அவா உன்னைப் பார்க்க வந்தாளா? என்னைப் பார்க்க வந்தாளா?

“அவா, உன்னைப் பார்க்க வந்தாளா? ..என்னைப் பார்க்க வந்தாளா?…”
 
 
(ஒரு பகுதி) ஊழியர்களோடு பரிவும் மற்றும் இரண்டு ஸ்வாரஸ்ய சம்பவங்களும்).
 
சொன்னவர்-கண்ணையன் (மடம் சிப்பந்தி) (போகி) ………………………….(“போகி-பல்லக்கு தூக்கி”)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா,
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
 
நாங்க சாப்பிடுகிற நேரங்களிலே, மகாப் பெரியவங்க எங்களை சாப்பிட விட்டுட்டுச் சும்மா உட்கார்ந்திருப்பாங்க. நாங்க திரும்பி வந்ததும், சாப்ப்ட்டாச்சான்னு விசாரிப்பாங்க.
 
 
அப்போவெல்லாம் போகிகளுக்கு ஒரு நாளைக்குப் படி- ஆறு அணா. அது தவிர, குருவை நெல் அறுவடையில், நூறு கலம்;சம்பா அறுவடையில், நூறு கலம் நெல் கொடுப்பாங்க.இந்த ஏற்பாடு 1963 வரை நடைமுறையில் இருந்தது.
 
 
ஒரு தடவை (பக்தவத்சலம் முதலமைச்சரா இருந்த போது) கீழத் தஞ்சை புலவச்சேரிங்கிற இடத்திலேர்ந்து விடியற்காலை மூணு மணிக்குப் புறப்பட்டோம். காளையார் கோவில்லே, காம்ப். தூரம் எழுபத்தஞ்சு கிலோ மீட்டர்.
 
 
அங்கே போனதும், மகாப் பெரியவங்க, எங்க ஆளுங்களுக்கு குளிக்க வெந்நீர் போட்டுக் கொடுக்கும்படி உத்தரவு போட்டாங்க. பாவம் போகிக்கெல்லாம் தோள் வலிக்கும்’னு சொன்னாங்க. நாங்க நின்ன இடத்திலேர்ந்து, சுவாமிகள் காம்ப், ஒரு கிலோ மீட்டர் இருந்தது.
 
 
“நான் நடந்தே போறேன்”-ன்னு சொல்லி, நடந்தே போனாங்க. அங்கேயிருந்து மத்தியானம் மூணு மணிக்குக் கிளம்பி, சிவகங்கை போனோம். போனவுடனே, எங்களுக்கெல்லாம் ரெண்டு நாள் ரெஸ்ட் கொடுத்தாங்க.
 
 
“இவாளுக்கு ரொம்ப சிரமம்.வடை-பாயசத்தோடு சாப்பாடு போடு”-ன்னு உத்தரவு போட்டாங்க.(சொல்லும் போதே கண்ணையனின் கண்கள் உணர்ச்சி மிகுதியால் கலங்குகின்றன.
 
 
ஒரு நாள் காலை சுமாரா ஒன்பது மணி. வேதபுரி சாஸ்திரி, சுவாமிகளுக்குத் தொண்டு செய்திட்டிருந்தார். அப்போ சுவாமிகள் ஆசமனம் சங்கல்பம் செய்து ஜபம் பண்ணிட்டிருந்தாங்க. பட்டணத்திலேர்ந்து சில பேர் சுவாமிகளைப் பார்க்க வந்தாங்க. ‘இப்போ பார்க்க முடியாது’ன்னுட்டார், வேதபுரி. அவங்க போயிட்டாங்க.
 
 
பெரியவங்க கண்ணை முழிச்சதும் ‘பட்டணத்திலேர்ந்து வந்தவா, எங்கே?”ன்னு கேட்டார்.
 
 
“அவா போயிட்டா….”ன்னார், வேதபுரி.
 
 
“அவா, உன்னைப் பார்க்க வந்தாளா? ..என்னைப் பார்க்க வந்தாளா?…”
 
 
அப்போ நான் பக்கத்தில் இருந்தேன். “அவா பஸ்ஸ்டாண்டிலே நின்னுண்டிருப்பா, ..அழைச்சிண்டு வா”ன்னு பெரியவங்க சொன்னாங்க.
 
 
நான் ஓடிப்போய் விஷயத்தைச் சொன்னேன். அவங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம். வேகமா வந்து தரிசனம் பண்ணிட்டுப் பேசினாங்க …. மடத்துக்கு ஏதாவது காணிக்கை கொடுக்கணும்னு வேண்டிக்கிட்டாங்க.
 
 
அப்போ,பெரியவங்க, “போகிக்கு ஏதாவது உதவி செய்யுங்கோ”ன்னு சொன்னாங்க. எங்கமேல அவ்வளவு பிரியம்
.
 
நாப்பது வருஷத்துக்கு முன்னாடி இருக்கும். கொள்ளிடக்கரையிலே, மேனாவிலே தபஸ் பண்ணிட்டிருந்தாங்க பெரியவங்க. இருட்டு வேளை. மேனேஜர் வந்து மெள்ளக் கதவை நகர்த்தினார். சுவாமிகளைக் காணோம்! திடீர்ன்னு ஆயிடிச்சு! இரண்டு நிமிஷம் கழிச்சு, இருட்டிலேர்ந்து, ‘என்ன?’-ன்னு கேட்டுண்டே பெரியவங்க வர்ராங்க!..
 
 
“மகாசுவாமிகள் மேனாவிலிருந்து இறங்கிப் போனதை நீங்களெல்லாம் பார்க்கவில்லையா?”
 
 
“கடவுளே! அதுதானே, தெரியலே!.. கதவு, மூடியபடி தானே இருக்கு.
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...