குமென்றால் அது கர்ம சித்தாந்தமே!

செய்த வினைகளுக்குத் தவறாமல் பலன் உண்டு என்ற கருத்து எத்தனை உயர்ந்தது பாருங்கள்! ஆக்ஷன் அண்ட் ரியாக்ஷன் சித்தாந்தத்தின்படி பார்த்தாலும் ஒரு வேலை நடந்தால் கட்டாயம் பலன் இருக்கும் என்பதுதானே உண்மை!

rv1 8 ருஷி வாக்கியம் (67) – கர்ம சித்தாந்தத்தில் பிராரப்தம் என்றால் என்ன?.ஆனால் சில பணிகளுக்குச் செய்த உடனே பலன் கிடைக்காது. சிறிது காலம் தேவைப்படும். சில விதைகள் கூட விருட்சங்களின் வடிவில் பலனளிக்க சிறிது காலம் பிடிக்கும். அதே போல் செயல்களுக்குக் கூட பலனளிக்க சிறிது காலம் பிடிக்கும்.

இந்த உலகில் இந்த உடலால் நாம் செய்த கர்மாக்களின் பலனனைத்தையும் இதே உடலால் அனுபவித்து தீர்த்து விடுவோம் என்று கூற இயலாது. அதனை அனுபவிப்பதற்கு ஒரு ஜீவித காலம் போதாது. செயல்களைச் செய்வதற்கே சிலரது ஜீவிதங்கள் போதாமல் போகின்றன. பலனை எப்போது அனுபவிப்பது? ஆயுள் முடிந்து விடும். பலனை அனுபவிப்பதற்கு மற்றொரு பிறவி எடுக்க வேண்டும்.

பிறவிகளை எதற்காக எடுக்கிறோம்? நாம் செய்யும் செயல்களால்தான் என்பது ஒரு சிறந்த காரணம்! இதர பிற மதங்கள் எதுவும் இந்த கருத்தைக் கூறவில்லை. ‘இறைவன் தன் விருப்பத்திற்கேற்ப இந்த உலகைப் படைத்துள்ளான். நாம் கவனமாக வாழவேண்டும்’ என்றுதான் கூறுகிறார்களே தவிர இறைவன் எதனால் இவ்வாறு படைத்தான் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை.

சிலரைச் செல்வந்தராகவும் சிலரை ஏழையாகவும் சிலரை அழகாகவும் சிலரை விகாரமாகவும் எதற்காக இறைவன் படைக்கிறான்? காரணம் என்ன? இறைவன் தன் இஷ்டத்திற்கு அவ்வாறு படைத்தால் அது தீய செயலாகவே கருதப்படும்.

இறைவன் அவரவர் வினைகளை அனுசரித்து அந்தந்த ஜீவன்களைப் படைக்கிறான் என்ற சரியான காரணம் நம் சனாதன தர்மத்தில் காணப்படுகிறது. நாம் சுகமோ துயரமோ அனுபவிக்கிறோம் என்றால் இதுவரை செய்த புண்ணிய பாவங்களின் பலனால்தான் என்று அறிந்த உடனே மனதுக்கு ஒரு தைரியம் ஏற்படுகிறது. அது அளிக்கும் ஒரு சைகலாஜிக்கல் எஃபக்ட்… அந்த மானசீகமான பிரபாவம் மிகவும் உயர்ந்தது.

ஒரு சுகமோ துக்கமோ அனுபவிக்கும் போது இதுவரை நாம் செய்திருக்கும் புண்ணிய பாவங்களால்தான் என்பதை அறிந்து இனிமேல் சுகமாக வாழ வேண்டுமென்றால் நற்செயல்களையே செய்ய வேண்டும். வாழ்வில் துயரம் வரக்கூடாது என்றால் தவறான செயல்களைச் செய்யக்கூடாது என்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. சமுதாயத்தில் இதுபோன்ற கருத்து பரவும் போது யாரும் தவறு செய்யமாட்டார்கள். பிறருக்குப் பயன்படும் நற்செயல்களில் அனைவரும் ஈடுபடுவார்கள்.

பலப் பல நற்செயல்கள் நம் நாட்டில் புண்ணியத்தை ஆதாரமாகக் கொண்டே நடக்கின்றன. சத் கர்மாக்களைச் செய்தால் இறைவன் மகிழ்ந்து நற்பலனை அளிப்பான் என்ற நம்பிக்கை உள்ளது அல்லவா? அது எப்படிப்பட்ட மன நிம்மதியை அளிக்கும் என்றால் சக மனிதன் அந்த நற்செயலை அங்கீகரித்து பலன் அளிக்காவிட்டாலும் இறைவன் நற்பலனையும் சுகமான வாழ்க்கையும் அளிப்பான் என்ற நம்பிக்கையோடு நற்செயல்கள் செய்வதிலிருந்து பின் வாங்க மாட்டான்.

