October 16, 2021, 7:31 am
More

  ARTICLE - SECTIONS

  “தனுஷ்கோடி புயல் வருவதற்கு முன் எச்சரிக்கை கொடுத்த பெரியவா”

  “தனுஷ்கோடி புயல் வருவதற்கு முன் எச்சரிக்கை கொடுத்த பெரியவா” மற்றும் பல மாதங்களாக பெரியவா உத்தரவுப்படி அங்கு சேகரித்து வைக்கப்பட்ட 250 மூட்டை அரிசி யும்) (இரண்டு சம்பவங்கள் இணைந்த கட்டுரை)
   
  ( அப்போதைய முதன் மந்திரி திரு.எம்.பக்தவத்ஸலத்துக்கு சொன்ன அறிவுரையும்-250 மூட்டை அரிசியும்) (இதில் ஒரு பகுதி நேற்று சாய் டி.வி.யில் 26-11-2018 காலை திரு கணேச சர்மாவும் அற்புதமாக சொன்னார்)
   
  கட்டுரை-1
  யார், பக்த வத்ஸலர்?12509614 1102529786458852 1440235304742122547 n - 1
   
  சொன்னவர்-வி.ஸ்ரீநிவாஸன்,சென்னை.
  தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
  தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
   
  1964-ம் ஆண்டு,ஸ்ரீமடம் காரைக்குடியில் முகாம். அப்போதைய முதன் மந்திரி திரு.எம்.பக்தவத்ஸலம் பெரியவா தரிசனத்துக்கு வந்தார்.
   
  “ராமேஸ்வரத்துக்குப் பக்கத்திலே தனுஷ்கோடின்னு க்ஷேத்ரம் இருக்கு, கேள்விப்பட்டிருக்கியோ? நீ, உடனே உத்திரவு போட்டு அந்தக் கிராம மக்களையெல்லாம் சாமான்-செட்டோட, வீடுகளைக் காலி பண்ணிண்டு வெளியே போகச் சொல்லு, உன் ராஜாங்க சாமான்களையெல்லாம் எடுத்து-
  தூரத்துக்குக் கொண்டுபோய்,பத்திரமா வைக்கச் சொல்லு..”
   
  “ஏன் இப்படி அவசர உத்திரவு?” என்று திரு ஸ்ரீ பக்தவத்ஸலம் கேட்க வேண்டுமே ? கேட்கவில்லை!
   
  ஆமாம், ஏனெனில், அது முக்காலும் உணர்ந்த மாமுனிவரின் திருவாயிலிருந்து வெளிப்போந்த ஆணை.
   
  காரணம் கேட்டோ,தெரிந்து கொண்டோ எதுவும் ஆகிவிடப் போவதில்லை. ஆனால்-காரணம்- வலுவான காரணம்-இருக்கவே செய்யும்.!
   
  இருந்தது!
   
  அசுரவேகத்தில் புயல்,கொட்டோ கொட்டென்று மழை, கடல் கொந்தளிப்பு….
   
  ….பெரியவா, தனுஷ்கோடியைக் காலி பண்ணச் சொன்ன ஏழெட்டு நாட்களில்!
   
  யார், பக்த வத்ஸலர்?- காவிக் கதரா? வெள்ளைக் கதரா?
   
  ……………………………………………………………………………………………………………………………………………
   
  கட்டுரை-2
   
  ராமேஸ்வரம் – அரிசி சேமிக்க ஆணை
   
  1964 வருஷ ஆரம்பத்திலேயே மடத்துக்கு அரிசி மூட்டை உபயமளிப்பவர்களை, ராமேஸ்வரத்திலுள்ள நமது மடத்துக்கு அதனை அனுப்பும்படியாக பெரியவா கட்டளையிட்டு வந்தார்கள்.எதற்க்காக இப்படி அங்கே ஏகமாக ஸ்டாக் செய்ய சொல்கிறார் என்று மடத்து மானேஜருக்கு புரியவில்லை. இது விஷயமாக அவருக்கு பெரியவாளிடம் மனஸ்தாபமே வந்து விடுமோ எனும்படியான சந்தர்பங்கள் ஏற்பட்டதுண்டு. அனாலும் பெரியவா ஒரே பிடிவாதமாக கால் ஆயிரம் மூட்டைகளை ராம…ேஸ்வரத்தில் சேர்க்க செய்தார்.
   
  அவ்வாண்டு டிசெம்பர் கடைசியில் ராமேஸ்வரத்தில் கடும் புயல் வீசிற்று, பாம்பன் பாலம் தகர்ந்தது. தனுஷ்கோடி மூழ்கியது. கடலின் கொந்தளிப்பை மீறி ராமேஸ்வரத்திற்கு உணவு பண்டம் அனுப்புவது இயலாத காரியமாயிற்று.
   
  இந்த பயங்கர சூழலில், ராமேஸ்வரத்தில் சிக்கி கொண்ட ஆயிரமாயிரம் உதரம் நிறைய உதவி பண்ணியது….ஆம்……பல மாதங்களாக பெரியவா உத்தரவுப்படி அங்கு சேகரித்து வைக்கப்பட்ட 250 மூட்டை அரிசிதான்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,142FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,560FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-