“எனக்கு கொடுக்கணும்னு கொண்டு வந்ததை …………………கொடுக்காம போறயே ”
( “இங்கே நிறைய ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, திராட்சைன்னு பல பழங்கள் கொண்டு வந்து தரா நான் சாதாரண நெல்லிக்கனியை பகவானுக்கு தர்றதா அதனாலே தான் கொண்டு வந்ததை எடுத்துண்டு போன பக்தர்)
மகாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளும் ஒருவர் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர் மகானின் அருகில் சற்று எட்ட அமர்ந்து வேதபாராயணம் செய்து கொண்டு இருப்பவர் இப்போது அவருக்கு வயது என்பத்தைந்துக்கு மேல் இருக்கலாம்
பலவருடங்களுக்கு முன்னாள் மகானின் அருகே அமர்ந்து சாமவேதத்தை பாராயணம் செய்து கொண்டு இருந்தார் மகான் வழக்கம் போல் பக்தர்களுக்கு ஆசியும் பிரசாதமும் வழங்கிக் கொண்டு இருந்த நேரம். பக்தர்களின் வரிசை மெதுவாக நகர்ந்தது, அப்போது ஒரு பக்தர் கையில் ஒரு சிறிய பையுடன் வரிசையில் நின்று கொண்டு இருந்தார் அவரது முறை வந்தபோது மகானிடம் ஆசிபெற்று பிரசாதத்தை வாங்கிக் கொண்டு அவர் நகர முயற்சித்த போது பெரியவரின் குரல் அவரை நிறுத்தியது
“எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடுக்காம போறயே ”
பக்தர் திடுக்கிட்டு நின்றார். அவரது கையில் இருந்த பையில் நெல்லிக்கனிகள் அவரது தோட்டத்தில் விளைந்த முதல் கனிகள் அவை மகானுக்கு கொடுக்கவே அவர் கொண்டு வந்தார்.
“இங்கே நிறைய ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, திராட்சைன்னு பல பழங்கள் கொண்டு வந்து தரா நான் சாதாரண நெல்லிக்கனியை பகவானுக்கு தர்றதா அதனாலே தான் கொண்டு வந்ததை எடுத்துண்டு போறேன் …”.
ஒரு மூங்கில் தட்டை காண்பித்து “நீ கொண்டு வந்ததை எடுத்துவை” என்று மகான் உத்தரவிட பக்தர் தன் பையில் இருந்த நெல்லிக்கனிகளை எடுத்து தட்டில் பக்தியோடு வைத்தார்.
கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளுக்கு ஒரே வியப்பு பக்தர் நெல்லிக்கனிதான் கொண்டுவந்திருக்கிறார் என்று மகானுக்கு எப்படித் தெரியும்?
அன்று துவாதசி மகான் அக்கனியை விரும்பி ஏற்றுக் கொண்டதன் காரணம் இப்போது கனபாடிகளுக்கு புரிந்தது .
சங்கரருக்கு ஒரு நெல்லிக்கனியைக் கொடுத்தபோது அவர் வாயிலிருந்து அப்போதே கனகதாரா ஸ்தோத்திரம் கிளம்பியது இப்போது இவ்வளவு கனிகளை மகானுக்கு சமர்பித்த அந்த பக்தர் எந்த அளவுக்கு உணர்ந்திருப்பார் என்று கனபாடிகள் வியந்தார்.
அண்மையில், மகான் நெல்லிக்கனி பெற்ற விவரத்தை கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள், சேலம் பெரியவாகிரகத்தைச் சேர்ந்த ராஜகோபாலிடம் சொன்னார். துவாதசியன்று நெல்லிக்கனியை உண்பது எவ்வளவு விசேடமானது என்பதை மகான் புரிய வைத்திருக்கிறார்.