அதே போல் இங்கு கவனிக்க வேண்டிய இன்னொரு கருத்து உள்ளது. அனைத்தும் முற்பிறவிகளுக்கான பலன்களே என்றால் பின் இப்போது எதற்காக முயற்சி செய்ய வேண்டும்? என்று சிலர் கேட்பார்கள் அதாவது தெய்வமே அனைத்தையும் அளிக்கும் போது நம் பிரயத்தனம் எதற்காக என்பார்கள். இதனை நாம் பிராரப்தம், பிரயத்தனம் என்று இரண்டு அம்சங்களாக பிரித்துக் கொள்ளலாம்

பிராரப்தம் என்றால் இதுவரை செய்த வினைகளின் பலன். இதுவரை செய்த செயல்களின் பலனை தெய்வம் என்று கூறுவார்கள். தெய்வம் என்றால் இங்கு கடவுள், இறைவன் என்று பொருள் அல்ல. “தெய்வம் திஷ்டம் பாகதேயம் அதிர்ஷ்டம்” என்று கூறியுள்ளது போல முற்பிறவி வினைகளின் பலனுக்கு தெய்வம் என்று பெயர். தெய்வம் பொய்க்காது. அந்த தெய்வத்தை அனுசரித்தே அனைத்தும் நடக்கிறது. அதிர்ஷ்டம் என்றால் அ – த்ருஷ்டம். கண்ணுக்கு தெரியாதது என்று பொருள். அது பலனளித்தே தீரும். பின் அப்படி இருக்கையில் நம் முயற்சி எதற்கு? இதுவரை செய்த வினைகளே இப்போது பலன் வடிவில் வருகிறது. எனவே இப்போது மீண்டும் கர்மங்கள் செய்தால் அதன் பலன் எப்படியும் நம்மை வந்தடையும். அதனால் நற்செயல்கள் மட்டுமே செய்ய வேண்டும். இந்த சித்தாந்தம் கூறுவது பணிகள் வீணாவதில்லை, பலன் கிடைத்தே தீரும் என்ற கருத்தையே!

ஒருவேளை இந்த உடல் மறைந்து விட்டாலும் மற்றொரு உடலில் அது வந்து சேரும். ‘கர்மா பலனளிக்கும்’ என்ற உண்மைக் கூற்று கிடைக்கும்போது செயல்களைச் செய்வதில் ஊக்கம் கிடைக்கிறது.

கர்ம சித்தாந்தமே சமுதாயத்தில் உண்மையில் செயல் புரிவதற்கு தூண்டுகிறது. அதே சமயம் மானசீகமான நிவாரணமும் மன நிம்மதியும் கிடைக்கிறது. அதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு துக்கம் அனுபவிக்கும் போது பார்ப்பவர்கள் ஒரு வார்த்தை கூறுவார்கள். “ஐயோ! பாவம்!” என்பார்கள். இதனை நாம் அடிக்கடி கேட்கிறோம். ஐயோ பாவம் என்ற வார்த்தைக்கு இணையான சொல் உலகில் வேறு எந்த மொழியிலும் கிடைக்காது. ‘வாட் எ ஸின்’ என்று யாரும் கூற மாட்டார்கள். ஏதோ பாவச்செயல் செய்ததால் இப்போது அனுபவிக்கிறான் என்ற பாவனை அந்த ‘ஐயோ பாவம்’ இந்தக் கூற்றில் வெளிப்படுகிறது. உடனே அந்தக் கூற்றின் வழியே, “பாவத்தின் பலனை அனுபவிக்கிறாய்!” என்று அடுத்தவர் கூறுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தால் இனிமேல் பாவங்கள் செய்யாமல் இருக்க முடியும். அதே போல் துக்கத்தை பாவத்தின் பலனாக அனுபவிக்கிறோம். ஆதலால் பாவம் குறைந்து போகிறது என்ற திருப்தியும் ஏற்படுகிறது. அதை உணர்வது மிக நல்லது.

இன்னொரு விஷயம் நாம் கவனிக்க வேண்டும். பீஷ்மர் அது குறித்து மிக அற்புதமாகக் கூறியுள்ளார். “பிராரப்தம் என்று எப்போது அறிவது? பிரயத்தனத்தை எப்போது விடுவது?” என்ற கேள்விக்கு, “வந்த துக்கத்தை போக்கிக் கொள்வதற்கு நம் முயற்சியை நாம் செய்ய வேண்டும். அதை விடுத்து பிராரப்தத்தை அனுபவித்துத் தீர வேண்டுமல்லவா என்று சும்மா இருக்க கூடாது” என்கிறார்.

