ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் ருஷி வாக்கியம் (88) - கர்ப்பத்தில் இருக்கும் சிசு என்ன...

ருஷி வாக்கியம் (88) – கர்ப்பத்தில் இருக்கும் சிசு என்ன நினைக்கும்?

-

- Advertisment -

சினிமா:

ரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்?!

எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பாடகர் ஆகலாம். என்றா

லக்ஷ்மி ஸ்டோர்ஸ் பாக்கியலக்ஷ்மிக்கு கிடைச்ச பாக்கியம் என்ன தெரியுமா?

"கனா காதல்', "என் இனிய பொன் நிலாவே', "தோட்டாக்கள் பூவாச்சு', "ஏனோ வானிலை மாறுதே', "இவள் அழகு', "கூடல்', "ஆஸ் ஐயாம் சப்பரிங் ஃபிரம் காதல்' போன்ற குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இளையராஜாவே கைப்பட எழுதி… இசையமைத்து… பாடிக் கொடுத்த அந்தப் பாடல்… பொக்கிஷம்!

"அரண்மனை கிளி" - நான் உதவி இயக்குநராய் (clap asst) வேலை பார்த்த முதல் படம்...(வருடம் 1992)... அந்தப் படத்தின் பாடல்கள் நீங்கள் அறிந்ததே...
-Advertisement-

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

அவர் ஆதாரத்தைக் காட்டியிருக்கிறார். அதற்கு இதுவரை மறுப்பு சொல்லியிருக்கிறார்களா?

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆண்டாள் குறித்த சர்ச்சையில் கவிஞர் வைரமுத்துவுக்காக பேசியது.

பத்திரிகை சுதந்திரம் காக்கப்படும்: கருணா பாதையில் ஸ்டாலினும் இந்திரா பாதையில் ராகுலும் செல்வதனால்!

கருணாநிதியின் பாதையில் ஸ்டாலினும், இந்திரா காந்தியின் பாதையில் ராகுல் காந்தியும் நடந்து நடந்து ஜனநாயகம் காக்க, பத்ரிகை சுதந்திரம் காக்க போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அங்கே பள்ளிக்கட்டு… இங்கே பல்லக்காட்டு! வலைத்தளவாசிகளிடம் வறுபடும் ஓபிஎஸ்.,!

ஐயப்பனை பத்தி அசிங்கமா பெரியார் சொன்னத பாக்கதான் சபரிமலை போனாரா? வறுபடும் ஓபிஎஸ்.,!

ரவீந்திரநாத் குமார் மீது தாக்குதல்! அர்ஜுன் சம்பத் கண்டனம்!

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தாக்கப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்

தேவிபட்டினத்தில் அதிர்ச்சி! சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதிகள்!

தேவிபட்டினத்தில் 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் சதித்திட்டம் தீட்டியது அம்பலம் ஆகியுள்ளது.

பெரியாரை தூக்கி பிடிக்க நினைத்தால் அதிமுக., இந்து வாக்கு வங்கியை இழக்க நேரிடும்!

பெரியாரை தூக்கி பிடிக்க நினைத்தால் அதிமுக இந்து வாக்கு வங்கியை இழக்க நேரிடும்... என்றார்

தை அமாவாசை : புனித நீராடி முன்னோர் வழிபாட்டுக்கு குவியும் பக்தர்கள்!

இன்று (ஜன.,24) தை அமாவாசையை முன்னிட்டு நதிகள் மற்றும் கடலில் ஏராளமான மக்கள் புனித நீராடி, தங்களின் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்து நீத்தார் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

ரவீந்திரநாத் எம்.பி., மீது இஸ்லாமியர்கள் தாக்குதல்! இந்து தமிழர் கட்சி கண்டனம்!

தேசிய பாதுகாப்பு முகமை என்.ஐ.ஏ தேனி மாவட்டத்தில் கண்காணிப்பு செய்து, தேச விரோத கும்பலை கைது செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்

ரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்?!

எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

ஈவேரா.,வால்… அரைநூற்றாண்டுக் குமுறல்! நாளை ராமபிரான் படத்துக்கு ‘பூமாலை’ ஊர்வலம்!

1971இல் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் ரவுடி கும்பல்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, திமுக., ரவுடியிசத்தால் வாய்மூடி உள்ளம் குமுறியவர்கள்… அரை நூற்றாண்டு காலத்துக்குப் பின்னர் 2020ல்...

