December 6, 2024, 10:34 AM
27.2 C
Chennai

கோயிலில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழ மாலையை என்ன செய்வது?

“இந்த எலுமிச்சம் பழ மாலையை எடுத்துண்டு போய் ஆத்துல ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு போய் கொடுத்துடறியா…”

( ‘கோயிலில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழ மாலையை என்ன செய்வது? வீட்டில் உபயோகிக்கலாமா?’ என்ற கேள்விக்கு, பெரியவா மூலம் நடந்த ஒரு சம்பவம்.)

ஜி.நீலா, சென்னை

–நன்றி தீபம் – கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்

சமீபத்தில் ஒரு பத்திரிகையில், ‘கோயிலில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழ மாலையை என்ன செய்வது? வீட்டில் உபயோகிக்கலாமா?’ என்ற கேள்விக்கு, ‘கோயிலில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழ மாலையை பூஜையறையில் வைக்க வேண்டும். பழங்கள் கெட்டுவிட்டால், ஏதாவது மரத்தினடியிலோ ஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளிலோ போட்டுவிட வேண்டும். ஜூஸ் செய்தோ, ஊறுகாய் செய்தோ சாப்பிடக்கூடாது’ என்று பதிலளித்திருக்கிறார். இந்தப் பதிலை படித்ததும், எனக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

ALSO READ:  தீபாவளி பற்றி காஞ்சி மஹா பெரியவர் சொன்னவை!

என் தந்தைக்கு, ஸ்ரீகாஞ்சி மஹா ஸ்வாமிகள்தான் குலதெய்வமே. அவர் எங்கு முகாமிட்டிருந்தாலும், மாதம் ஒருமுறையாவது தரிசிக்காமல் இருக்கமாட்டார். (1952ஆம் ஆண்டு ‘வியாஸ பூஜை’ ஆடுதுறைக்கு அருகிலுள்ள சாத்தனூர் என்ற கிராமத்தில் (‘திருமூலர்’ சாத்தனூர் என்பார்கள்) எங்கள் கிரஹத்தில்தான் நடைபெற்றது! அநேக தடவைகள் எங்கள் கிராமத்தில் மகா பெரியவர் முகாமிட்டிருந்தாலும், அந்த முறை மூன்று மாதங்கள் இங்கு தங்கியிருந்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வழக்கம்போல் பெரியவாளை தரிசனம் செய்ய நினைத்தபோது, அவர் ஆந்திர மாநிலம் ‘ரேப்பள்ளி’யில் முகாமிட்டிருந்தார். ‘ரேப்பள்ளி’க்கு நானும் என் தந்தையுடன் சென்று ஸ்ரீபெரியவரையும், ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் பூஜையையும் இரண்டு நாள் தங்கி தரிசனம் செய்தோம்.

மூன்றாவது நாள் என் தந்தை வந்தனம் செய்து, ‘அப்ப நான் உத்தரவு வாங்கிக்கொள்ளட்டுமா…” என்று பெரியவாளிடம் உத்தரவுக்காக பணிந்து நின்றார். உடன் அவர், “ஊருக்குத்தானே நேரே போகிறாய்…” என்றார். “ஆமாம்” என்று என் தந்தை கூறவும், தன் கழுத்திலிருந்த எலுமிச்சம் பழ மாலையை கழட்டி என் தந்தையிடம் கொடுத்து, இன்னும் ஒரு மாலையையும் கொடுத்து, “இதை எடுத்துண்டு போய் ஆத்துல ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு போய் கொடுத்துடறியா…” என்றார்.

ALSO READ:  தீபாவளி பற்றி காஞ்சி மஹா பெரியவர் சொன்னவை!

என் தந்தை உடனே “பெரியவா உத்தரவு” என்றபடி மாலைகளை பெற்றுக்கொண்டு, சென்னையில் கூட தங்காமல் சாத்தனூர் வந்து ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு கொடுத்தார்! எலுமிச்சம் பழ மாலையைப் பார்க்கும் போதெல்லாம், பெரியவாளின் கருணை முகம்தான் பளிச்சிடும்!

author avatar
வரகூரான் நாராயணன்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.02 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் டிச.01 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: டிச.01ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம||श्री:|| !!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்!!ஸ்ரீ:!!श्री:श्रीमते...