ஜுரம் வந்தால் தவறாமல் மருந்து சாப்பிட வேண்டும். ‘பூர்வ ஜென்ம பாவத்தின் பலனாக எனக்கு ஜுரம் வந்துள்ளது. அதனை அனுபவிப்பேன்’ என்று கூறக்கூடாது. கர்மங்களின் பலனை மணி, மந்திரம், ஒளஷதம், நற்செயல்கள் இவற்றின் பிரபாவத்தால் நீக்கி கொள்ள வேண்டும். தீய வினைகள் மூலம் வரும் முற்பிறவிப் பலன் வியாதி வடிவில் வந்தாலும் நம் முயற்சியால் அவற்றை விலக்கி கொள்ள வேண்டும். இதில் எந்த சந்தேகமும் இல்லை! இதையேதான் பீஷ்மர் கூறுகிறார்.

samavedam pic e1528682651403 ருஷி வாக்கியம் (67) – கர்ம சித்தாந்தத்தில் பிராரப்தம் என்றால் என்ன?.
பிரும்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா

சில வியாதிகள் வரும் என்று தெரிந்தால் முன்கூட்டியே மருந்துகள் எடுத்துக் கொண்டு அந்த வியாதியின் வயப்படாமல் காப்பாற்றப்படுவோம் அல்லவா? அதே போல் தீவினைப் பயனால் துயரம் ஏற்படாமல் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த ஜாக்கிரதையை ருஷிகள் தினசரிச் செயல்களின் வடிவில் நமக்கு அளித்துள்ளார்கள். விடியற்காலையில் விழித்தெழுவது, இறைவனைத் வழிபடுவது, பண்டிகை நாட்களில் விசேஷ பூஜைகள் செய்வது, தானம் வழங்குவது இவை அனைத்தும் எப்போதோ செய்த தீவினைப் பலன்களின் தீவிர தாக்கத்தை குறைக்க கூடியவை. அல்லது அவற்றை நம் அருகில் நெருங்கவிடாமல் பாதுகாக்கக் கூடியவை. அதேபோல் ஒருவேளை வேறு வழியில்லாமல் அனுபவித்துத் தீர வேண்டி இருந்தாலும் அதனை தாங்கிக் கொள்ளும் விவேகம், வைராக்கியம் ஏற்படும்படி செய்யக்கூடியவை.

எப்படி இருந்தாலும் பாவப் பலன்களை அனுபவிக்கும் சக்தியை அளிப்பதோடு அவற்றை வெற்றி காணும் உபாயங்களையும் கூட நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. மொத்தத்தில் கர்ம சித்தாந்தம் மிகவும் சிறப்பான கருத்துக்களைத் தெரிவிக்கிறது. அதேபோல் நல்வினை தீவினைப் பலன்களை சுகம் துக்கம் என்னும் வடிவங்களில் அனுபவித்து வந்தாலும் அவற்றால் வாடிப் போகாமலும் தைரியம் இழக்காமலும் இருப்பது என்பது இந்த கர்ம சித்தாந்தத்தை நன்றாக புரிந்து கொள்வதன் மூலம் கிடைக்கிறது.

அதன்மூலம் நாம் வாழ்க்கையில் உற்சாகத்தை இழக்காமல் ஸ்திரமாக நிலை நிற்க முடியும். எனவே கர்ம சித்தாந்தத்தை கவனமாகப் புரிந்து கொள்ள முடிந்தால் வெற்றிகரமான வாழ்க்கை வாழமுடியும்.

அப்படிப்பட்ட அற்புதமான கர்ம சித்தாந்தத்தைக் கொண்ட சனாதன ருஷி தர்மத்தில் பிறந்ததை பாக்கியமாகக் கருதுவோம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad ருஷி வாக்கியம் (67) – கர்ம சித்தாந்தத்தில் பிராரப்தம் என்றால் என்ன?.

பின் தொடர்க

17,874FansLike
78FollowersFollow
70FollowersFollow
900FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

ஆஹா சூப்பர் சுவிட்: போஹா செஞ்சு அசத்தலாம்!

போஹா என்பது ஒரு இனிப்பு பலகாரம் இது வட இந்தியாவில், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. இதனை பண்டிகைக் காலங்களில் செய்வார்கள்

சினிமா...

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

More Articles Like This