13 இந்திய மொழிகளில் வாட்ஸ் அப் செயலி! சொந்தமா உருவாக்க மத்திய அரசு முடிவு!

GIMS எனப்படும் இந்த அரசு துரித தகவல் சேவை செயலி தற்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

சேஞ்சுக்கு மட்டுமில்ல சுவைக்கும் சேமியா பகளாபாத்!

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி விழுது, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- Advertisement -
- Advertisement -


ருஷிகள் வேதத்திலும், வேதாந்தமான உபநிஷத்திலும் கூறியுள்ள விஞ்ஞானங்களைப் பார்க்கையில் ஆச்சரியம் ஏற்படுகிறது. சாசுவதமான சத்தியங்கள் பல காணப்படுகின்றன. முக்கியமாக ஜீவன் ஒரு உடலை எடுத்து சிறிது சிறிதாக வடிவம் கொண்டு ஒரு முழுமை அடைவது பற்றியும் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் நிலையில் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றியும் கூட விவரிப்பதை ருஷிகளின் நூல்களில் காணமுடிகிறது. இது ஆச்சரியத்தை அளிக்கும் விஞ்ஞானம்.

உபநிஷத்துகளில் ‘கர்போபபநிஷத்’ என்று ஒரு உபநிஷத் உள்ளது. கர்போபநிஷத் ஜீவனுடைய படிப்படியான நிலையை வர்ணிக்கிறது. ஜீவன் குமிழ் போன்ற நிலையிலிருந்து சம்பூர்ணமான மானுட வடிவத்தைப் பெறுகிறான். மானுடன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது எவ்வாறு இருப்பான் என்பதை வர்ணிக்கிறது கர்போபநிஷத்து.

அதுமட்டுமல்ல. இந்த கர்போபநிஷத்தின் கருத்துக்களே பலப்பல புராணங்களிலும் “பிண்டோத்பத்தி பிரகரணம்” என்ற பெயரில் விரிவாக கூறப்பட்டுள்ளன. இது அனைத்தும் வேதாந்த விசாரணைக்கு மிகவும் அவசியமான அம்சம். ஏனென்றால் இன்று நாம் இந்த உடலோடு விளங்குகிறோம். இந்த உடலுக்கும் முன்புள்ள வடிவம் என்ன என்பதை யோசித்துப் பார்த்தால்… ஜீவன் முதலில் பிந்து வடிவமெடுத்து அது தாயின் கர்பத்தில் ஒரு குமிழ் போல் தோன்றி, பின் பிண்டமாக மாறி, பின் கை கால் போன்ற உறுப்புகள் ஏற்பட்டு ஒரு வடிவம் கொண்டு அதன் பின் பூமியில் வந்து பிறக்கிறான். காலக்கிரமத்தில் வளர்ந்து பெரியவனாகி வயது முதிர்ந்து மரணிக்கிறான்.

அப்படியானால் நம் உண்மையான சொரூபம் என்ன? இதனை யோசித்து பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட தத்துவ விவேகத்திற்கு பயன்படுவது கர்போபநிஷத்திலும் வேதாந்த விசாரணையிலுமுள்ள ‘பிண்டோத்பத்தி பிரகரணம்’.

கர்போபநிஷத்தில் பல இரகசியங்கள் கூறப்பட்டுள்ளன. கர்ப்பத்தில் நாம் எப்படி இருந்தோம் என்பது பிறந்த பின் நினைவில் இருக்காது. நம் பால்யம் நமக்கு நிலையில் இருக்கும். ஆனால் நம் சிசு பிராயமும் அதேபோல் கர்ப்பத்தில் இருந்தபோது ஏற்பட்ட அவஸ்தைகளும் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை.

இதில் ஒரு ஆச்சர்யமான அம்சம் உள்ளது. ‘நான் தாயின் கர்ப்பத்திலிருந்து பிறக்கவில்லை!’ என்று யாருமே கூற முடியாது. தாயின் கர்ப்பத்தில் இருந்தோம் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். ஆனால் கர்ப்பத்தில் இருந்த விஷயம் எதுவுமே நினைவில் இருக்காது. அட! இப்போது நாம் ஒப்புக் கொண்டுள்ள கர்ப்பத்தில் இருந்தேன் என்ற விஷயமே நமக்கு நினைவில்லையே! கடந்து போன பிறவிகள் ஞாபகம் இல்லையாதலால் அவை இல்லை என்று எவ்வாறு கூற முடியும்? அதே போல் அதுவும் நினைவில் இல்லாத போதும் முற் பிறவிகள் உள்ளன என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.

அதேபோல் கர்ப்பத்தில் இருக்கும்போது அந்த ஜீவன் என்ன செய்துகொண்டிருப்பான் என்றால் கிரமமாக ஏழாவது மாதம் வந்தபின் அனைத்து அவயவங்களும் வேலை செய்யத் தொடங்கிவிடும். அப்போது, “பஞ்சாத்மக: சமர்த்த பஞ்சாத்மிகா சேதனா !” என்கிறார்.

அதாவது தாயின் கர்ப்பப் பையில் இருக்கும் ஜீவன் பஞ்சபூதங்களால் ஆனவனாக முழுமையாக பஞ்சேந்திரிய ஞானம் பெற்றிருப்பான். அந்த சமயத்தில் ஐம்புலன்களின் ஞானம் கொண்ட மனதால் யோசிக்கும் சக்தி கூட பெற்றிருப்பான். அப்படிப்பட்ட யோசிக்கும் திறனால், “மோக்ஷம் சிந்தயதி க்ஷரம் அக்ஷரம் !” அவன் நிலையானது எது? நிலையற்றது எது? என்பதைப் பற்றி யோசித்துப் பார்ப்பான். இந்த உடல், பிறவி… இவை அனைத்தும் வீண் என்று தெரிந்து கொள்வான்.

அது மட்டுமல்ல. அந்த சமயத்தில் அங்கு ஜீவன் ஒரு சிறப்பான ஆசனத்தில் இருப்பான். அது அவன் முயற்சித்துப் போட்ட யோகாசன முத்திரை அல்ல! கர்ப்பத்தில் இருக்கும்போது ஏழாவது மாதத்தில் ஜீவனுக்கு இயல்பாக வரும் ஒருவித யோகாசனம். அந்த ஆசனத்தில் இருக்கும் போது முற்பிறவி ஞாபகங்கள் அவனுக்கு ஏற்படும். சாமானியமான மனிதன் அப்படிப்பட்ட யோகாசனத்தை மீண்டும் பூமியில் வந்து பிறந்தவுடன் போட முடியாது. கர்ப்ப நிலையில் இருக்கும்போது அந்த யோகாசனம் தானாகவே வருகிறது. அப்படிப்பட்ட ஆசனத்தில் இருக்கும் போது பூர்வ ஜென்மங்கள் நினைவுவரும். எப்போது முற்பிறவிகள் ஞாபகம் வந்தனவோ அப்போது நான் யார்? எத்தனை உடல்கள் மாறியுள்ளேன்? உண்மையில் என் சொரூபம் என்ன? என்று சிந்திப்பான். அப்போது அவனுக்கு சாஸ்வதமான ஆத்மஸ்வரூபம் பற்றிய ஆலோசனை ஏற்பட்டு, “மோக்ஷம் சிந்தயதி” மோக்ஷம் பற்றி சிந்தனை செய்வான். அந்த சிந்தனை அந்த சமயத்தில் கர்ப்பத்தில் இருக்கும்போது மட்டுமே இருக்கும். ஆனால் வெளியில் வந்தபின் மானுடனுக்கு அந்த மோக்ஷ சிந்தனை துளியும் இன்றி வெளி விஷயங்களே உண்மை என்றெண்ணி அவற்றின் பின்னே சுற்றி வருவான்.

அதனால்தான் கர்போபநிஷத் நாம் கர்ப்பத்தில் இருக்கும் நிலையை ஞாபகப்படுத்துகிறது. அது நினைவுபடுத்தப்படுவதால் இப்போது அந்த ஞாபகத்தை அனுசரித்து நாம் சாதனையில் தீவிரமாக இறங்கி உய்வடைய வேண்டும்.

கர்ப்பத்தில் இருக்கும் ஜீவன் என்ன நினைப்பான் என்று கர்ப்போபநிஷத் கூறுகிறது.

“நானா யோனி சஹஸ்ராணி த்ருஷ்ட்வா சைவ ததோ மயா
ஆஹரா விவிதா புக்தா பீதாஸ் ச விவிதாஸ்தனா: !”

“நான் இப்போது வரை அநேகவிதமான பிறவிகள் எடுத்துள்ளேன். அனேகவித ஸ்த்ரீகளின் கர்பங்களில் இருந்து பிறந்துள்ளேன். அனேகவித தாய்மார்களிடம் தாய்ப்பால் அருந்தியுள்ளேன். அனேகவித உணவுகளை உண்டுள்ளேன்.”

“ஜாதஸ்யேவா ம்ருதஸ்யேவா ஜன்ம சைவ புனப் புன: !”

“பிறப்புகளும் இறப்புகளும் இப்போது வரை திரும்பத் திரும்ப நிறைய நடந்துள்ளன. அனைத்தையும் ஒன்று சேர்த்தால் வரும் ஒரே பெயர் என்னவென்றால், “அஹோ து:க்கோ ததௌ மக்ன: !” துக்கம் என்ற மகா சமுத்திரமே இந்த பிறப்பு இறப்பு என்னும் வாழ்க்கை எல்லாமும்!”

“நபஸ்யாமி ப்ரதிக்ரியம் !” ஒவ்வொரு ஜென்மத்திலும் பிறப்பதும், சாகும் வரை உயிர் வாழ்வதும், வாழும்போது சுகப்பட வேண்டும் என்று அலைந்து திரிவதும், கஷ்ட சுகங்களில் மூழ்கி எழுவதும்…. தவிர சாசுவதமான ஜனன மரண வடிவான துக்கத்தில் இருந்து வெளியே வருவதற்கான முயற்சியை ஒருவர் கூடச் செய்வதில்லை!”

“மேலும், இதனை யாருக்காக என்றெண்ணி நல்ல செயல் தீய செயல் அனைத்தையும் செய்தேனோ அவர்கள் யாருமே இங்கே இல்லை! இந்த கர்ப்பத்தில் ஜடராக்கினியின் வேதனையில் வருந்தியபடி நான் ஒருவனே உள்ளேன்!” என்று சிந்தனை செய்து வேதனையுருகிறான் கர்ப்பத்திலிருக்கும் ஜீவன்.

இதனைக் கொண்டு பிறருக்காக பாவ, புண்ணியங்கள் செய்தாலும் அனுபவிக்க வேண்டியது மட்டும் அவரவரே! யாருக்காக பாவ புண்ணியம் செய்தோமோ அவர்கள் யாரும் அதனைப் பகிரமாட்டார்கள். தான் தான் அனுபவிக்க வேண்டும் என்பதை அறியாலாம்.

“யன் மயா பரிஜனஸ்யார்தே க்ருதம் கர்ம சுபா சுபம்
ஏகாகீதேன தஹ்யாமி காதாஸ்தே பலபாதின: !”

“இப்போது நான் ஒருவனாகவே இந்த வேதனையை அனுபவிக்கிறேன்!” என்று சிந்தனை செய்து அப்போது ஒரு சத்தியம் செய்வான். அது என்னவென்றால், “இப்போது மட்டும் நான் இந்த கர்ப்பத்தில் இருந்து வெளியே வந்தால் உடனுக்குடன் செய்வது மீண்டும் சம்சாரத்தின் பக்கமோ விஷய சுகங்களில் பக்கமோ அலைந்து திரியாமல் சாங்கியம், யோகம் இவ்விரண்டையும் கடைபிடிப்பேன்!” என்று நினைத்துக் கொள்வான்.

“எதி யோன்யாம் ப்ரமுஞ்சாமி சாங்க்யம் யோகம் சாமாஸ்ரயே !
அசுபத் க்ஷய கர்தாரம் பல முக்தி ப்ரதாயகம் !”

இங்கு சாங்கியம் யோகம் என்ற இரண்டும் குறிப்பிடப்படுகின்றன. சாங்கியம் என்றால் “சம்யக் க்ஷாதம் சாங்கியம்” என்பது விளக்கம். சாங்க்யம் என்றால் ‘சம்பூர்ணமான ஆத்ம ஞானம்’ என்று பொருள். அதனைப் பெறுவதற்குச் செய்ய வேண்டிய சாதனை எதுவோ…. பிரம்ம ஞானத்தைப் புரிந்து கொள்வதற்குச் செய்ய வேண்டிய சாதனை எதுவோ… அதனை ‘யோகம்’ என்பார்கள். “இந்த யோகத்தையும் சாங்க்யத்தையும் நான் சரணடைந்து அக்ஷயமான மோக்ஷத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபடுவேன்! அவ்வாறின்றி மீண்டும் பிறப்பு இறப்பு என்பவற்றில் விழ மாட்டேன்! மீண்டும் அந்த ‘கர்ப்ப நரகம்’ வராமலிருக்க இந்த ஜென்மத்தை உய்வித்துக் கொள்வேன்!” என்று சத்தியம் செய்கிறான் ஜீவன்.

அதுவே “புனரபி ஜனனம்! புனரபி மரணம்! புனரபி ஜனனீ ஜடரே சயனம்!”. அந்த ‘ஜடர’ வேதனை மிகவும் கடுமையானதாக இருக்கும். மிகத் தீவிரமானதாக இருக்கும். ஆனால் வெளியில் வந்த பிறகு என்ன நிகழும் என்றால்,

“ஜாத மாத்ரஸ்து வைஷ்ணவேண வாயுனா ஸ்புர்ஷ்யா
ததா நத் ஸ்மரதி ஜன்ம மரணஞ்ச கர்ம சுபா சுபம் !”

வெளி உலகின் காற்று பட்டவுடன் அவன் கர்ப்பத்தில் சிசு நிலையில் இருந்தபோது என்ன சிந்தனை செய்தானோ அனைத்தையும் மறந்து போய் விடுவான். மீண்டும் வெளிப் பிரபஞ்சமே நிஜம் என்றெண்ணி மீண்டும் பிறப்பு இறப்பு என்னும் சக்கரத்தில் சுற்றிக் கொண்டிருப்பான். இது கர்போபநிஷத் கூறும் ஒரு அற்புதமான அம்சம்.

இதனை நினைவுபடுத்துவதற்காகவே நமக்கு சம்ஸ்காரங்கள் பலவற்றை ஏற்பாடு செய்துள்ளார்கள். முக்கியமாக தொப்புள் கொடியை வெட்டும்போது காதில் மந்திரம் கூறுவார்கள். ஜாதகர்மா. பிறகு நாமகர்மா. அதன்பிறகு சௌளம் எனப்படும் முடியிறக்குவது. அதன்பின் அக்ஷராப்யாஸம். அந்த நேரத்தில் ‘ஓம் நம:” என்று அக்ஷரங்களை எழுதச் சொல்வார்கள். இதில் கூறுவது என்னவென்றால், “ஓம்கார பரப்ரம்மமான யாரை நீ கர்ப்பத்தில் நினைவு கொண்டாயோ அந்த பரமாத்மாவை நினைவு படுத்திக்கொள்” என்பது இந்த சம்ஸ்காரத்தில் இருக்கும் தத்துவம். அதாவது வெளியுலக வாயுக்களின் பிரபாவத்தால் மறந்து போய்விட்ட சத்தியத்தை சம்ஸ்காரங்களில் வாயிலாக நினைவு படுத்துவார்கள்.

இந்த கர்போபநிஷத்தை ஒவ்வொருவரும் படித்தறிய வேண்டும் என்று பகவான் ஸ்ரீரமண மகரிஷி தெரிவித்துள்ளார். கர்போபநிஷத் உபநிஷத்துகளில் எல்லாம் முக்கியமானதாக கூறப்படுகிறது. இது ஜீவனின் எதார்த்த நிலையை எடுத்துரைக்கிறது.

ருஷிகள் அளித்துள்ள அற்புதமான இந்த விஞ்ஞானத்தின் மூலம் நாம் நம் நிஜ ரூபத்தை தெரிந்து கொள்வதற்கும் முக்திக்காக முயற்சிப்பதற்கும் இந்த பிறவியில் ஒரு கணம் கூட வீணாக்காமல் சாதனை செய்ய வேண்டும் என்ற ஊக்கம் ஏற்படும்! அத்தகைய ஞாபகத்தை அளித்துள்ள ருஷி வாக்கியங்களுக்கு வந்தனம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

- Advertisement -

1 COMMENT

-Advertisement-

Follow Dhinasari :

17,909FansLike
199FollowersFollow
749FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

சிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

ஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்!

கடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி கொழுக்கட்டை

உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும்
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |